Tuesday, July 3, 2012

என் கால்கள்



பசுமையாய் இருந்த
என் காதல் வனம்
புயல் அடித்த பூவனமாய் போனது
காடுகள் மேடுகள் தாண்டியும்
உன்னை தேடி என் கால்கள்
நகர்ந்து கொண்டே இருக்கிறது ..
உன்னை வெறுத்துவிட துடிக்கிறேன்
என்னை இறப்பு தழுவுமானால்

நினைவுகளுடன்





என் உணர்வுகளின்
ஒவொரு அணுவும்
உனக்காக ஏங்குகின்றது ...
உன் தீண்டலுக்காய்
உன் வாசத்தை சுவாசிக்கும்
தருணங்கள் வாய்க்குமோ
என் தேசத்திலும்
சில பூக்கள் பூத்திடுமோ..
அன்பே உன்னை நீங்கினாலும்
உணர்வால் நீங்காத உன்னவள் ..
உன் நினைவுகளுடன் ...

நினைவுகள் என்னுள் வாழும் ..





உன்னால் ஒதுக்கப் பட்டவள்
உன்னை விலகி செல்கிறேன்
உன்னை மட்டுமே விலகி செல்கிறேன்
உன் நினைவுகளை அல்ல ..
தொலைவினிலே நீ இருந்தாலும்
தொலையாது உன் நினைவுகள் என்னுள் வாழும் ..




Monday, June 18, 2012

சந்தேகம்

உண்மையான காதல்
சந்தேகம் கொள்ளது
சந்தேகம் கொண்டால்
காதலும் வாழாது
வாழாமல் போகுமா என் காதல் ?
என்னை நீ சந்தேகிப்பது
உன்னை சந்தேகிப்பது
ரெண்டுமே ஒன்றுதான் ..
உணர்வாயா என் அன்பே ?



ஏங்கும் நான் ..

எத்தனை கொஞ்சல்கள்
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..

உனக்குள் நான் இருப்பேனா

எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...

எத்தனை எதிர்பார்ப்பு

எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும்
நான் ..



மோட்சம் பெறும்


உன்னிடம் பேசிவிட துடிகின்றேன்
இருந்தும்
என் கண்ணீர் துளிகளே
என் மனதுள்ளே
நான் பூட்டி வைத்ததை
 காட்டி கொடுத்துவிடும்

என் கண்ணீர் கூட
என்னிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
உன்னைப்போல் ..
அதுவும் என்னை
உதாசீன படுத்துகின்றது ...

என் உப்பு துளிகளை
ஒரு முறை சுவைத்துவிடு
என் கண்ணீர் துளிகளும்
மோட்சம் பெறும்


 

நரகம் ...

நீ இல்லாத வாழ்வு
நரகம் ...
அது உனக்கும் தெரியும் ...
உனக்கு சம்மதம் என்றால்
நரகத்திலும் வாழ்ந்திடுவேன் ..

ஓராயிரம் வலிகளை

உள்ளுக்குளே சுமந்து
உதட்டால் சிரிக்கின்றேன்
உனக்காக ...
உணர்ந்தும் வதைப்பயோ
உன்னை தருவாயோ ..'?