Sunday, January 27, 2013

துணுக்கு

 

உன் நினைவுகளின் இருப்பு
உன் மீதான காதல்
நம் பிரிவு
நிமிடத்தில் எழுதியவை

வெறுமைகளின்
வறண்ட நிலத்தில்
சில பசுமை விதைகளாய்
உன் புன்னகை
தூறல்

என் கனவுத்தேரை
கடுகதியில் அழைத்து
இழுத்து செல்லும்
நினைவுகளே நீங்கள்
சில்லுகள்

விரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை வனத்தினுள்
வழிகாட்டியாக
அவ்வப்போது உன் வார்த்தைகள்
கொசுத் தூறல்

மனம்



தெருவோரம் நின்று திரும்பி பார்த்தேன்
என் மனவோரத்தை போல
பல மேடு பள்ளங்கள்
குப்பை கூளங்கள்
குட்டைகள்
கோவில்
சுடுகாடு
பூவனம்
என நிறைந்து வழிந்து கொண்டிருந்தது ..

Monday, January 21, 2013

அழகிய நிலா

 

அழகிய நிலவாய்
உன்னை போல்
அரும்பாய் இருந்திருந்தால்
அனைவர் மனதிலும்
அழகாய் சிம்மாசனம் இட்டிருக்கலாம் ...

அளவில்லா கொஞ்சலும்
அன்பான கெஞ்சலும்
அட்ச்யமாய் கிடைத்திருக்கும்
பூ பூவாய் சிரிப்பும்
புன்னகையின் தேடல்களும்
உன் பிஞ்சு மனதின் கள்ளமில்லா சிரிப்பில்
கல கலவென பூத்து கமழ்ந்திருக்கும் .

வஞ்சமிலா நெஞ்சணைத்து
வளவளக்கும்  பாஷை கேட்டு
ஒவொரு உளறல்களுக்கும்
உருப்படியாய் வார்த்தை  தேடி
உவகை கொண்டு மகிழ்ந்திருப்பர்

சிரி இபொழுது மொத்தமாய் சிரி
வயதானால் உன் வாயை அடைக்க
வாலிபர்கள் காத்திருப்பர்
உன் வனப்பு மீது மோகம் கொண்டு
காமுகர்கள் வலை விரிப்பார்
காதலனால் நீ ஏமாற்ற படலாம்
கணவனால் வஞ்சிக்க படலாம்
நண்பனால் துரோகிக்க படலாம்
நயவஞ்சகங்கள் சூழ்ந்து
நலுங்கு பாடலாம் ..
ஆதலால் இன்றே சிரித்துவிடு
எதிர் காலம் உனக்கு எப்படி இருக்குமோ ..!!!

Thursday, January 10, 2013

சிறு பருவம்

 


நீயும் நானும்
நிழலாடிய மரங்களும்
நினைவாடிய செயல்களும்
குழைந்தாடிய  வனப்பும்
நுழைந்தடிய புனலும்
மனதெங்கும் நினைந்தாடுகிறது ...

நாம் கடந்து வந்த
நம் சிறு பருவம் எல்லாம்
பெரும் பொக்கிசங்களாக
மனதின் ஓரத்தில்
மகிழ்வினை பிரசவித்து கொண்டிருகிறது
நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் ...

நுண்ணிய எறும்பு பிடித்தோம்
நூல் கொண்டு பட்டம் விட்டோம்
தெள்ளிய ஓடையிலே
தெவிட்டாது மீன் பிடித்தோம்
துள்ளிய  கன்றடக்கி
தூய்மையாய் நீராட்டினோம்
மெல்லிய சிரிபொலியில்
மகிழ்வின் எல்லைகள் தொட்டோம் ...

பிஞ்சு பருவம்
நஞ்சற்ற அமுதம் ..
வஞ்சகங்கள் தெரிவதில்லை
வன் செயல்களும் புரிவதில்லை
வருந்தி எதிலும் வாயடியதில்லை
எண்ணியதை செய்தோம்
அதில் ஏற்றதாழ்வு இல்லை
கண்ணியம் குறைந்ததில்லை
களவு ஏதும் இருந்ததில்லை ..

இன்று நாம் வளர்ந்து விட்டோம்
நம் இன்பங்கள் எல்லாம் தொலைத்து விட்டோம்
வெறும் வம்பர்கள் மத்தியல்
எய்யும் அம்பென்று ஆகிவிட்டோம் ..
அது எம்மையும் தாக்கலாம்
பிறரையும் தாக்கலாம்
தாக்கங்கள் நிச்சயிக்கபட்டவை
தடங்கல் இன்றி தன் பயணம் அது தொடரும் ...

இருந்தும் ஆழ்மனதின் ஆசை ஒன்று
ஓசை எழுப்புகிறது
மீண்டும் அந்த பால்ய பருவம்
மீள் எழுச்சி கொள்ளாதோ ...

Tuesday, January 1, 2013

நெருஞ்சி..

 

 தவிர்க்க முடியாத
பல பொழுதுகளை
களவாடி செல்லும்
உன் நினைவு விம்பங்களுக்கு
உருவம் கொடுத்து பார்க்கின்றேன் ..
ஓவொன்றும் என்னுள் உடைகின்றன ...

என்னை சூழ்ந்திருக்கும்
இந்த அமானுஷ்யத்திலும்
அருவமாய் உன் உருவமே தெரிகிறது
கண் மூடி துயில நினைக்கிறேன்
இணையும் இமைகளின் ஊடே
உள்  நுழைந்து உருவம் கொள்கிறாய் கனவாக ..

அணு அணுவாய் இம்சித்து
அனைத்தையும்
உன் வசப்படுத்த
உன் நினைவு கரங்களின்
ஆத்தம பிடிப்பில் அடங்கி அமிழ்கிறேன் ..

ஏக்கமாய் ஒரு வார்த்தை
என்னில் இருந்து பிறக்க
உன்னில் இருந்து
கணமும் தயக்கமிண்டி பிறந்தது
அது நான்தானா ...?
உடைந்து சிதறிய
கண்ணாடி கோப்பை என
பரவி தெறித்தது இதயம் ..
பரிதாபம் ..
சிதறிய ஒவொரு துண்டிலும்
தெரிந்தாய் விம்பமாக...

நெருஞ்சியாய் வார்த்தைகள்
நெஞ்சை தைப்பதை அறிதும்
சிதறிய துகள்களில்
உன்னை பார்க்க தவறவில்லை இதயம் ..

Sunday, December 30, 2012

காதல் அனிமேஷன்

 Love Rose Animated Picture


வண்ண வண்ணமாய் பூக்கள்
வகை வகையாய் பூத்தாலும்
காதலுக்கு ஏனோ
கரும் சிவப்பு ரோஜாதான்
சின்ன சின்னதாய் ஆரம்பித்து
பெரிது பெரிதாய் மிளிரும்
வண்ண வண்ண நகர்வுடன்
வடிவு வடிவாய் பூ இதழ்கள்

செக்க செவேல் என
பூவரசம் இலையின் வடிவத்தோடு
பளபளத்த இதயம் பார்த்து
இதயம் இப்படிதான் இருக்குமோ
ஐயம் அன்றே எழுந்தது ..
கூரான அம்பு ஒன்று
வம்பு செய்வது போல்
ஓடி வந்து உள்  புகுந்து
வெளியே வரும்
காதல் வந்ததற்கு
இப்படி கடுமையான தாக்குதல் தேவைதானோ ..?

அக்காவும் அண்ணாவும்
அகல் விளக்கிலும்
நகல் எடுப்பது போன்று
வர்ண வர்ண பூக்களின் நடுவில்
புதைத்து வரைந்தனர் இதயத்தை ..
அர்த்தம் புரியவில்லை அன்று ..

இந்தும்  அதே நிலைமை
மாற்றம் ஒன்றுதான்
அன்று அக்கா
இன்று நான்
அன்று வர்ணத்தூரிகை
இன்று ......
இருங்கப்பா
கூகுள் இமேஜ் ல
சேர்ச் பண்ணி பார்த்திட்டு வாறன் ...

அடடா ...
இதுதான் அன்றைய காதல்
அழியாத ஓவியமாய் ஆனது
இன்றைய காதல்
அரை நிமிடம்
வலை தொடர்பு அற்று போவது போல் போச்சுது ..
காதல் சிம்போல் எல்லாம் என்றும் ஒன்றுதான்
காதல் சிம்பிளா போச்சுது இன்றுதான் ..

ரெட்டை ரோஜாக்கள் ..

 

உள்ள குளத்தில்
ஒன்றி விழுந்த
ரெட்டை ரோஜாக்கள்
நிறம் வேறு வடிவம் வேறு
உள்ளம் மட்டும் ஒன்றிவிட்ட ஒன்று ..

தெள்ளிய நீராய்
தெளிவாய் ஓடும் காதல் புனல்
மெல்லிய கரங்களால்
ஆரத்தழுவி அகத்துள் நிறைத்துகொண்டது

சீ கொஞ்சம் தள்ளியே இரேன்
மூச்சு முக்குளிக்கும்
முழுதான வேளையிலும்
உன் உரசல் இன்னும்
தீ மூட்டி கொல்லுதடா ..

மூச்சு முட்டியல்ல
மோகம் முட்டி
தேகம் இழக்க போகிறது உயிர் ..
இதுதான்
தண்ணீரிலும் தாகம் கொள்வதா ...
நம் மோகம் கண்டு
தண்ணீரும் சலனம் கொள்ளுது பார் ..

மோக குளத்தில் முக்குளித்த தருணம்
என் தேக தளத்தில் சுட்டேரிக்குது சலனம்
தாக தேசத்தில் தண்ணீர் இருந்தும் வரட்சி
போகத் தளத்தில் போஜனம் இருந்தும் பசி
காதல் நிலத்தில் விதைகள் இருந்தும் தரிசு
பூவாய் நாம் முட்டி கொண்டது போதும்
கொடியாய் நாம் பற்றி கொள்ளலாம்  வா