Wednesday, August 29, 2012

வறட்சியின் கோலம்

 
 
 
உன் அலட்சியத்தின் கட்டவிள்ப்பில்
கர்பபிளக்கிறது நம் காதல்
கலைந்து போன கோலங்களாய்
கனவுகள் சிதறி கிடக்கின்றது ..


மூச்சிரைக்கும் வரை
முத்த வேள்வியில் புரண்ட இதழ்கள்
வறட்சியின் கோலத்தில்
வெடித்து சிதறுகிறது
பற்களின் அழுத்தத்தில் .....


இறுமாந்திருந்த இதயம்
இணையற்ற பறவையாகி
இறக்கைகள் துண்டாடபட்டு
இரத்த வெள்ளத்தில் மூச்சு திணறுகின்றது ...


எங்கிருந்தாய்
எனக்குள் வந்தாய்
என் உயிர் மீது உலாவந்தாய்
உயிரற்ற ஓவியமாய்
உன் நினைவுக் கிறுக்கல்களில்
உன்னை தேடி அலைய வைத்தாய்


தனிமை சிறையில்
தத்தளிக்கும் என் உணர்வுகள்
விடுதலைக்காய் ஏங்குகின்றது
விருப்பம் இல்லாவிடினும்
விழிப்பார்வை ஒன்றை வீசிவிடு
விடுதலை பெறும்.............

கரும்பாறை

 
 
 
 
இருளை விழுங்கி
ஒளியை உமிழ்ந்து கொண்டு
நிலவு நகர்ந்து கொண்டிருந்தது
என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....

என் மன சிறகில்
உன்னை மணாளனாய் வரித்து
பயணிக்க துடித்தேன் - நீயோ
வெட்ட வெளி தன்னில்
கரும்பாறை போல் இறுமாந்து இருக்கின்றாய் ..

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..

இன்பத்தை விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது....

காணமல் போகும் கனாக்களை
தேடி தேடியே நான்
நடைப்பிணம் ஆகிறேன் ..

இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...

Tuesday, August 28, 2012

காதல் பரிசாக



எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....


அன்றிலாய் உன்னுள்
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..


ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..


குருதிக் கிடங்கில்
குளித்து கிடக்கும்
குட்டி இதயம்
குடை சாய்ந்து குமுறுகிறதே
கண்களுக்கு குற்றாலமும்
மனதுக்கு மயானமும்
நினைவுக்கு நிழலையும்
காதல் பரிசாக தந்தவனே


உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேன்

எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....
 

நம் காதல்





தொலையாத இரவிலும்
தொலைகின்ற நினைவிலும்
தொடராய் தொலைகிறது - என் காதல்


பால் நிலவும் பருவத்து அடிமை
பகல் நிலவு இவளும்
பருவத்து காதலுக்கு அடிமை
தினம் ஒரு பார்வையில்
தித்திக்கும் நினைவு
தீப்பற்றி கொள்ள வாழ்கிறது -நம் காதல்


முத்தமிட்டு செல்லும் -உன்
மூச்சு காற்றை சுமந்த
தென்றல் சொல்கிறது நீ
சுமக்கும் நம் காதலை ...


நீ சிந்தும் சிரிப்பில்
சிதறி தவிக்கிறது என் மோகம்
பற்றிக் கொள்ள பலதடவை ஏங்கினாலும்
சில முகத்திருப்பலில் முழுமை அடைகிறது மோகம்..

Wednesday, August 22, 2012

காத்திருகிறது...

 

இருளை கிழித்து
ஒளியை
உமிழ்ந்து கொண்டிருந்தது நிலவு ..
என் பார்வை வட்டத்துள்
பதியும் அனைத்து காட்சிகளிலும்
அலையாக உன் முகம்
அடிகடி தோன்றி
என் நிகழ்வுகளை
இருட்டடிப்பு செய்த வண்ணம் ..

உன் வரவுக்காய்

காத்திருந்த மனதுள்
அமாவாசையின் ஆக்கிரமிப்பு
அரங்கேறிகொண்டிருந்தது ...
சமுத்திரம் சடுதியாய்
கண்களில் குடி புகுந்தது ..
உடைந்து சிதறும்
நீர் திவலைகளிலும்
உன் முகத்தை
செதுக்கிச் சென்றது
இரக்கமில்லாத உன் நினைவலைகள் ...
 
உன்னை காண துடிக்கும் இதயம்
கவிழ்ந்து படுத்து
கண்ணீர் விடுகிறது
கட்டி அணைக்க நீ இன்றி ...
ஒரு வேளை உணவுக்காய்
யாசகம் கேட்கும் பிச்சை காரியாய்
ஒரு முறை உன் முக தரிசனத்துக்காய்
முணு முணுக்கிறது மனது ...

எங்கே சென்றாய் ...?

என் பௌர்ணமியை
அமாவாசையாக்கி ...
என்று வருவாய் ..?
ஸ்ஸ்ஸ் .....
காலடிச்சத்தம்...
என் கனவுகளை சுருட்டி வைத்து
நிகழ்வுக்காக காத்திருக்கும் கண்கள் ...
ஏக்கத்துடன் மனது ...
ஏமாற்றத்தையும் எதிர்பார்த்து
காத்திருகிறது உனக்காய்...

Tuesday, August 21, 2012

என்றும் காதலோடு ...

 



 பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..

உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....

என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......


நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...

இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
                                                         என்றும் காதலோடு ...

Monday, August 20, 2012

உதறபட்ட உணர்வு...

 
என்றோ ஒருநாள்
என்னை நீ பார்ப்பாய்
எதிர்பார்ப்பில் வளர்த்தேன்
என் இனிமையான காதலை
பார்த்தாய் .. பார்த்தாய்
பற்றி கொண்டது பரவசமாய் இதயங்கள்

இடறி விழும் போதெல்லாம்
இதமாய் தாங்குவாய் என்று
இருளிலும் நடை பயின்றேன்
வெளிச்சமாய் நீ வருவாய் என்று
இயற்கையாய் இருந்த ஒளி கூட
ஒழிந்தோடி போனதடா ..
இடறி விழுந்து..
இதயம் காயமானது ...

உன் வார்த்தையில்
உடைந்து போன என் இதயம்
ஒவோன்றாய்
உன் நினைவு சிதறல்களை
பொறுக்கி எடுத்து
ஓட்ட வைத்து
துடிக்கின்றது ....

கருகி போன இதயத்தில்
காதலை தேடி பார்கின்றேன்
சாம்பலாய் அது இன்னும்
உன் பெயர் சொல்லித்தான்
உயிர் வாழ்கிறது ...

உதறபட்ட உணர்வுகளுக்கு
உன் அலட்சியங்களை
சொல்லிப் பார்கின்றேன் ..
உன்னவன் தானே
உருகிவிடு என்கிறது உணர்வு ..

தன்மானத்துக்கு சவால்விடும்
என் காதலுக்கு
நானும் பலி என் மனதும் பலி ...
தினம் உன் நினைவில்
சந்தோசமாய்தான் சாய்கிறேன்
சகதியாய் நீ கழுவி சென்ற போதும்..