Saturday, July 28, 2012

காத்திருப்பேன்
என்று வருவாய்
எழுதாத உன் காதலை
ஏழை என் இதழ்வழி
என்று எழுதி செல்வாய்
அணையாத அன்போடு
அளவில்லா ஆசைகளோடு
அணுவிலும் உன் துடிப்போடு
உன் அணைப்புக்காக காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன் ..என்று முடிமோ ...
உன் நினைவில்
ஆடிகொண்டிருகிறது
என் இதயம்
கனமாக கனக்கும்
மணித்துளிகள்
கலையாது இருக்கும்
உன் நினைவுக் கோலங்கள்
உன் கரம் சேர துடிக்கும்
என் ஆசை மேகங்கள்
கருக்கொண்டு பொழிகிறது....
உன்னை சேராமலே
உறைந்துகொண்டிருகின்றேன் நான்
முடிவில்லாத என் வேதனை
என்று முடிமோ ...

வந்துவிடு ..

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயரில் கலந்த உறவே ....
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்
கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு ....
கனவாய் போன
காதல் உறவின்
கதைகள் சொல்ல வந்துவிடு ....
உன்னை காண ஏங்கும்
கண்கள் அதற்க்கு
கண நேர சுகத்தை தந்துவிடு ..Friday, July 27, 2012

தனிமை...

நகரும் மணித்துளிகள்
நரகமாய் கனக்கிறது
உன்னை அழைக்க
ஒவொரு கணமும்
என் உயிர்வரை துடிக்கிறது
உணர்வுகள் தடுக்கிறது ..
கலைந்து போகும் மேகங்களே
என் காதலும் உங்களை போல்தானோ
தேவைக்கு மட்டும் கூடி பிரிகிறதே
தனிமையை தவிர்க்க
தத்தளிக்கிறேன் ...
உன் நினைவுச்சுழல்
என் உயிர் வரை உருவும் பொழுது ....
நினைவுகள் ....இன்று என் நினைவு
அற்றுபோய் இருக்கலாம்
என்றோ ஒரு நாள்
என் நினைவுகள்
உன்னை தழுவும் போது ..
அந்த தருணத்திலும்
உன்னை நேசித்து கொண்டிருப்பேன்


நீதொலைவாய் நீ
தொலைகிறேன் நான்
தொடரும் உன் நினைவுகள்
தவிக்கிறேன் நான்
எத்தனை ஆசை
எத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
அத்தனையும் புதைத்து விட்டாய்
அந்தஹாரமாய் என் மனம்
அமைதி இழந்து தவிக்கையில்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ..?
ஒஹ் நீதான் என்னை காதலிக்கவில்லையே ..உன் மடி சாய்ந்து
அன்பே
அணு அணுவாய்
உன்னை நேசித்தவள் நான்
அனுதினம் உன்னை பூஜித்தவள்
அடங்காத ஆசைகளை ஜாசித்தவள்..
இன்று அடுத்து என்னவென்று
தெரியாத ஏக்கம் என்னுள்
இனம் புரியாத தவிப்புகள் உள்ளுள்
என் இதயத்து ஆசை எல்லாம்
ஒரு தடவையாவது
உன் மடி சாய்ந்து
என் மரணத்தை நேசிப்பதுதான் ...Thursday, July 26, 2012

தேடி ..

நீ போனாலும்
உன் நினைவை சுமக்கும்
என் இதயம்
நம் பயணத்தில்
உன் பயணம் முடிந்து விட்டது
என் பயணம் தொடர்கின்றது
உன் நினைவுகளின் எல்லைகளை தேடி ..

பாத கொலுசு ...

கரும் பச்சை இலை மீறி
தரும் மஞ்சள் தண்டு கொண்டு
மலர் மஞ்சள் தாமரை பாதம்
மண் பட்டால் நோகும் என்று
மனம் பதைத்து போகுதடி ...

நல் முத்து வர்ணம் கொண்டு
நன்று செழித்த உன் பாதம் கண்டு
நாளடைவில் செழித்து வளர்ந்த
மேனி காண நெஞ்சு துடிகுமடி ...

வெண் சங்கில் முத்தாரம் போல்
உன் தந்த காலில் ஓர் ஆரம்
நீ தளிர் நடை போடும் போதெல்லாம்
உன் நளினத்தை பறை சாற்றுமடி ..
உன் பாத கொலுசாக என் நெஞ்சும் ஏங்குமடி..

உன் பாதம் தான் தாங்க
மலரெல்லாம் தவம் பண்ணுதடி
மலர்வனமே நீ என்று
மனம் சோர்ந்து போகுமடி
உன் பாதம் பட்ட நீர் பட்டால்
பன்னீர் துளி என்று தாங்குமடி ..

உன் பாதம் கண்ட நீரெல்லாம்
எனக்கு பன்னீர் துளி ஆனதடி
தேவர் வாழ அமுதம் பால் கடல் அடி
இந்த தேவன் வாழ அமுதம்
உன் பாதக் காலடி ...

நீராடும் உன் பாதம் கண்டு
கள்ளுண்ட மந்தியாகி
மதி மயங்கி மனம் தேம்புதடி
மலரே உன் பாதம் தாங்கி
மணி மெட்டி போடும்
நாளுக்காய் மனம்
மயக்கம் கொள்ளுதடி ..

என்ன பார்க்கிறாய்
எனக்காக நீ படித்த காதல் வார்த்தைகள்
என் உணர்விலே கலந்த மூச்சுக்கள்
காற்றோடு காற்றாகி கண்ணீராய் ஆனதடா
உன்னை தேடி என் பாதம்
காடு மேடெல்லாம் அலையுதடா..
உன்னை தேடும் என் பாதம்
உணர்விழந்து போனாலும்
உனக்காக என் பாத கொலுசு
ஒலித்துகொண்டிருக்கும்
உயிருள்ளவரை உன்னை தேடி ...

Monday, July 23, 2012

வழியாய் வந்துவிடு

என் இதயத்தின்
வலி அதிகரிக்கிறது
நீ இல்லாத பொழுதுகளில்
என் வழியில் வந்து
வலியை தந்தவனே
என் வலியை போக்க
வழியாய் வந்துவிடு
உன்னை இழந்தும்
துடிக்கிறது இதயம்
உன் நினைவுகளை
சுமப்பதினால் ...Sunday, July 22, 2012

என் எண்ணப் பக்கங்கள்
என் எண்ணப் பக்கங்கள்
உன் நினைவுகளால் மட்டுமே
புரட்ட படுகின்றது ...
நீ இல்லாத பொழுதை
என் இதயசுமையை
எனக்காக பாதி சுமக்கும்
என் கவிதை பதிவுகளே
என் கண்ணீரின் சுமைகளை
கண நேரம் தாங்கி கொள்ளுங்கள்
என் காதலன் வரும் நேரம்
என் கண்ணீர்
அவனிடம் என் மேல்
கழிவிரக்கத்தை
ஏற்படுத்திட கூடாது ......முட்களாய் ......
உன்னை தேடிய
என் பயணமெல்லாம்
முடிவில்லாத பாதைகளில் தொடர
முடிந்தும்
முடியாமல் என் காதல்
முட்களாய் ......


Thursday, July 19, 2012

அலைஅந்தி மாலை
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....


சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...


அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு 
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய்
..


Sunday, July 15, 2012

ஏன் ...?

 
 
 
ஏன் ...?
எதுவும் புரியவில்லை ..
உனக்காக சுவாசித்தேன்
உன்னையே நேசித்தேன்
இருந்தும் ..
என் மீது ஏன் வெறுப்பு கொள்கிறாய் ...
என் இரவுகள் விடிவதில்லை
உன் உறவுகள் தொடராத போது..
என் உணர்வுகள்
உணர்வதே இல்லை
உன் உதடுகள் தீண்டாத போது ...
என் கனவுக்கு அழைப்பு விடுத்தவனே
காலனுக்கும் அழைப்பு விடு
உன் காதலி துயில் கொள்ள ...
 
 
 

எண்ண சிறகு
 
நீ இல்லாத தனிமைகளில்
உன் நினைவுகளில்தான்
றெக்கை முளைகின்றது
என் எண்ண சிறகடித்து
உன்னை சேர ..
என் தனிமைகளின்
சோகங்களை சொல்ல
எண்ண சிறகுகளே
வண்ண சிறகுகளாய்
உன்னை தேடி ....
 
 
 

காத்திருப்பேன்

 
 
உன் நினைவு சிதறல்களை
கவிதையாக்கி
என் கண்ணீர் துளிகளை
பேனாக்கு மையாக்கி
உன் அலட்சியங்களை
அதில் புதைத்து
அன்பே உனக்காய்
அதில் உறங்கி காத்திருப்பேன்
என்றும் உன்னவளாய் ....
 
 
 
 
 

Friday, July 13, 2012

காதல் பரிசு ..

அங்கம் உரச
அணுவும் தீ பற்ற
அணு அணுவாய் ஆகிரமித்தாய்
அழகாய் அன்றலர்ந்த தாமரையாய்
உன் கையில் அவள் ...
உன் வேட்கை தீக்கங்குகள்
விரகமாய் பற்றி கொள்ள
விரசமாய் விரகமாய்
உன் தீண்டல் எல்லை மீறி
சுகத்தின் எல்லையை தேட
மோகத் தீயில் முழுவதுமாய் அவள்
முனகலோடு உன்னை அழைக்க
முழுவதுமாய் ஒன்றிவிட்டாய்..
உன்னை நேசிக்கும் ஓர் இதயம்
ஓரமாய் உக்கார்ந்து
உலகமே அழிவதாய்
ஒப்பாரி வைப்பது தெரிந்தும் புறக்கணித்து ...நீ தொடர
தனக்கே சொந்தமான ஒன்று
தன் கண் முன்னே கலைவது கண்டு
தன் இயலாமை எண்ணி
கண் மடல் வழி வழிந்த உப்பு துளிகள்
உறக்கத்தை கலைத்தபோது
தெரிந்து கொண்டேன்
கண்டது கனவென்று ..
கனவில் கூட என்னை கண் கலங்க வைக்கும்
உன் கல்நெஞ்சு
காலத்துக்கும் எனக்கு பரிசு
காதல் பரிசு ..


Tuesday, July 3, 2012

என் கால்கள்பசுமையாய் இருந்த
என் காதல் வனம்
புயல் அடித்த பூவனமாய் போனது
காடுகள் மேடுகள் தாண்டியும்
உன்னை தேடி என் கால்கள்
நகர்ந்து கொண்டே இருக்கிறது ..
உன்னை வெறுத்துவிட துடிக்கிறேன்
என்னை இறப்பு தழுவுமானால்

நினைவுகளுடன்

என் உணர்வுகளின்
ஒவொரு அணுவும்
உனக்காக ஏங்குகின்றது ...
உன் தீண்டலுக்காய்
உன் வாசத்தை சுவாசிக்கும்
தருணங்கள் வாய்க்குமோ
என் தேசத்திலும்
சில பூக்கள் பூத்திடுமோ..
அன்பே உன்னை நீங்கினாலும்
உணர்வால் நீங்காத உன்னவள் ..
உன் நினைவுகளுடன் ...

நினைவுகள் என்னுள் வாழும் ..

உன்னால் ஒதுக்கப் பட்டவள்
உன்னை விலகி செல்கிறேன்
உன்னை மட்டுமே விலகி செல்கிறேன்
உன் நினைவுகளை அல்ல ..
தொலைவினிலே நீ இருந்தாலும்
தொலையாது உன் நினைவுகள் என்னுள் வாழும் ..