Thursday, July 19, 2012

அலை



அந்தி மாலை
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....


சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...


அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...



அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு 
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய்
..


Sunday, July 15, 2012

ஏன் ...?

 
 
 
ஏன் ...?
எதுவும் புரியவில்லை ..
உனக்காக சுவாசித்தேன்
உன்னையே நேசித்தேன்
இருந்தும் ..
என் மீது ஏன் வெறுப்பு கொள்கிறாய் ...
என் இரவுகள் விடிவதில்லை
உன் உறவுகள் தொடராத போது..
என் உணர்வுகள்
உணர்வதே இல்லை
உன் உதடுகள் தீண்டாத போது ...
என் கனவுக்கு அழைப்பு விடுத்தவனே
காலனுக்கும் அழைப்பு விடு
உன் காதலி துயில் கொள்ள ...
 
 
 

எண்ண சிறகு




 
நீ இல்லாத தனிமைகளில்
உன் நினைவுகளில்தான்
றெக்கை முளைகின்றது
என் எண்ண சிறகடித்து
உன்னை சேர ..
என் தனிமைகளின்
சோகங்களை சொல்ல
எண்ண சிறகுகளே
வண்ண சிறகுகளாய்
உன்னை தேடி ....
 
 
 

காத்திருப்பேன்

 
 
உன் நினைவு சிதறல்களை
கவிதையாக்கி
என் கண்ணீர் துளிகளை
பேனாக்கு மையாக்கி
உன் அலட்சியங்களை
அதில் புதைத்து
அன்பே உனக்காய்
அதில் உறங்கி காத்திருப்பேன்
என்றும் உன்னவளாய் ....
 
 
 
 
 

Friday, July 13, 2012

காதல் பரிசு ..

அங்கம் உரச
அணுவும் தீ பற்ற
அணு அணுவாய் ஆகிரமித்தாய்
அழகாய் அன்றலர்ந்த தாமரையாய்
உன் கையில் அவள் ...
உன் வேட்கை தீக்கங்குகள்
விரகமாய் பற்றி கொள்ள
விரசமாய் விரகமாய்
உன் தீண்டல் எல்லை மீறி
சுகத்தின் எல்லையை தேட
மோகத் தீயில் முழுவதுமாய் அவள்
முனகலோடு உன்னை அழைக்க
முழுவதுமாய் ஒன்றிவிட்டாய்..
உன்னை நேசிக்கும் ஓர் இதயம்
ஓரமாய் உக்கார்ந்து
உலகமே அழிவதாய்
ஒப்பாரி வைப்பது தெரிந்தும் புறக்கணித்து ...நீ தொடர
தனக்கே சொந்தமான ஒன்று
தன் கண் முன்னே கலைவது கண்டு
தன் இயலாமை எண்ணி
கண் மடல் வழி வழிந்த உப்பு துளிகள்
உறக்கத்தை கலைத்தபோது
தெரிந்து கொண்டேன்
கண்டது கனவென்று ..
கனவில் கூட என்னை கண் கலங்க வைக்கும்
உன் கல்நெஞ்சு
காலத்துக்கும் எனக்கு பரிசு
காதல் பரிசு ..


Tuesday, July 3, 2012

என் கால்கள்



பசுமையாய் இருந்த
என் காதல் வனம்
புயல் அடித்த பூவனமாய் போனது
காடுகள் மேடுகள் தாண்டியும்
உன்னை தேடி என் கால்கள்
நகர்ந்து கொண்டே இருக்கிறது ..
உன்னை வெறுத்துவிட துடிக்கிறேன்
என்னை இறப்பு தழுவுமானால்