Saturday, December 28, 2013

பந்தம்...


****

இந்த இரவின் நீட்சியில்
உன் இன்மைகள்
வெறுமையை
விதைத்து செல்கிறது ...

எழுதப்படாத
ஒரு கற்பனை சித்திரம்
வண்ணமிழந்து
கருக்குலைந்து கலைகிறது

உன் அருகாமைக்காக
அலைகின்ற
மனக்கரங்களின் பிடியில்
உவப்பானதாய்
எதுவுமே அகப்படுவதாயில்லை ...

மழிக்கப்படாத
உன் இருநாள் முக முடியின்
கறுகறுத்த உரசல்களுக்காய்
தவமிருந்து சலித்த உதடுகள்
உரக்க சாபமிட்டுக் கொள்கிறது
முத்த அத்தியாயம்
முடிவடைந்து போனதாம் ...

ஏக்கங்கள்
எண்ணிலடங்கா தாபங்கள்
எழுத முடியா கற்பனைகள்
விசும்பி அழுகிறது
தனிமைகளுடன் இணங்க மறுத்து ...
இருந்தும்
தனிமைக்கும் எனக்குமான பந்தம்
மிக நெருங்கியதாகவே இருக்கிறது ..

மலர் இதழ்கள்..


****

இரவு நேரத்து மின் மினிகள் என
மினு மினுத்து சிரிக்கிறது
என் மீதான உன் அன்பு ....
அடங்காத காதலுக்குள்
அமிழ்ந்துவிட்ட மோக முட்கள்
ஒவோன்றின் மேலும்
ஊசிமுனைத் தவம் செய்கிறது மனம் ...

கழல் தீண்டும்
கரிய தேக்குகள் என
மினு மினுத்த கரம் தன்னில்
சிக்கிய கால்கள் இரண்டும்
உன் கைக்கியைவாய்
நர்த்தனம் ஆடுவது விந்தை ...

கொடியை படர்ந்த அரியென
பிடரிக் குழல் நுழைந்து
கோதி இழுக்கும்
விரகம் பகிர்ந்து நிமிர்ந்து
திமிறும் கட்டுடல்
களைந்து சிதறும்
உப்புநீர் சுவைக்கும்
ஒரு மலர் ....

திண்ணிய மெல் மலை படர்ந்து
ஊறும் அமுது துளைந்து
அருவி மருவும்
கள்ளேன போதை ஏறும்
கருவிழி கலந்து காமுறும் ..

இதழ் மடல் கவிழ்ந்து மூடி
இருதயம் இழுத்துப் பூட்டி
குடத்தினுள் ஏற்றும்
குறுகிய ஒளியென
பற்கள் இடையிடை ஒளிர்ந்து
இன்ப லகரியை
இதழில் மீட்டும் ...

கதவுகள் திறந்து கொள்ள
காமனின் வரவு கூறி
காற்றினில் மிதக்கும் சுகந்தம்
களம் காண விளைகின்ற ஏக்கம்
இதுகாறும் கடந்த மென்மை
இலையென்று உரைத்துடைத்து
மடை திறக்கும் ....
மலர் இதழ்கள் .....

கனவுகள் மீள...


****

உனக்காக கழிந்த
ஒவ்வொரு நிமிடத்தின்
உருகிய மனத் துளிகள்
மணித்துளியின் இறுதியில்
மதிப்பிழந்து போனது ஏன் ... ?

கடக்கின்ற காற்றை கேட்டேன்
தழுவிச் செல்லும் தென்றலை கேட்டேன்
மனதில் வீசும் புயல்
மருந்தளவேனும் தெரிகிறதா ?
சுழலில் சிக்கி
அசையாமல் அமர்ந்து சிரிக்கும்
அவன் புன்னகை
அணுவேனும் கலைகிறதா ?

உதட்டுக்கும் மனதுக்கும்
அணுவேனும் சமந்தமுண்டோ
மனதின் வலிகள் எதுவும்
உதட்டில் தெரிவதில்லை ..
உதடுகள் உதிர்த்த சொல்
உள்ளத்தை கிழிக்காமல் இல்லை ...

மங்கி விட்ட மாலை வெயிலில்
மறைந்துவிட்ட உன்
வரவு என்னுள் எழுதிச் செல்கிறது
வருங்கால வசந்தம்
மலர்கள் உதிர்க்கும்
மரக் கிளை என்று ..

கடந்த கால கவலைகள் பெரிதா
நிகழ கால நினைவுகள் இனிதா
எதிர்கால ஏக்கங்கள் எனதா
உள்ளத் தவிப்பு எழுதும்
உருக்கமான மடல் திறந்து
கன்னக் குழி நிரப்பும்
கனிவான முத்தமொன்று பகிர்ந்துவிடு ...
கனவுகள் மீள ...

திறக்காத உதடுகள் ...





உன்னை தாண்டும் தென்றல் என
உன் வாசம் சுமக்கிறது என் சுவாசம்
வரைந்து வைத்த ஓவியமென
நெஞ்சத்தில்
புனைந்து வைத்தகாவியம் நீ
வெகு தூரத்தில் இருப்பினும்
உன்னை விலகாது
நுகரும்
நினைவுப்பசி ...

புகழ் பெற்ற ஓவியர்கள்
தீட்டிய களங்கமற்ற ஓவியம்போன்ற
உன் வரிவடிவில்
வாழ்ந்துவிட துடிக்கிறது
ஒரு நிமிடம்
சிறகடிக்கும் இருதயப்பறவை ...

வண்டுகள் நுகரா மொட்டென
மலர மறுக்கும்
உன் இதழ்க் கடையில்
வழியும் அமுத மொழியில்
சிறகுலர்த்த தவிக்கிறது
இதுகாறும்
இன்மைஎனும்
வெம்மையில் குளித்த மனப்பறவை ...

திறக்காத உதடுகள் திறக்கும்
என்றோ ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில் ...
அதைக் காண அன்று
திறக்காமல் போகலாம்
இமைக் கதவு ...

முத்தச் சுவை ...


கனவுகள் சுமக்கின்ற
அதிகாலைகள் பூக்கின்றன
நினைவு மலர்களை ,
இதழ் சிந்தும்
சிறு துளி நீரில்
மலரின்
ஏக்கம் கலந்து சிதறும் ..

அவிழாத மொட்டின்
அவிழ்தளுக்காக
ஆங்காங்கே ரீங்காரமிடும்
வண்டுகளின் சத்தம்
மலர் மௌனம் கலைக்கும் ...

பிரியாத இருள் களைந்து
மெல்ல விடிகாலை
ஆடையுடுத்தும்
பச்சை பகலவள்
மேனியெங்கும்
ஒளிரும் வைரமென
மிளிரும் பனித்துளி...

செந்தாள் சந்தனமென
குழைத்து மேனியெங்கும்
மிளிரும் மஞ்சள்
வர்ணம் விரவி
புரவி ஏறி
புகார் கலைக்கும் கதிரவன் ..

எங்கும் புலர்தலின் வர்ணம்
புதிதாக தெளித்துச் செல்லும்
குளிர்கால விடியல் ஒன்றில்
எண்ணம் வடியாது மையலுறும்
தையலிவள் கன்னமெங்கும்
குளிர் காற்று எழுதி செல்லும்
சில எச்சில் தெறித்த
முத்தச் சுவை ...


அவனுக்கு மட்டும்....




வெள்ளி வீழ்ந்த
ஓர் அமாவசை இரவு ..
அமானுஷ்யம் கூட
அரண்டு கொள்ளும்
அந்தகாரம் ..
அவனுக்கு மட்டும்
அது எதுவும் தெரியவில்லை ...

ஆங்காங்கே தெரியும்
வீதி விளக்கின்
குமுள் உதிர்க்கும்
குறுகிய ஒளியினுள்
தன இருண்ட வாழ்வை
சிறிது
ஒளியூட்டி உறங்குகின்றான் ...

வறுமையின் ரேகை
வலுவாக தெரிகிறது ..
செருப்பில் இருக்கும்
சிறிது செருக்கு கூட
அவன் தோற்றத்தில் காணோம்
அருகிருக்கும் நீர் பாட்டில்
அவனதாய் இருக்குமா ...
ஐயோ பாவம் என
ஆராவது கொடுத்திருப்பாரோ .....

புண்ணியவான்களும்
இந்த பூமியில் உண்டா ?
இருந்தால் புழுதியில் புரளும்
புருஷனாய் உன்
அவதாரம் இங்கு எப்படி சாத்தியம் ?

வல்லரசு கனவு
வகை வகையாய் சுக போக உணவு
வாரி கொடுக்கும் கஜானா கதவு
சொப்பன லோகத்து
அரசர்களுக்கு ஏது
நாயோடு சேர்ந்து
நடு வீதியில் உறங்கும்
நம்மவர்கள் நிலை புரியும் ... ?

நாய் கூட நன்றாக இருக்குது ..
நாய்க்கும் கெட்ட பொழப்பு உனக்கு ..
நாட்டினை நன்றி கெட்ட இதுகள் ஆண்டால்
நாளை நமக்கும் நிலை இதுதான் ...

கவலையின்றி உறங்குபவனே
கவனமாய் உறங்கு
காலனை விட கொடியவர்க்கு
உன்னைப்போல் அப்பாவிகள் தேவையாம்
அவர்கள் தப்பிக்க ...

விருட்சங்களே ...



இனம் காக்க
விதையான விருட்சங்களே
வீழ்தலில் எழுதல்
வீர மறவர்க்கே சாத்தியம்
வீழ்ந்தாலும் விதையாவது
உங்களுக்கே சாத்தியம் ...

வானளாவும் உங்கள் தியாகம்
வாழ்வு கொடுத்த
உங்கள் ஈகம் ...
உங்கள் உறுதியும் பாசமும்
உள்ளவர்க்கும் இருந்திருந்தால்
உருவாகி இருக்குமாடா தமிழ் ஈழம் ...

உனக்கென்றுதாயுண்டு
உறவாட சொந்தமுண்டு
உளம் பகிர நட்புமுண்டு
இருந்தும்
உருவாகும் தமிழ் ஈழம்
உன் கைபட்டு கருக்கொள்ள
களம் புகுந்து விதை ஆனாய் ..

கார்த்திகை பூக்களே
என்றும் நெஞ்சினில் நீங்களே ..
மயானம் சிதைத்த
மடையர்களுக்கு தெரியவில்லை
நீங்கள் விதையானது அங்கல்ல
விருட்சம் என மனதுள் என்று ...

கரிய புலிகள் என
கடல் கொண்ட வேங்கை என
கயவர் களமாடி
காவியமான
கர்ம வீரர்களே ..
கானல் ஆகுமோ உம் ஈகம்
கடந்து போகுமோ உம் கனவு ..

சாவுக்கு மனுப்போடும்
சரித்திர புருஷர்களே
உங்கள் ஆவி பிரிந்திடினும்
ஆரத் தழுவிய உங்கள்
தாய் மண்ணின் பாசம்
தலை முறைக்கும் சுமக்கும்
உங்கள் தியாகங்களை ..

உங்கள் ஆத்மா உறங்கிவிட கூடாது
உங்கள் கூக்குரல் ஓய்ந்துவிட கூடாது
உங்கள் வேகம் தீர்ந்துவிட கூடாது
உங்கள் தியாகம் முடிந்துவிட கூடாது
விதியான வீரா விளைந்து வா
வீணே காலம் கடக்குது பார் ..
நெஞ்சில் நிலையாகி போன எம்முறவே
உம நினைவை நித்தமும் சுமப்பர் ஈழவரே ...

நினைந்துருகும் இன்றைய நாள்
உன் கனவுகளை சுமந்தவண்ணம்
கார் இருளை கிழித்து
விடியலை பிரசவிக்காதோ ..
உங்கள் கனவுகளை சுமந்து
கடல் கடந்து கண்ணீர் சிந்தும்
இவள் ...

வேட்கை...



மெல்லென படரும்
தென்றல் என
உன் மேன்மைகள்
என்னை படர்ந்த கணம்
சொல் ஒன்றும் போதவில்லை
அந்த சுகம் பகிர்ந்து விளம்பிவிட ...

கள்ளுண்ட மலரணைய போதை
சுகம் காணாத இடமெங்கும்
இதம் பரவ
தொட்டனைத்தூறும் நீரென
நீ தொட்ட அனைத்திலும்
சுகம் பற்றணைத்து
விரவி சுகம் வளர ..

நாணக் குடை விரிந்து
காதல் மலர் தூவி
காமக் கரை தேட
மொட்டவிழ்ந்த
மனக் குளத்து மலர் ஒன்று
உந்தன் முகம் நாடி விசித்திருக்க
கட்டவிழ்ந்த
உந்தன் கனிந்த முகம்
இதழ் தொட்டணைத்து
சுகம் பகிர ...

உந்தன் இதழ் வழி
வழிந்த ஓர்விடம்
என் உயிர் குடித்து
நிமிர்ந்த வேளையில்
கருமணிக் கண் துளிர்த்த
நீர் பகிர்ந்து நின்றது
கானலின் வேட்கையை ...

இளமை மயக்கம்...



நார் இழையோடும்
அழகிய மலரைப்போல்
மனதோடு இழையும்
நினைவுகள் அனைத்திலும்
மெல்லிய
சுகந்தத்தை பரப்பிச் செல்கிறது
நினைவு சுமந்த
மகரந்த தென்றல் ....

தூங்கும் உணர்வுகளில்
பரவும் அதன் சுகந்தங்கள்
உறங்கும் உள்ள கிளர்சிகளை
உராய்ந்து செல்கிறது ..
பற்றிக்கொள்ளும்
பஞ்சென மனமும்
பார்வை படரும் இடமெங்கும்
அதன் வெம்மையை விரவிப் படர்கிறது ...

அதன் காங்குகள் எங்கும்
தெரியும் உன் முக தரிசனங்கள்
மூச்செங்கும்
வெம்மையை வீசி விசிக்கிறது ...

எதோ இனம் புரியாத உணர்வுகள்
அதன் தேவைகளின் வினாக்களை
விதைத்து வாளர்ந்து செல்கிறது
வானளாவும் அதன் தேவைகளுக்கு
தீர்வு ஒரு புன்னகையா
ஒரு இதழ் ஒற்றுதலா
அன்றில் இளமையின் பரிமாறுதலா ?

உன் கை வளைவுகளுக்குள்
காதலும் காமமும் அடங்கிவிடுமா ?
காந்தப் பார்வையில்
புலங்களை தாண்டிய
கதிர் வீசிடுமா ?
இல்லை
கடைசிவரை
ஏக்கங்களும்
எடுத்து சொல்ல முடியாத
எண்ணற்ற உணர்வுப் பிதற்றல்களும்
எஞ்சி விஞ்சி
வஞ்சி இவளை இம்சிக்குமா ?
வார்த்தை ஒன்று பகிர்ந்து விடு
இளமையின் மயக்கம்
இனிதே .........

வாழ்க நீ ...



வளம் கொழிக்கும்
கார் கார்த்திகை மாதம் ஈன்ற
இனம் சுமந்த
என் தலைவன் பிறந்த பொன்னாள் இது

தாய் தனம் சுமந்த
வீரப் பால் குடித்து
மறவர் குலம் வளர்ந்த
வீர வேங்கை இவன்
கரம் பிடித்து
கை கோர்த்து
இனம் காக்க
விதையாக வீழ்ந்த
மறவர் மாவீரர் கல்லறை
வணங்கும் கர்ம வீரனிவன் ...

கர்ணன் படித்ததுண்டு
அர்ஜீனன் படித்ததுண்டு
தர்மன் படித்ததுண்டு
சாணக்கியன் படிதததுண்டு
உன்னை மட்டுமே பார்த்ததுண்டு ...

பத்து திங்கள் சுமந்த
பார்வதி அம்மா
கொண்ட கர்வம் வெல்லும்
உன்னை கணம் தோறும்
மனம் சுமக்கும்
பார் வாழும்
ஈழ அம்மாக்கள் கர்வம் ...

கார்த்திகை ஈன்ற
கரிகால வேங்கையே
உன் கருவிழி கொண்ட
கனவுகள் வாழுமே ...
உன் மனமேந்தும் கனவுகள் கோடி
உன் சுகம் நாடும் உறவுகள் கோடி
உன்னை விழி பார்க்க
தவங்களும் கோடி
வீழாத மறவன் நீ ...

அகவை அறுபதை எட்டும்
அழகான தலைவனே
அகவை ஐந்து நூறு கண்டாலும்
அகமெங்கும் குழந்தையே
உலகமெங்கும்
உனக்காக இன்று தூளி ஆடும் ..
உன் ஒரு வார்த்தைக்காக
செவிகள் ஏங்கும் ...

உன்னை கடந்த காலம் என்கின்றனர்
உன்னை முடிந்த கதை என்கின்றனர் ..
காலம் வென்றவன் முடிவதில்லை
கடமை வீரன் தோற்பதில்லை
நீ வரும்வரை நீளும் மௌனம்
நீ வராது போகினும்
நீ வாழும் தெய்வம் ...

அதுவரை ...
என் தந்தை போன்றவனே வாழி நீ
என் தாயுமாணவனே வாழி நீ
என் மாமன் குணம் கொண்டவனே வாழி நீ
என் இனம் காக்கும்
இமயமே வாழ்க வாழ்க நீ ...

முத்தம்


****

நிலவொழுகும்
ஒரு பொழுதில்
உன் இதழ் தடவி
வழிந்த முத்தம்
வலியை பகிர்ந்து சென்றது ...

எதிர் பார்ப்புகள்
ஏமாற்றங்கள் ஆகும் பொழுது வலிப்பதில்லை
எதற்காகவோ எனும் பொழுது
வலியை தவிர
அது எதையும் தருவதில்லை...

அதற்கு பிறகான
எந்த வார்த்தைகளும்
ரசிப்பதில்லை
உன்னால் அனுப்பப் பட்ட
மேகத் திரள் ஒன்று
என்னுள் மோக துகள் வீசி
மெல்ல நகர்கிறது
அதன் துகள் அனைத்திலும்
விம்பம் ....
நெருப்பென எனை சுடுகிறது

வழிகின்ற நீர் துளி ஒன்று
வாஞ்சையோடு சொன்னது
நான் இருக்கிறேன்
உனக்கே உனக்காய் ...

பரிதவிப்பு..


****
ஊன் தடவும்
மெல்லிய தென்றலில்
உன் சுகம் தேடி
சலிக்கிறது எண்ணப் பறவை ..

இருதயத்தில் கருக்கொள்ளும்
எண்ணற்ற ஆசைக் குழந்தை
உதடுகளில்
குறை மாதக் குழந்தையென
பிறப்பெடுத்து
பெரிதும் தவிக்கிறது
அதன் குறை களைந்து
நிறை பகிர ...

பிரிய முடியாத குறை நிமிடங்கள்
பகிர முடியாத ஒன்றை
தினம் சுமக்கிறது
பரிச்சயமான
பாதசுவடுகளின்
பள்ளங்களில்
வீழ்ந்து அமிழ்கிறது
ஒற்றை ரோஜா இதழ்கள் ..

உன் சிரிப்பில் சிக்கிவிடும்
சிறு சிந்தனை நரம்புகள் எங்கும்
மோகத்தை
நிரப்பி வழிகிறது உன் புன்னகை ...
கடந்துவிட துடிக்கும்
கால்கள் இரண்டை
கட்டிக் கொள்கிறாய்
சிறு குழந்தை என ...
காணாமல் போய்விடுகிறது
எண்ணங்கள் ...

சிதறிய முத்துக்களை
எடுத்து வைக்க
எத்தணிக்கும்
சிப்பிக்கு தெரியாது
சிப்பிக்குள் முத்தல்ல
சிப்பிக்குள் வைரம் ஒன்று
தெரியாமல் குடி கொண்டது ...

நீளும் கைகளுக்குள்
நெருங்கும் உன் மனது
உதடுகளை கொண்டு
கடிவாளம் இடுகிறது
உன்னதமான உறவொன்றை சொல்லி
உள்ளத்தின் தவிப்புகள்
உடைப்பெடுக்கு முன்
உறங்கி விடு
விடிவதற்குள்
ஏதாவது ஆகலாம் ...

அழுக்கான அழகிய தேவதைகள்...




வறுமைகள் பிரசவித்த
அழகிய பதுமைகள்
சாம்பல் படிந்த
கரிய வைரங்கள்
வந்ததின் காரணம் தெரியாமல்
வாழ்வதின் கட்டாயம் புரியாமல்
வாழப்போவதின் நோக்கம் தெரியாமல் ...

அழகிய பூக்கள் என்றும்
மலர் மொக்குகளில் மட்டும்
மலர்வது இல்லையோ
மண்ணிலும் புழுதியிலும்
புரண்டு
புழுதி துளைந்து
மலர்கிறது இங்கு ...

இறைவனின் இருதயமற்ற
சிருஷ்டியில் பிறந்த
அழுக்கான அழகிய தேவதைகள்
பிரம்மன் உதறிய
தூரிகைத் திவலையில்
கருக் கொண்ட
காயமிதுவோ ...?

ஒருவேளை பசி நீங்க
முந்தானை இலை விரித்து
பெண்மை படைத்த
மோக விருந்தில்
துப்பிய எச்சில் துளியா ... ?

அன்றில்
அமாவாசை இரவுகளில்
வானக் கூரையை
வீடாக கொண்டு
தன்னை முழுமையாய் கொடுத்த
ஏழை தாய் சுமந்த
புகை படிந்த பவுர்ணமியோ ?

இல்லை
உற்றாரும் சுற்றாரும்
உதறி விட்ட
எதிர் கால சூரியனோ ...?

சிலவேளை
காலமெனும் அரக்கனின்
காவலர்கள் பிடியில் சிக்கி
ஆதரவற்ற நிலையில் நிற்கும்
அப்துல் கலாமின்
கனவுக் குழந்தையோ ... ?

உணவாக்கும் இருகையில்
ஒரு கை உனக்காக நீளாதோ ?
உடன் பார்க்கும் பல
மனிதர்களில்
மனிதம் ஒருவரிடமாவது வாழாதோ ?

குழந்தாய்
பிச்சை புகாதே
உன் கச்சை தளரினும் ....
எச்சை என உன்னை
கொச்சைப் படுத்தியவர்க்கெல்லாம்
வைரத்தின் வாழ்வு தனை
வாழ்ந்து காட்டி விடு ..

குழந்தையும் இறைவனும் ஒன்றாம்
அதனால்தான்
இரண்டுமே இன்று தெருவில்
எனினும்
அருமை தெரியாதவர்களால்
இவர்கள் பெருமை
என்றுமே இழப்பதில்லை ..
கூட்டுப் புழுவான வாழ்க்கை களைந்து
வண்ணத்துப் பூச்சியென
வட்டமிடும் உங்கள்
சுய வெளிப்பாட்டுக்காய்
காத்திருப்பது
கதிரவன் மட்டுமல்ல
காலமும் தான் ...

Wednesday, October 16, 2013

நீர்க்குமிழி வாழ்க்கை




ஒவ்வொரு நிமிடத்தையும்
உனக்கானதாக
ஆக்கிவிடுகிறது உன் நினைவுகள் ...
உன்னால் உதிர்க்கப் படும் புன்னகைகள்
என் உதட்டில் மிச்சம் வைக்கிறது
அதன் எச்சங்களை ..
உன்னால் எழுப்பப்படும் கேள்விகள்
ஓவொன்றும்
என் சேலையின் மாராப்பில்
சிக்கி திமிறுகிறது
சில நிமிட விடுதலைகள் வேண்டி ..

சந்தேகங்களில் சடுதியாக
புகுந்துவிடும் சிந்தனை சிப்பிக்குள்
ஒரு முத்தென உருவாகிறது
உன் மீதான என் அன்பு ...
காலம் காலமாய்
உறைந்துவிட்ட
உறை நிலை அன்பை
செதுக்கி சிற்பம் ஆக்குவதில்
தீவிரமாய் முயல்கிறது
வார்த்தை உளி ...

எழில் குழையும்
குளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென.

கண்ணீர் இல்லாமல்



என் அனைத்திலும்
அடங்கிவிட்ட உன்னுள்
ஆத்மாவாகிவிட்ட என்
சுயங்களை
சுண்டி இழுக்கும்
நினைவுக் கரங்களின் பிடிகளில்
குழையும்
உன் ஸ்பரிச ரேகைகளின்
உஸ்னம்
உன் புன்னகை கீற்றுக்களால்
குளிர்ந்து விடுகிறது இப்பொழுதெல்லாம்

அடிக்கடி
என் உணர்வலைகளை
உருவகப் படுத்தி பார்க்கின்றேன்
அதில் உருவாகும் நீ
ஏனோ எனக்கு வலியை கொடுப்பதில்லை
மெலிதான உன் புன்னகையில்
மௌனித்துவிடும்
முணு முணுப்புகள்
முத்துக்களை பூக்க வைக்கிறது
முரட்டுத் தனமான
உதடுகளில் .

கடந்து சொல்லும் தென்றல்
ஏனோ கனல் அள்ளி தெளிப்பதில்லை
காதில் கலகலத்து சிரிக்கிறது
உன் சிரிப்புகளை
சிறிது களவாடி இருப்பதனால் ..

இரவினை உருக்கும்
வெள்ளி நிலவின்
ஒளிக்கீற்றும்
ஒன்றும் செய்வதில்லை
உன் முகம் கொண்டு
எனை பார்ப்பதனால் ...


ஒன்று மட்டும் சொல்லிவிட்டு செல்
உன் தேவை எனக்கு இல்லையா
இல்லை
உன்னைப் போல் ஒரு நிழல்
தீண்ட எனக்கு சம்மதமா ?
ஏனெனில்
உன் காந்தப் பார்வையை
தொலைத்த கணம் முதல்
நேற்றுவரை
கலங்கி தவித்த கண்கள்
இப்பொழுதெல்லாம்
முன்னைப்போல்
கண்ணீரைத் தருவதில்லை ..

Monday, October 7, 2013

"தேவதைகள் மண்ணில் பிறகின்றனர்"




வான் பிளந்து
வர்ண வால் நிலவு
வடிவுகொண்டு
வந்து வாஞ்சை கொள்ளுதடி ..

சின்ன சின்ன குறும்புகள்
சிலிர்த்து பூக்கும்
புன்னகை பூக்களில்
தடுமாறி சிதறும் முத்துக்கள்
ஒவொன்றாக கோர்த்தெடுத்து
கொள்ளை கொண்ட மனதில்
கொலுவிருக்கும் உனக்கு
அலங்கரித்து மகிழ்கிறது மனது ...

இறக்கை இல்லாத தேவதை
என் இயல்போடு இணைந்திட்ட பூவை
வளைந்தாடும் சரிந்தாடும்
நுழைந்தாடும் வண்ண நிலவு

யார் சொன்னது
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லைஎன்று
தேன்மதுர தமிழ் குழைந்து
தேன் ஒழுகும் வார்த்தைகளில்
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும்
தேவ மொழியாம் தேவதையே .

" ஊமையாய் "




பசேல் என பரந்து விரிந்த
ஓர் பாலையின் குளிர்மை என
அந்த அமானுஷ்ய வெளி
அகத்தினுள்ளே ஒரு
அமைதியையும்
அதோ தூரத்தில் தெரியும்
ஒற்றையாய் அந்த ஒரு வீட்டின் அமைதி
மனதினுள்ளே பீதியையும்
புரளவிட்டபடி
என் எண்ணக் குளத்தின்
சலன அலைகளை
சலனம் செய்தவண்ணம் ...

நடுநிஷியின் இருள் அடைப்பில்
போர்வைக்குள் புகுந்து கொண்டு
ஒரு திகில் படம் பார்ப்பது போல்
உள்ளத்தில் ஒரு பீதியை
ஒற்றையாய் அந்த வீடு
உருவகித்து செல்கிறது ...
இருந்தும்
ஏதோ ஒரு உணர்வலையின் உந்துதலில்
பின் இழுத்த கால்களை முன் நகர்த்தி
முடிந்தவவரை என் முழுமைகளை திரட்டி
ஒற்றையாய் இருந்த வீடினுள் ......

ஓர் யுத்தக் களத்தின்
விஞ்சிய எச்சமென
உருக்குலைந்து உருமாறி
உடைந்து கிடந்தது அந்த வீடு ..

உள்ளே ஓரடி வைத்ததுதான் தாமதம்
எதுவோ ஓடி ஒளியும் உணர்வு
பாம்பு ? எலி ? பூனை ? எதுவாக இருக்கும் ?
எதுவென்றால் என்ன ?
விதி வரைந்த அந்த வீட்டின்
நரம்புகளை உணர்ந்திவிடும் நோக்கில்
நகர்ந்த என் கால்களுக்கு
இந்த நினைவுகள் எதுவும்
தடை போடவில்லை ..

சுவர்களில் அங்கும் இங்கும்
அலங்கோலமாய் தொங்கிய
அந்த வீட்டின் குடும்பப் படம்
குலைந்திருக்குமோ ?
குடி முழுகிப் போய் இருக்குமோ ?
சுவரில் ஆங்காங்கே இருந்த
கிறுக்கல்களின் எச்சங்களும்
சிதறி கிடந்த பாதி மண் தின்ற
விளையாட்டு பொருட்களும்
அந்த வீட்டின் மழலை செல்வங்களின்
மந்தகாச வாழ்வினை கண்முன் நிகழ்த்தின
இப்பொழுது எங்கே இருப்பார்கள் ?
அகதியாய் ? அனாதையாய் ?
இல்லை பாழும் இவ்வுலகை விட்டு
பறந்திருப்பார்களோ ?

ஆடைகள் , அணிகள்
பாடப் புத்தகங்கள்
பாத்திரம் பண்டங்கள் என
கரையான் தின்ற மிச்சமாய்
இன்னும் கலையாது கரைந்து
கண்களில் நீர் அரும்ப செய்தது ..

இது ஒன்றா ? இல்லை இது போல் பல
இரக்கமற்ற போர்க் காலனின்
அகன்ற வாய்க்குள் அகப்பட்டது போக
எஞ்சி நின்று எமை எல்லாம் வருத்த ...

ஊரவரின் உறவு கலைந்த நிலை கண்டு
உருவம் தொலைந்த கதி கண்டு
கையறு நிலையில்
ஊமையாய் அழுவதை தவிர
இவளால்
என்ன தான் செய்துவிட முடியும் ?

" தற்கொலை "



இயலாமை
தன் இறுதித் தேர்வுக்கு
ஆயத்தமாகிக்கொண்டு இருந்தது ..

ஏதோ ஒரு விடுதலையின்
வேட்கை கொண்டோ ..
ஒரு விடியலின் ஒளியை
புணர்ந்துவிடும் நோக்கிலோ
ஒரு இறுதிக்கான முடிவை நோக்கி
அது பயணிக்க துடிக்கிறது ...

அதன் இழப்புகளின்
வலிகளை அறிந்தும் அறியாமலும் ..
தான் நொடிப்பொழுது விடியலுக்காய்
தன் உறவுகளை உணர்வுகளை
தியாகம் செய்ய துடிக்கிறது ...

அனைவரது கண்ணிலும்
கருத்திலும் பேச்சிலும்
கோழைத்தனம் என கருதப்படும்
முயன்றால் தெரிந்துவிடும்
முயல்பவன் கோழையா
இல்லை முனகுபவன் கோழையா என்று ...

முயன்று முடியாதவன்
இனி முயலவே முயலாத
முனைவு இது ...
முயன்று பார்த்தவர் பலர்
முயலாமல் தோற்றவர பலர்
முடிந்து போனவர் பலரென
பட்டியல்கள் நீன்றாலும்
இதன் பயணங்கள் ஏனோ
ஆங்காங்கே முடுக்கி விடப்படுகின்றன ..

விடுதலைக்கு முயல்பவனே
விடுகதைக்கு விடைதேடு
விடியல் உன் கண்தெரியும் ..
திரும்பாத ஊர் செல்ல
விரும்பும் உன் செயலில்
வருந்தாத உளமுண்டோ ..
தற்கொலைக்கு போராடுபவனே
ஒரு முறை
தன்னம்பிக்கையோடு போராடு
வாழ்வு வசப்படும் ...

" இடைவெளி "




உனக்கும் எனக்குமான
இந்த உறவின்
உருக் குலைந்த நிலையை
உருவாக்கியது இடைவெளி ..

தூரத்து மின்மினியாய்
அவ்வப்பொழுது
ஒளிரும் உன் பாச விளக்கு
போகத ஊருக்கு வழிகாட்டி ..

பல நேரங்களில்
இடைவெளிகள்தான்
தீர்மானிக்கிறது
இதயங்களின் இருப்பை
பிரிவுத் துயர் சுமந்து
பிரியமுடியா நினைவழைந்து
கருகும் காலத்தின் பிடியில்
உதிரும் ஓவிய சுவர்களாய்
இருப்புக்கள் நகரும்
இன்மையினை தேடி ...

சில சுயநலங்கள்
சிதிலம் அடைந்த
குருதி துகளின்
துர்நாற்றமென
தூர தேசம் வரை
வாடை சுமப்பதும்
இந்த இடை வெளிகளின்
இருப்பின் மீது
அவர்கள் கொண்ட
நம்பிக்கையின் பிடிப்பில்தான் ...

வலி சுமந்து வாழும்
பல இன உணர்வு சுமந்த
இதயங்களை
இந்த இடை வெளிகளும்
பிரிப்பதில்லை என்றும்
இறுதி வரை அவர் தம்
வேட்கையும் துறப்பதில்லை ..

அவ்வளவு ஏன்
இந்த நிமிஷம்
உனக்கும் எனக்குமான
இந்த உறவுத் தூரத்தின்
இடை வெளிகளை
நிரப்பி நிக்கும்
இந்த முகப் புத்தகத்தின்
பல முகங்கள்
குரோதம் , வஞ்சம்
அன்பு , காதல்
ஆசை , ஆளுமை
என அனைத்து முகம் கொண்டும்
நிரப்பி விடத் துடிக்கிறது இடைவெளியை ..
நிரம்பி விடுமா இடைவெளி
இல்லை நிரம்ப விடுவாயா இதயத்தில் நீ ...?

" நடைப்பிணம்.... "



அவள் நினைவு மலர்களை
சுகிப்பதிலேயே
சுகம் காணுகிறது மனது ..
தென்றல் சுமக்கும் நறுமணங்களில்
அவள் மன வாசனையை
நுகர்ந்துவிடத் துடிக்கிறது
மரணித்தும் துடிக்கும் இதயம் ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
போதையூட்டும்
அவள் நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையடிப் பாதையின்
ஓரங்களில்
ஒற்றையாய் வளர்ந்த
கள்ளிப்பூ ஒன்று
அவள் கடினத்தில் பூத்த காதலை
கணத்தில் நினைவுறுத்துகிறது ..

ஒற்றையாய் பறக்கும்
ஓர் வண்ண பறவையும்
தண்ணிலவாய் காயும்
வெண் நிலவின் மென் ஒளியும்
என் நினைவில் அவள் உருவை
செதுக்கி உறைகிறது பனியென ...

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் காதலின் ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

இணை பிரிந்த அன்றில் என
உனைப் பிரிந்த நான்
ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

" விளிம்பு "


எதிர் பார்ப்புகளின் விளிம்புகளில்
ஏமாற்றங்களையும்
எதிர் விளைவுகளையும்
எழுதிச் செல்கிறது
தோல்வி ....

எண்ணிலடங்காத
எண்ணக் குவியல்கள்
வண்ணம் இழக்கிறது
வாழ்வு
தன்னை இழக்கும் தருணங்களில் ...

இதழ் விளிம்பில்
நெளிந்து குலைந்து
அவிழும் புன்னகை மொட்டுக்கள்
இனம் புரியாத
கிளர்ச்சி ஒன்றினை
இருதயத்தில்
பிரசவித்து பிரவாகித்து கொல்கிறது ...

மேக விளிம்பில்
தட்டிக்கொள்ளும் மேக மூட்டமும்
மின்சாரப் பாய்ச்சல் என
உடைந்து சிதறுகிறது
மழைத் துளிகள் என ...

பேனாவின் விளிம்பில்
கசிந்து உருகும் மை
பொய்மைகளை கிறுக்குவதை விட
ஊமைகளான உண்மைகள் பலவற்றை
உடைத்து எழுதுவதிலே
தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது
கர்வத்துடன் ..

விடுதலைப் போர்களின்
வீரர்கள் அனைவரும்
தம் சாவின் விளிம்பில்
கையொப்பம் இட்டு செல்கின்றனர்
விடுதலையின் வேட்கையை ...

உதிரும் பூக்களின்
சுமைதாங்கும்
காம்பின் விளிம்புகள்
கர்வம் கொள்கின்றது
தன் தலை தாங்கிய பூவொன்று
தாய் மண் காத்தவனுக்கோ
தலைவன் கை கொண்டு
தலை முடியில் சூடுவதட்கோ
அன்றில்
தன நிகரில்லா பரம்பொருள்
சேர்வதற்கோ
ஒற்றையாய் தவம் செய்ததாக ...

மரணத்தின் விளிம்பிலும் சரி
மயக்கத்தின் விளிம்பிலும் சரி
உன்னதமான காவியம் ஒன்றை
உலகுக்கு கொடுத்து விடலாம்
உறுதிகள் உள்ளத்திருந்தால் ..

" காதல் இப்படியாம் .. "



ன்னிடமும் உன்னிடமும்
புரண்டு தவழும் காதல் குழந்தை
பல கைகளில் மருண்டு விழிக்கிறது ...
காதல்
கலவிக்கென்பார்
கரைபுரண்ட அன்புக்கு என்பார்
மடை திறந்த உள்ள மருளுக்கு என்பார் ..
இவை அனைத்தும் கலந்த
குழந்தை என்கிறோம்
நீயும் நானும் ...

நெடுந்தூர பயணத்தின்
சக பயணிகள் என
காதல் அவ்வப்பொழுது வந்து
தரிப்பிடங்களில்
இலகுவாக விடை பெறுகிறது இன்று ..

அடுத்த தரிப்பிடத்தில்
அனாவசியம் என உத்தர நினைக்கும்
உள்ளங்களை கூட
மருட்டி மடிய வைத்து ருசிக்கிறது ..

மனதைப் பற்றி பேசும் பலரும்
அதை மரணம் வரை பேசுவதாய் இல்லை
அழகைப்பற்றி பேசும் எவரும்
அழகை ஆராதிப்பவராயும் இல்லை ..
காமம் பற்றி பேசும் எவரும்
களிப்புண்டு தீர்த்தாரில்லை ...

எனில் காதல் என்பது யாது ?
கருத்தொருமித்து
கண்கவர்ந்து
கடைக் கண் பார்வை பகிர்ந்து
உள்வாங்கி உரமான
அன்பென்று சொல்கிறோம் நாம் .

விழி உதிர்க்கும் நீர் மணிகள்
காதல் கறைகளை
கழுவிச் செல்கிறது ...
இதழ் உதிர்க்கும்
புன்னகை ஒன்று
இதயத்தின் வடுக்களை
ஆற்றிச் செல்கிறது
எனவே இன்றெல்லாம்
காதலும் நீடிப்பதில்லை
காதல் தோல்விகளும் நீடிப்பதில்லை ..

இதையும் நாம் தான் சொல்லி கொள்கிறோம்
இங்கே நீயும் நானும்
அவன் , அவள் , அவர்களாகி
அனைவருக்குமான
ஒருவராக
பேசிக் கொள்கிறோம்
இன்றைய காதல் இப்படியாம் ..

" கலைந்த பொய்கள் "



எழுத்துப் பிழை இன்றி
இலக்கணமாக
இலக்கியமாக
இன்னும் பலவாக
வடித்து விடுகிறாய்
என் மீதான
உன் ஆசைகளை ....

கோடுகளாலும்
புள்ளிகளாலும்
வர்ணத் தெளிப்புகளாலும்
எதுவோ ஒன்றை வரைந்து
அதற்க்கு என் பெயர் சூடி
வழிபடுகிறதாக சொல்கிறாய் ...

மொட்டவிழும் முடிச்சுக்களில்
கட்டழகு கவிந்து
குலைந்து குவிவதாக
பட்டழகு மேனியின்மேல்
போர்த்திக்கொள்ளும்
பாவை என்
பாலாடையன்ன மேலாடையாக
படர்ந்துவிட
ஆசை கொள்வதாக
பிதற்றிக் கொள்கிறாய் ...

எண்ணிக் கொள்ளும்
நிமிட மணித் துளிகளும்
எண்ணி எண்ணுகின்ற
அனைத்துக் கால துளிகளும்
ஓர் குளிர்ந்த நீரோடையின்
பிரவாகம் போல்
உன்னை படர்ந்து
ஸ்பரிசிக்கும் என
கற்பனைகள் விரிக்கிறாய் ...

மெல்ல நடக்கும் தென்றல் என
என் மேனி உருக் கொண்டு
தத்தி தவழும் கிள்ளை முகத்தில்
உன் பிள்ளை முகம் தேடி
சலிப்பதாய் சலித்துக் கொள்கிறாய் ...

வெள்ளிக் கம்பிகளென
மேல் படரும் நரை முடியும்
என் முதுமையின் கம்பீரம் கொண்டு
மினு மினுத்து சிரிக்கும் பொழுது
உன் கரம் கொண்டு
மென்மையாய்
மெல் சுகந்தம் அள்ளும்
மல்லிகையின் சரம் கொண்டு
குழலாடும் தருணங்களிலும்
உன் கூட இருப்பேன் என
என் நெஞ்சள்ளி சிரிக்கிறாய் நீ ...

என் மறுப்புகள் எல்லாம்
என்னை மறுதலித்து
உன் கரம்பற்றி
என் காதலை கிறுக்கி செல்கிறது
ஒரு முத்த ஒற்றுதலில் ...
கலைந்த பொய்கள்
கலகலத்துச் சிரிக்கிறது
துகில் கலைந்த நாணத்துடன் .

" ஒரு கணம் "




ஒரு கணம் சிந்தித்திருக்கலாம்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு
உயிர் உருவும் உந்துதல் பெறுதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

கன்னி கழல் இழுத்து
கால் கொலுசு அறுத்து
குலம் சிதைக்கும்
கொடும் பாதகத்தை
கூட்டமாய் செய்வதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

காதலால் கைபிடித்து
காலமெல்லாம் கால் பிடித்து
கடமை செய்யும் மனையாளென
கைகள் நீளும் முன்
ஒரு கணம் நினைத்திருக்கலாம் ...

வாழ வந்த பெண்
வம்ச விளக்கு ஏந்தும் மகள் என
மறு மகள்
அவளை தீக்கிரை ஆக்குமுன்
ஒருகணம் நினைத்திருக்கலாம் ...

ஊர் வெறுத்து உறவறுத்து
உத்தமன் என ஒருவனுடன்
தடை தாண்டிய ஒருவளுக்காய்
ஊரை கொளுத்துமுன்
ஒரு கணம் யோசித்திருக்கலாம்

உனக்கென்று வீடுண்டு
உன் வரவுக்காய் ஏக்கமுண்டு
உன் சகோதரியாய் , மனைவியாய்
அவள் ஈன்ற உன் உயிர்க் கருவாய்
உன்னையே உயிராக மதிக்கும்
உன்னவர்கள் இருப்பாரென்று ...

அவர் உயிர் அறுந்தால்
உணர்வறுந்தால்
உன் உணர்வுகள் எப்படியென்று
ஒரு கணம் நினைத்துவிட்டால்
உலகில் குற்றம் குறைந்துவிடும்
உறவுகளின் கண்ணீரும்
அர்த்தம் பெறும்.

" வரதட்சனை "



சுட்டெரிக்கும் சூரியன்
தன் தணல் நாக்கை
கட்டுக்குள் கொண்டுவந்து
கனிவாக மாறிக்கொண்டிருந்த
ஓர் மாலை வேளை ..
வீடு பரபரப்பில்
ஆழ்ந்து வண்ணம் இருந்தது ...

கரை பெயர்ந்துவிட சுவரின்
காட்டமான பல்லிளிப்பை
காலண்டர் வைத்து
மறைத்துக் கொண்டிருந்த தம்பி ...
சமையல் அறையில்
சுடப்பட்ட பஜ்ஜியில் மிச்சரில்
தன் வியர்வை துளிகளை
அலட்சியம் செய்து
எண்ணெய் ஒற்றி எடுத்துகொண்டிருந்த அம்மா ,,
ஒரு மெத்தனத்தோடு
தோளில் துண்டை உதறிப் போட்டவண்ணம் அப்பா
தங்கை .....எங்கே ?
சிறிது காலமாக
இந்தமாதிரி நேரத்தில்
காணாமல் போய்க்கொண்டிருந்த அவள் தரிசனம் ...
வரும் மாப்பிள்ளை
தங்கையை கேட்டுவிட்டால் ...?

சிந்தனையின் போக்கை
சிதறடித்த அன்னையின் குரல்
தங்கம் ... அலங்காரம் பண்ணலியோ
நேரமாகிட்டுது ....!!
பாத ரசம் பெயர்ந்த
அந்த பழையகால கண்ணாடி முன்
முகம் தெரியும் இடங்களை தேடி
உயர்ந்து குனிந்து சரிந்து
விழிகளுக்கு அஞ்சனமிட்டு
இயற்கையாய் சிவந்த உதடுகளை
சிறிது எண்ணெய் தடவி மினுங்க வைத்து
குண்டு மல்லி சரத்தை கொத்தாக வைத்து
நாகரீக போர்வையில் கலர் வளையல்கள்
கழுத்தாரம் ஜிமிக்கி மாட்டி
மெல்லிய மஞ்சள் நூல் சேலையில்
தங்கம் , தங்கமின்றியே ஜொலித்தாள் ...

நிறைவாக பார்த்தவள் முன்
பழைய நினைவுகள் நிழல் ஆடியது ..
என் பொண்ணு அழகுக்கு
ஆயிரம் மாப்பிள்ளை வருவாங்கள்
அவளை விரும்பி மணக்கக் கேட்ட
அவனின் பொருளாதார திருப்தியின்மையில்
தந்தையின் வாக்கு அது ..
ஆமாம் இன்னும் இரண்டு வருடங்களில்
அவர் சொன்ன கணக்கே எட்டிவிடும்...

அழகுக்கு குறைவற்ற அவளிடம்
ஆஸ்திக்கு குறைவைத்த
ஆண்டவன் குற்றமா ?
அந்தஸ்து அந்தஸ்த்து என
அகம் மகிழ்ந்த வரன் அனைத்தும்
ஆரம்பத்தில் தட்டிக் கழித்த
அசட்டுக் கவுரவ தந்தையின் குற்றமா ?
படித்து வேலை பார்க்கும்
ஒரே காரணத்துக்காக
படிவைத்து அளக்க முடியாத அளவு
பொன் பொருள் வாகன ஆசை கொள்ளும்
மாப்பிள்ளையை பெற்றவள் குற்றமா ?
பெண்ணை பிடித்திருந்தாலும்
பெற்றவள் வார்த்தைக்கு கட்டுப் படும்
மாப்பிள்ளை குற்றமா ?

அழகுண்டு அறிவுண்டு
குணமுண்டு நலமுண்டு
குடும்பம் நடத்தும் பாங்குண்டு
வெள்ளிக் குத்துவிளக்கு
கொண்டு வர வசதியில்லையே
வக்கற்றவர்களுக்கு வாழ்க்கை எதற்கு
வறண்டு போன அவள் உள்ளத்தில்
வற்றாத ஜீவ நதியாக
வரதட்சனை வேண்டாம் என எவன் வருவான் ?

வந்தார்கள் நின்றாள் கொலு பொம்மையென
அழகை வியந்தார்கள்
பலகாரம் பெண் செய்தால் எனும்
பொய்யை புகழ்ந்தார்கள் ..
எங்கள் தாத்தா அப்படி அப்பா இப்படி
என்ற தந்தையின் வரட்டு
கவுரவத்தை கேட்டார்கள் ..
வழக்கம் போல் லிஸ்ட் போட்டு
சீதனமும் கேட்டார்கள்

ஊர் போய் கடிதமிடுவதாய்
உரக்கச் சொல்லி சென்றவர்கள் பட்டியலில்
இவர்களும் உக்காந்து விட ..
அன்னையின் புலம்பல் ஆரம்பமானது
இரவுகளின் பிடியில்
இறைஞ்சும் அன்னையின் குரலுக்கு
தந்தையும் இறங்கி வந்தார் ..

புரோக்கர் பரமசிவத்திடம்
ஒரு பிள்ளையின் குறிப்பிருக்காம்
பையன் பொண்டாட்டி
இறந்து ரெண்டு வருசமாம் ...


இனி தங்கத்துக்கு திருமணம் நடந்துவிடும் .......

" தேடாதே "



உன் நினைவுகளின் நீட்சியில்
உன் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
நினைவு மலரென நான் ...

அதன் மகரந்தங்கள்
உன் மனக்கருவறையில்
கடந்து சென்ற
பசுமையான நினைவுகளை
கருக்கொள்ள வைக்கிறது ...

உறை நிலைக் காலமொன்றில்
பாதி
உருகி விட்ட பனிப் பொம்மையென
என் உருவச் சிதலங்கள்
உறைந்து உன்னை
உருக்குலைக்கிறது
இருந்தும் சிலிர்த்து
எனை சிந்திக்க தவறியதில்லை நீ ,,,

பூக்கள் நிறைந்த வனத்தில்
உதிர்ந்துவிட்ட பூவொன்றின்
ஸ்பரிசத்துக்காய்
ஒற்றையாய் தவமிருக்கும் தும்பியென
உன் தவம் இன்னும் தொடர்கிறது ..

உள்ளம் கவர்ந்த ஓவியம் ஒன்று
உயிர் உருவிச் சென்றபின்னும்
அதன் நிழல் தேடி அலையும்
உன் மன விசித்திரம் ..
உனக்கும் எனக்குமான
பிரிவுப் பத்திரம்
உன்னை அறியாது
என்னால்
கைச்சாத்திட்ட பொழுதறிந்து
உடைந்து சிதறிய உன் மனவலி கண்டு
என் ஆத்மா உருகி உன்னை அணைத்தது
நீயறிய வாய்ப்பில்லை ..

காலம் கடந்து சென்றாலும்
கடந்துவிட முடியாத உன் காதல்
அடிக்கடி என்னை கட்டி அனைப்பதனால் தான்
உன் கை வளைவில் இருந்து
என் ஆத்மா கரைந்துவிட முடியுதில்லை ..

எங்கும் எனைத் தேடுகிறாய்
எதிலும் எனை நாடுகிறாய்
உன்னருகே தான்
உனக்கு பிடித்த உடையணிந்து
உனைக் கவரக் கால்க்கொலுசணிந்து
ஒட்டி ஒட்டி நடக்கிறேன் தென்றல் என ..
உணரமுடியாமல் நீ
உருவமற்ற நிலையில் நான் ...

அன்பே எங்கும் எதிலும்
எனைத் தேடாதே
ஒரு தென்றல் என
ஒரு நினைவுத் தீண்டல் என
உன்னுள் நான் அற்றுப் போகும் வரை
உன்னருகே தான் இருப்பேன்
எனவே எதிலும் எனை பார்க்காதே
அது அதுவாகவே இருக்கிறது
திரும்ப முடியாத தொலைவு நகர்ந்த
உன் தேவதையை தவிர ....

" விடுபட்ட இதயம் "



பரந்து விரிந்த இரவில்
கவிந்திருந்த இருளின்
இருண்மை கிழித்து
துழாவும் விழிகளின் தேடல்
ஏனோ வெளிச்சத்தின் துணையின்றி
தோல்விகளை தழுவிக் கொள்கிறது ....

முட்கள் நிறைந்த மலர்க்காட்டில்
இடறிக் கொள்கின்ற இதயங்கள்
பூவின் மென்மையை விட
முள்ளின் கூர்மையையே
சட்டென உணர்ந்துவிடுகிறது
கூரிய நாக்கினால்
கிளித்துவிடப்பட்ட இதயம்
குருதிக் கசிவுடன்
அதன் எரிவை தவிர்க்க
குளிரும் நீர்க் குளம் தேடி அலைகிறது ...

எதிர்ப்பட்ட நீர் நிலைகளெல்லாம்
அதன் குளிர்மையை
கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில்
புரண்டு அமிழ்ந்து மிதந்து
நடக்கிறது ....
ஒட்டியதெல்லாம் சேறும் சகதியும்
உலர்ந்த மணலும் தான் ,,,

என்றாகிலும் எப்பிடியாகிலும்
வலியை தீர்க்கும்
எரிவைப் போக்கும்
ஏரியின் தரிசனம் நோக்கிய அதன் பயணத்தில்
எதேச்சையாய் தெரிந்த
ஆர்பரிக்கும் நீர் திவலைகளின்
தரிசனம் கண்டு
அணைத்துவிடும் ஆவல் நோக்கி
கால் நனைத்த பொழுது ஈன்றது
கனல் தகிக்கும் உணர்வை
அதன் உப்புகளை
ஊன் உறிஞ்சி
உவகை துறந்து
விதிர் விதிர்த்து நின்றது
விடுபட்ட இதயம் ஒன்று ...

" காகிதப் பூக்கள் "




மலர்ந்த மொடுகள்
மௌனித்து இருக்கும்
சிவந்த இதழ்களும்
வர்ணம் கலையாது சிரிக்கும்
சிறகுகள் இருந்தும்
தேவதைகள்
அங்கு பறக்காது இருக்கும் ...

வலிவும் வனப்புமாய்
வாடாமல் இருக்கும்
வண்ண வண்ண மலர்கள்
ஜிகினா சகிதம் பளபளக்கும்
பாப்பவரை சுண்டி இழுத்தாலும்
ஏனோ பருவம் எய்தாத
பாவையர் போன்று
பல தோற்றம் காட்டிவிடும் ..

கேலிக்கு ஆளானாலும்
கேள்விக் குறியாய்
நின்று சலித்தாலும்
சந்ததிகள் தாங்கா விட்டாலும்
தன் காலில் நிற்கும் பூக்கள்
வசந்தங்கள் வருவதில்லை
வாசனையும் தெரிவதில்லை
கண்டுகொள்ளும் மனிதருள்ளும்
கறை படிந்த கண்கள் பல
வண்டுகள் தேடா மலர்
மகரந்தம் இல்லாத பூக்கள்
மலர்வதும் இல்லை
மனதை இழுப்பதுமில்லை

ஆசைகள் தோன்றும் வயது
ஆண் பெண் இல்லாத பிறப்பு
தான் என்று நின்றுவிட்டாலும்
தள்ளி வைத்தே பார்க்கும் உலகு
வா என்று அழைத்துச் சென்று
வஞ்சம் எல்லாம் தீர்த்துக் கொள்வார்
பார் என்று சிந்தும் கண் நீரில்
பாரெல்லாம் நனைந்தாலும்
பார்ப்பவர் உள்ளம் கரைவதில்லை ..

காட்சிக்காக அலர்ந்த பூக்கள்
கருக்கொள்ளாத
மலட்டு மலர்கள்
அசைவுகளில் மலர்ந்திட்டாலும்
காகிதப் பூக்கள் மணப்பதில்லை .

Monday, August 12, 2013

தூக்கம் வரவில்லை

Photo: கண்ணதாசன் கருணாகரன் கொடுத்த தலைப்பு இது " எனக்கு உறக்கம் வரவில்லை "

நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்  
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம் 
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி 
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் . 
நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம்
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் .

முனைந்து முனைந்து

Photo: முனைந்து முனைந்து 
முடியாமையின் 
விளிம்புகள் நோக்கி 
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து 
முனைந்து முடியாமல் 
பலர் எழுதும் காதல் கவிதைகளில் 
முனைந்து வழிகிறது 
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம் 
திருவோடு ஏந்தும் 
தெரு நாய்களோடு கூடும் 
பிச்சைகாரர்களின் தட்டில் விழும் 
பருக்கை சோற்றில் 
முனைந்து நகர்கிறது 
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை 
கடிந்து உமிழும் வெஞ்சினம் 
முனைந்து கடக்கிறது 
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி 
உருப் பெற்ற போராட்டம் 
சதிகாரர் வலையில் சிக்கி 
முயன்று முனைந்து 
சுவாசிக்க துடிக்கிறது 
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு 
அலங்கார தீபமிட்டு 
இவைக்கான காத்திருப்புகள் 
இன்னும் முயன்று பயணிக்கின்றன 
அதன் முடிவை தேடி 
முனைந்து முனைந்து
முடியாமையின்
விளிம்புகள் நோக்கி
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து
முனைந்து முடியாமல்
பலர் எழுதும் காதல் கவிதைகளில்
முனைந்து வழிகிறது
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம்
திருவோடு ஏந்தும்
தெரு நாய்களோடு கூடும்
பிச்சைகாரர்களின் தட்டில் விழும்
பருக்கை சோற்றில்
முனைந்து நகர்கிறது
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை
கடிந்து உமிழும் வெஞ்சினம்
முனைந்து கடக்கிறது
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி
உருப் பெற்ற போராட்டம்
சதிகாரர் வலையில் சிக்கி
முயன்று முனைந்து
சுவாசிக்க துடிக்கிறது
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு
அலங்கார தீபமிட்டு
இவைக்கான காத்திருப்புகள்
இன்னும் முயன்று பயணிக்கின்றன
அதன் முடிவை தேடி

Wednesday, July 17, 2013

என்றும் காதலோடு ...


 
பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..

உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....

என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......


நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...

இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
என்றும் காதலோடு ...

சிதறல்கள்

 

புரியாத புதிராக
புதைந்துகொண்டே
போகிறது என் காதல்
பூவாய் காதிருந்தும்
புழுதியில் புரளும் வரமோ ..
புன்னகைக்க முயற்சிகின்றேன்
புரியாத உன்னை நினைத்தல்ல
புரிந்தும் புரியாத என்னை நினைத்து

உனக்கான என் எண்ண சிதறல்கள்
எண்ணிலடங்காமல் என்னை சுற்றி
எதிலும் குறைவில்லை
உன் அலட்சியங்களில்
அன்றாடம் சாய்ந்து கொள்வதிலும்தான்
அன்பே அசையாத காதல் என்னிடம்
அநியாயம் பன்னுகின்றாய்
அனுதினம்...........

பித்தனடி

 

வெட்ட வெளியில்
 மெல் ஒளி உமிழும்
ஒற்றை நிலவென
கற்றை கரு முகில் பிரித்து
தொலைந்த தன் காதலனை
பூமியெங்கும் தேடுகிறாள் ..

காதல் பறவைகள் என இணைந்து
உறவுகளின் விலங்குடைத்து
காவியம் பல புனைந்து
கடந்து சென்ற நாட்களின் சுவடுகளில்
பொதிந்த பூக்கள் எல்லாம்
முட்களாய் மாறி
முனைகளை களம் இறக்குகிறதே ..

தினம் தினம் போர்க்களம்
திகட்டி விட்டது அவனுக்கு
விடுதலை வேண்டும் என்று
விண்ணப்பம் கோருகிறான்
விலையாக எது வேண்டும்
விலை உயர்ந்த கார் ?
விண் மீனென மினுங்கும்
அவர்கள் கனவில் கட்டி எழுப்பிய வீடு ?
காலமெல்லாம் உக்கார்ந்து சாப்பிட
ஒரு தொகை பணம் ?
எதுவேண்டும் விடுதலைக்கு ?

வார்த்தையின் வீரியத்தில்
தழுதழுத்த கண்களின் வழி
உயிர் ஒழுகி ஓடி விடுமோ
ஒருபக்கம் திரும்பி நின்று
ஒற்றை விரலால் உள் நிறுத்தி
சட்டென திரும்பி
சடுதியாய் ஒன்று சொன்னாள் ..

பிச்சையாய் இடும் பொருள் வேண்டாம்
என்னிடம் பித்தனாய் நீ இருந்த
அந்த பல நூறு நாட்களில்
பதினைந்து நாள் வேண்டும்
தந்துவிட்டு செல்
போதும் என்றாள் .

என்ன இது புது குழப்பம்
இருந்தாலும் சம்மதித்தான்
விடுதலையின் காற்றென
அவன் விரும்பும்
விவாகரத்து உந்த ..

நாள் ஒன்று நாளிரண்டு
நாளைந்து நாள் எட்டு
எட்டி நின்ற கணவன்
காதலனாய் மாறிவிட்டான்
எந்த கவலைகள் அற்று
கனவுகளின் எல்லைகளை அடைந்தார்கள்
சண்டைகள் இல்லை
சமாதானத்தின் அவசியம் இல்லை
விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டார்கள்
அன்றில்களாய் ஒன்றிய பொழுதெல்லாம்
பின்னாளின் அவலங்களை
மனதுக்குள் மறு பரிசீலனை செய்து
தவறென்று கண்டேதெல்லாம்
தனியாக பிரித்தெடுத்து
திருத்தங்களுக்கு தீர்வு கண்டார்கள் .

வானம் வண்ண மயமாகியது
வாழ்க்கை இன்பமயமாகியது
விட்டுக் கொடுப்பதால்
கெட்டுப் போவதில்லை
விழுதுகள் பலம் பெறுகிறது
உணர்ந்தான் உவகை கொண்டான்

பதினைந்து நாள் முடிவில்
பத்திரத்தை கிழித்து
பாசல் இட்டு பாவைக்கு பரிசளிக்க
பட்டுப் புடவை ஒன்றுடன் நாடிய பொழுதில்
கூடை விட்டு குருவி பறந்து
நெடு நேரம் தொலைந்திருந்தது
அவனுக்காய் ஓர் மடல் ..

அன்பே மன்னித்துவிடு
அரைமாதம் உன்னுடன்
அணுவணுவாய் வாழ்ந்துவிட்டேன்
உன்னை பிரிய முடியவில்லை
உயிரை பிரிகிறேன் - உன்னவளாய் .

பூமி அதிரவில்லை பூகம்பம் வரவில்லை
தரை பிளந்து தன்னவளை
கணவனாய் இருந்து
காலனிடம் சேர்த்த தன்னை வைதான்
எங்கு சென்றாய் என் நித்திலமே
நித்தம் உன் நிழலில் நீண்ட என் ஓய்வுகள்
உனிடம் நான் இன்னும்
பித்தன் என்பதை சொல்லவில்லையா ?
விட்டுப் பிரிகையில் வீழ்ந்திடும் என் பார்வை அம்பு
உன் வீணான எண்ண போக்கை வீழ்த்தவில்லையா ?
கட்டிலும் களிப்பிலும் கட்டுண்ட வேளையில்
காமம் மீறிய என் காதலை சொல்லவில்லையா ?

பித்தனடி நான் உன் பித்தனடி
உன் பிரியம் வேண்டுமடி
உள்ளம் வெடிக்கும் உன் பிரிவை
ஒரு அசைவால் தன்னும்
சொல்லிட விரும்பலையோ ?
சொல்லி என்ன ஆகும் என்று நினைத்திருப்பாய்
சுரணை கெட்ட ஆண் பிள்ளை தானே இவன்
எங்கு செல்வேன் ? என்ன செய்வேன் ?
என்னையும் அழைத்துவிடு
இனியொரு ஜென்மம் கொண்டு
உனக்கு தாசனாய் வாழ்ந்து முடிக்க ....

உங்கள்


ஒவொரு வார்த்தையின் விளிம்பிலும்
உருகி வழியும் உங்கள்
புரிதலின் ஊனத்தின் வாடை
யாருக்கும் உவப்பானதாய் இருப்பதில்லை .

விளங்க முடியாதா
விளங்கிக் கொள்ள முடியாத
ஏன் விளங்கி கொள்ள விரும்பாத
ஆதிக்கத்தின் பிடியில்
அடங்கி அமிழ்ந்து ததும்பி
வெளி வரும் உங்கள் வார்த்தைகள்
துப்பிய எசில்களாய் அருவெறுப்பாக ..

கோடுகளாலும் புள்ளிகளாலும்
இணைந்த கோலத்தின் மீது
ஊரும் சர்பெமென
உங்கள் அசைவுகள்
விஷத் தன்மையானதாகவும்
விரும்ப முடியாததாகவும் இருக்கிறது ..

நெடுந் தூர பயனமொன்றின் கை கோர்ப்பில்
அடிக்கடி சுரண்டும் நகங்களின் இடுக்கில்
உறையும் இரதங்களின் துர் நாற்றமென
உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மணக்கிறது ..

வெற்றிடங்களை நிரப்பும்
காற்றின் துணுக்குகளை
கிழித்து வரும்
உங்கள் குரோதப் பார்வைகள்
உங்கள் மேல் கொண்ட நம்பிகையின்
ஆயுளை அடித்துச் செல்வத்தையும்
தவிர்க்க முடிவதில்லை ...

அலரும் மலரின்
மென்மையை ஸ்பரிசிக்க துடிக்கும்
உங்கள் மனங்களுக்கு
அதன் மேன்மைகள்
என்றுமே உவப்பானாதாக
இருக்கப் போவதில்லை

எனவே விடை பெறுங்கள்
உங்களுக்கென தனியானதொரு
தடம் காத்திருக்கலாம் .

இப்படிதான் வாழ்கிறது மனிதம்

 

மனிதம் கீறும்
மனிதக் கத்திகளின்
முனை தடவி ஒழுகும் குருதி
ஆளுக்கு ஒரு நிறம் காட்டவில்லை ...

இறப்பின் பகை கொளுத்தி
எரியும் தீக் காங்குகள் எதுவும்
ஜாதிக்கு ஒரு சாம்பலைத் தருவதில்லை ..

உடல் அழுகி ஒழுகும் ஊனத்தின் மேல்
புழுத்து நெளியும் துர் நாற்றப் புழுக்கள் என
ஜாதி , இன , மத வெறிகள்
யாராலும் தீண்ட விரும்பப் படாதவையாக இருக்கிறது ..

மதத்தை வளர்கிறேன் என
மனிதனை கொல்வதும்
இனத்தை வளர்கிறேன் என
மொழியை கொல்வதும்
மொழியை வளர்கிறேன் என
இனத்தை அளிப்பவர்களும்
ஏனோ மனிதம் கொன்று
மற்றவைகளை வளர்கின்றனர் ..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
இதை நன்றே சொல்கின்றனர்
நரம்பற்ற நாக்கென்று
வரம்பற்று பேசுகின்ற
நாடி தளர்ந்திட் கிழ பழசுகளும்
ஜாதி வெறிகொண்டு பாயும் நாய்களென ..

மனிதம் விற்று மதத்தை வாங்குபவனே
தன் புனிதம் விற்று வெறியை வாங்குகிறான்
இறைமை விற்று இனத்தை தாங்குபவனே
அவன் முறைமை அற்று முடிவை தேடுகிறான்

தெருவெங்கும் மேடை கட்டி
உருவமிலானுக்கு ஏன் ஒன்பது கோயிலென
ஓலமிடும் அவன் வீட்டில் தங்கத்தில் சாமி சிலை ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என தாரணி முழங்க கூவுகிறான்
அவன் வீடில் ஜாதிக்கு ஒரு கோப்பை ..
யாதும் ஊரே யாவரும் கேளீர்
நீயும் நானும் ஒருதாய் பிள்ளை என்கிறான்
பின்னால் இவன் மதராசி என்கிறான்

இப்படிதான் வாழ்கிறது மனிதம்
இதில் எப்படி ஐயா வாழும் இங்கே புனிதம் ?

ஜாதீ

 

அன்பெனும் ஓடையில் கலந்த
காதல் பண்பெனும் தேன் குடித்த
ஜோடி வண்டுகள் இரண்டு
வாடி கிடந்ததே கிளர்ந்து ...

அகிம்சையும் வீரமும்
அறவே அற்றவர்
வெறும் மேடைப் பேச்சாய்
கொண்டவர் வெறிக்கு
காதல் கொண்டவர் ஆனார் இரை ..

யார் கண்டு பிடித்தது ஜாதி
யாரை கொண்டு புணர்ந்தது ஜாதி
உனக்கும் எனக்கும் குருதி சிவப்புதான்
உனக்கும் எனக்கும் இருதயம் இடப் பக்கம்தான்
நீயும் நானும் உண்பது சோறுதான்
நானும் நீயும் சுவாசிப்பது ஓர் காற்றுத்தான் ..

வாழும் பூமி சாதி பார்க்கவில்லை
வீசும் காற்றும் சாதி பார்ப்பதில்லை
விளையும் விதை சாதி பார்கவில்லை
வேரும் ஓடும் நீரும் உதிரும் இலையும்
ஒன்றுமே சாதி பார்ப்பதில்லை
இதை எல்லாம் நம்பி வாழும்
நீ மட்டும்தான் சாதி பார்க்கிறாய் ..

உயிர் இணைந்த பறவைகளின்
உடல் பிரிக்க வைத்தீர் ஊர் தீ
இன்று உயிர் பிரிந்த
பறவை ஒன்று
உனக்கு வைக்கும் தீ ..

நாய்களுக்கும் உண்டாம் காதல் சுதந்திரம்
பறக்கும் பறவைக்கும் உண்டாம் கலவிச் சுதந்திரம்
ஏன் பேய்களுக்கும் உண்டாம் பூர்வீக பந்தம்
கேவலம் ஆறறிவு ஜீவன் மனிதர்க்கு இல்லையே
அவன் வாழும் சுதந்திரம் ..
மனிதனாய் பிறத்தலிலும் நாய் பேய் மேலடா
நர பலி கேட்கும் சாதி சாமிகளுக்கு
இறுதிச் சடங்கு ஒன்று செய்யடா ..

கரும் புலிகள்

 

நேரம் குறித்து
நிமிடம் குறித்து
காலம் குறித்து
உயிரில் தீ மூட்டி
காலனை அழைக்கும்
கர்ம வீரர் தாம் கரும் புலிகள்

கொண்ட கொள்கைக்காய்
ஈகம் ஈயும் தியாகம் கொண்டவர்
தாகம் தன்னில் தாயகம் அடக்கி
தலைவனை நினைத்து
வெடித்து சிதருவர் ..

ஜாதிக்காக பலி எடுக்கும்
ஈனர்கள் வாழும் பூமியில்
தன இனத்துக்காக
தன்னை உயிர் பலி கொடுக்கும்
உத்தம ஆத்மாக்கள்

இன்று நீ நாளை நான்
இதுதான் இவர்கள் தாரக மந்திரம்
இன்று நான் இல்லையே என
ஏங்கும் இவருள்ளம் கண்டு
உறுதி கண்டு உருகி நெகிழும்
பாறைகள் பலவுண்டு ...

செம் பிழம்பாய் வெடித்து
தீயின் நா சூழ்ந்து
திக்கெட்டும் பகவரை
திகில் சூழ
தில்லாக புறப்படுவார் இவர் ...

மரணம் ஒரு நாள் வரும்
அதை மகத்தானதாய் மாற்றும் திடம்
மறவர் இவர்களுக்கே உரிய வரம்
மாவீரரான ஆன கரிய புலிகளே
உங்கள் மா வீரம் போற்றும் நாள் வரும்
உமை மனம் நிறைய வாழ்த்தும் ஊர் சனம் .

சண்டை

 
Photo: சண்டை 
****
எதுவும் கிறுக்கப் படாத
வெற்றுத் தாள் ஒன்றில்
உன் எண்ணங்களும்
என் வண்ணங்களும்
மோதிக் கொள்கின்றன ..
பிரசவிக்கும் எதுவோ ஒன்றை
உனக்கு சொந்தம் என்கிறாய்
நான் எனக்கு சொந்தம் என்கிறேன்
நமக்கு சொந்தம் எனும் எண்ணம்
வருவதாய் இல்லை ..

உன் வார்த்தை வருடலுடன்
ஆரம்பாமாகும் என் பொழுதுகள்
வாடி வதங்கி போகிறது
வார்த்தைகளின் அனல் வீச்சில்

உதிர்க்கப் படாத
உன் மென்மைகளை தேடி
முகப் புத்தகத்தின்
முகங்களை திருப்பினால்
ஐயஹோ அங்கும் அடிதடி
பிரபலங்கள் சண்டை
பிரபலமாக சண்டை
பிரபலத்துக்காக சண்டை
பிய்ந்து விடுகிறது .....

திடீர் என எங்கிருந்தோ வருகிறாய்
எதிர் பாராமல் பேசுகிறாய்
உன் பேச்சின் ஆரம்பம்
உன் பேச்சின்  முடிவு வரை
ஒரு பிரளயத்தை
எதிர் பார்க்க தவறுவதில்லை மனது ..

சில சமயங்கள்
குழந்தை என மனது தேம்பி அழுகிறது
பல சமயம் குமரியென சிலிர்த்து விறைக்கிறது
ஆனால் எல்லா சமயங்களிலும்
ஏங்கித் தவிக்கிறதே ..
எதுவாக இருந்தாலும் பேசிவிடு ..

ஒரு அதிகாலையின் நீட்சிகாக
ஏங்கும் பனித் துளியென
ஒரு சூரியப் பார்வையின் தீண்டலுக்காக
காத்திருக்கும் சூரிய மலர் என
ஒரு சில மென்மைகளுக்காய்
மெது மெதுவாய் ஏக்கம் படர்கிறது . 

எதுவும் கிறுக்கப் படாத
வெற்றுத் தாள் ஒன்றில்
உன் எண்ணங்களும்
என் வண்ணங்களும்
மோதிக் கொள்கின்றன ..
பிரசவிக்கும் எதுவோ ஒன்றை
உனக்கு சொந்தம் என்கிறாய்
நான் எனக்கு சொந்தம் என்கிறேன்
நமக்கு சொந்தம் எனும் எண்ணம்
வருவதாய் இல்லை ..

உன் வார்த்தை வருடலுடன்
ஆரம்பாமாகும் என் பொழுதுகள்
வாடி வதங்கி போகிறது
வார்த்தைகளின் அனல் வீச்சில்

உதிர்க்கப் படாத
உன் மென்மைகளை தேடி
முகப் புத்தகத்தின்
முகங்களை திருப்பினால்
ஐயஹோ அங்கும் அடிதடி
பிரபலங்கள் சண்டை
பிரபலமாக சண்டை
பிரபலத்துக்காக சண்டை
பிய்ந்து விடுகிறது .....

திடீர் என எங்கிருந்தோ வருகிறாய்
எதிர் பாராமல் பேசுகிறாய்
உன் பேச்சின் ஆரம்பம்
உன் பேச்சின் முடிவு வரை
ஒரு பிரளயத்தை
எதிர் பார்க்க தவறுவதில்லை மனது ..

சில சமயங்கள்
குழந்தை என மனது தேம்பி அழுகிறது
பல சமயம் குமரியென சிலிர்த்து விறைக்கிறது
ஆனால் எல்லா சமயங்களிலும்
ஏங்கித் தவிக்கிறதே ..
எதுவாக இருந்தாலும் பேசிவிடு ..

ஒரு அதிகாலையின் நீட்சிகாக
ஏங்கும் பனித் துளியென
ஒரு சூரியப் பார்வையின் தீண்டலுக்காக
காத்திருக்கும் சூரிய மலர் என
ஒரு சில மென்மைகளுக்காய்
மெது மெதுவாய் ஏக்கம் படர்கிறது .




 

கோமாளி.

Photo: ஷபா இந்த கோமாளி தொல்லை தாங்கலை என்னபத்தி கவிதை எழுத்து என்ன பத்தி கவிதை எழுதுன்னு சொல்லி என்ன டாச்சர் பண்ணிச்சு சரி ஆசப் படுறாங்க காசா பணமா கவிதை தானே அப்டின்னு எழுத ஆரம்பிச்சேன் - மிடில 
********
பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும் 
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள் 

பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும்
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள்

எதிரி


ஒவ்வொரு சொல்லாடலின் விளிம்பிலும்
ஒட்டி உலர்ந்து கொண்டு தவிக்கிறது
நட்பின் பிரியாவிடை இதழ்கள் ..
மன்னிப்பின் கரங்கள்
நீண்டு நெடுந்தூரப் பயணத்துக்கு காத்திருந்தாலும்
நிகழ்ந்துவிட ஒரு நிகழ்வு
எட்ட முடியாத இடத்திற்கு
உன்னை அழைத்துச் சென்று விட்டது .

எதிரி என்ற ஸ்தானத்தில்
உன்னை அமர்த்தி ஊர்வலம் வர
உள் நெஞ்சம் விரும்பாத வேளையிலும்
நீ அமர ஆசைப் படும்
சிம்மாசனத்தை உணகளிப்பதே
என் நட்பின் இலக்கணம் என கொள்கிறேன் .

அனுதினமும் அருகிருந்து
நீ அனுமானிக்க கூடிய
குதர்க்க விளப்பங்களுக்கு
விளக்கம் சொல்லி ஓய்வதைவிட
அங்கேயே இரு ..

தீண்டப் படாத ஒரு மலர் என
வாசனை இல்லாத ஒரு புஸ்பம் என
தேன் கொடுக்காத ஒரு பூவென
என் முழுமைகள் ஓரம் கட்டப் படுகிறது உனக்கென,
அனைத்தும் கழுவித் துடைத்த
தென்றல் ஒன்று உன்னை கடந்து செல்லட்டும்
காலம் உன் கருத்தை மாற்றும் வரை
தூரமாகவே இரு எதிரியாய் ...
காத்திருப்பேன் அதுவரை
இந்த எதிரி தோழியாய் .

கனவுகளுடன் தற்காலிகமாய் கதியற்றவள்

Photo: வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய்  இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு  வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள் . 

வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய் இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

.
கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள்

சாபம்

Photo: சாபம்
*****
மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன்  சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம் 

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன்  உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி  விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை 
செந்  தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம்  ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும் 
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன் சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம்

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன் உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை
செந் தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம் ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும்
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

மனது

Photo: மனது
****
உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது 
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..

உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..