Saturday, March 23, 2013

இளவேனில்

 

இருள் மெல்ல துயில் களையும்
காலைப் பொழுது
பகல் கொண்ட வெம்மை தணிக்க
பனி கொண்டு மூடி
படுத்துறங்கிய பகலவனும்
மெல்ல துயில் கலைவான் ..

மெல்லிய புல்தரையில்
சிந்திய பனி துளிகள் பட்டு
சில்லென சிலிர்த்தது புல்வெளி
கள்ளென போதை கொண்டு
தன் கண்களை மூடிக்கொள்ளும்
காற்று வெளி ..
கண்களை திறந்து
காண்பவை எல்லாம்
கண் நிறையும் கற்பனையில்
இறகுகளின் போர்வைக்குள்
இன்னும் ஒருக்களித்து
உறங்கும் ஒரு பட்சி ..

விரிகின்ற ஒளிக்காய்
படர்ந்து பரிதவிக்கும்
பனிப்புகார் தன்னுள்
மறைந்து விசிக்கும்
மரங்களின் குளிர்மை சொல்லும்
இதுவொரு இளவேனில் காலம் .

இயற்கையின் எழில் களையும்
இரும்பு மனம் கொண்டவர்க்காய்
வெளிகளுக்கு வேலிகள்
மரங்களுக்கு மரத்தடுப்பு
மனங்கள்போல்
மரமும் மடை மாறுமோ ..?

Friday, March 8, 2013

நிலவுக்கும் குடை பிடிப்பேன்

http://muslimvillage.com/wp-content/uploads/2012/08/Muslim-Women-sad.jpg
ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய் உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம் செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..

ஆயுதம் செய்வோம்

 
 

நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
பெண்ணின் இலக்கணமாம்
நிரந்து நடந்தால் திமிர்
நேர்கொண்டு பார்த்தால்
வெட்கம் அற்றவள்
பாரதியே பார் இந்த சதியே ..

காலம் காலமாய்
பெண்ணின் கனவுகளை
காவு கொண்டவர் தாம்
கண்ணியமாக
பெண்கள் தினத்தை பற்றி
வெகுவாக சொல்கிறார்கள்
எத்தனை பெண்களுக்கு தெரியும்
இன்று தமக்குரிய நாள் என்று ..?

ஓடி ஆடி களைத்து ஓய்ந்தவளுக்கு
ஒரு மிடறு தண்ணீர்
யாரவது இன்று கொடுத்தீர்களா ?
குழம்புக்கு புளி  இல்லை
சோறுக்கு உப்பில்லை என்பீர்
துப்புக் கேட்டவரே ...

தாயை தாயக பார்க்கும் நீங்கள்
மனைவியை பேயாய் பார்பதேனோ ?
பெண்ணுக்கு எதிரி பெண்தான்
பெண்மையை போற்ற சொல்வதில்
பெரிதாய் குறை காண ஒன்றில்லை
பெண்மை என்பதை இனம் கண்டால்தானே
நீவீர் பெண் என்பவளை மதிக்க .

மாவு அட்டும் அம்மி கல்லு அவள்
அதனால்தான் எதுவென்றாலும்
உறைக்காது என்று உளறி கொட்டுகின்றனர்
வக்கிர எண்ணம் கொண்ட வாழ்க்கை துணைகள் .

துவைத்து போடும் வாஷிங்  மிசின் அவள்
அதனால்தான் தானோ
உங்கள் அழுக்கெல்லாம் அவளால்
தினம் தினம் அகற்றப் படுகிறது ..

கூலி இல்லா சமையல் காரி இவள்
தாலி என்று வேலி  போட்டு
கேலி பேசி வருத்துகின்றீர்கள் .

பெண்ணாய் பிறந்ததானலோ
ஆண் கொள்ளும் போக பொருள் ஆனாள் ?
வன் புணர்வு கொள்ளும் வக்கிரங்களே
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்
உங்களை உலகுக்கு தந்த வாசல் ஒன்றை
உருக்குலைப்பது உமக்கு தெரியும் .

பெண்கள் பிரதமராகலாம்
வீராங்கனைகலாகலாம்
வெற்றி வாகை சூடும் முயற்சியாலர்ககலாம்
வீடு கூட்டும் ஆயா ஆகலாம்
விளையாடும் குழந்தை ஆகலாம்
மைக் பிடிக்கும் பேச்சாளர் ஆகலாம்
கவிதை புனையும் கற்பனா சக்தி ஆகலாம்
கற்பென்று வந்துவிட்டால்
கப்பென்று ஓடி ஒளியும்
பெண்கள் தான் இவர்கள் ...

ஆயுதம் செய்வோம்
அதில் ஆளுமை வெல்வோம்
கூடி களித்திடும் கூத்தியர் மத்தியில்
ஆடி திரிந்திடும் ஆண்மையை அறுப்போம் .
காவியம் செய்வோம் அதில் ஓவியம் ஆவோம்
காத்திடும் ஆடவர்க்கு எல்லாம்
கணம் சூக்குமம் ஆவோம் .
வாக்கது கொள்வோம்
வாய்மையே வெல்வோம்
சாக்காடு வரினும்
பெண்மை சாகாது வாழ்வோம் .

Wednesday, February 27, 2013

மாவீரரே ...



 
மாவீரரே ...
தமிழ் ஈழம் எனும் வாகைகாய்
உங்கள் வேர்கொடுத்த விழுதுகளே ..
தமிழ் ஈழத்தின் மயில் கற்கள் நீங்கள்
ஈழ கனவுகளை மனதெல்லாம் சுமந்து
மரணத்தின் விளிம்பிலும்
உதிர்த்து மரித்த தேசபக்தர்கள் நீங்கள்..
கால பதிவேட்டில் தமிழ் ஈழம் என்ற சொல்லை
பதிவாக்கி சென்றோரே ...
மரணத்தை அழைத்து மனுகொடுத்த மாவீரரே
மரணம் பார்த்து பயந்த மறவர்கள் நீங்கள் ...

நாளாந்தம் எம் உணர்வுகளோடு உறவாடும் உங்களை
மாதம் தேதி குறித்து நினைக்கவில்லை ...நிதம்
மனதார நினைகின்றோம் ..
மரணத்தின் வாயிலில் எம் இனம் மரணத்தை புசித்தபோது
ஓடி வந்து தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள் நீங்கள் ..
தேசமே அழுகுதுபார் ... உன் தீவிர தேசபக்தி கண்டு .

உயிருளும் மேலானது மானம்
மானத்தை விட உயிர் பெரிதல்ல ...
துச்சமாய் மதித்து துறந்தீர் தமிழன் மானம் காக்க .
கண்ணை இமை காப்பது போல்
மண்ணை காக்க மரணத்தை சுகித்தீரே ..
மரணம் பெருமை கொள்ளுதடா
மாவீரா உன் தீரம் கண்டு ...

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தமிழுக்காய் தமிழ் இனத்துக்காய்
தமிழ் தேசத்துக்காய் ஈகமாய் தந்தவரே
நீங்கள் செத்தவர்கள் அல்ல
செதுக்கபட்டவர்கள் .. தமிழ்
பதிவாக்கி சென்றோரே ...
மரணத்தை அழைத்து மனுகொடுத்த மாவீரரே
மரணம் பார்த்து பயந்த மறவர்கள் நீங்கள் ...

நாளாந்தம் எம் உணர்வுகளோடு உறவாடும் உங்களை
மாதம் தேதி குறித்து நினைக்கவில்லை ...நிதம்
மனதார நினைகின்றோம் ..
மரணத்தின் வாயிலில் எம் இனம் மரணத்தை புசித்தபோது
ஓடி வந்து தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள் நீங்கள் ..
தேசமே அழுகுதுபார் ... உன் தீவிர தேசபக்தி கண்டு .

உயிருளும் மேலானது மானம்
மானத்தை விட உயிர் பெரிதல்ல ...
துச்சமாய் மதித்து துறந்தீர் தமிழன் மானம் காக்க .
கண்ணை இமை காப்பது போல்
மண்ணை காக்க மரணத்தை சுகித்தீரே ..
மரணம் பெருமை கொள்ளுதடா
மாவீரா உன் தீரம் கண்டு ...

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தமிழுக்காய் தமிழ் இனத்துக்காய்
தமிழ் தேசத்துக்காய் ஈகமாய் தந்தவரே
நீங்கள் செத்தவர்கள் அல்ல
செதுக்கபட்டவர்கள் .. தமிழ்
மக்கள் மனதில் பதிக்கப்பட்டவர்கள் ..


வேங்கையாய் பாயும் வீரியத்தில்
ஓர் வீர யுகம் கலந்திருக்கும் ..
உதிரம் கொடுத்து உரிமையை பேசும்
உங்களின் ஈகம் உயர்ந்ததடா
பல துரோகங்கள் மத்தியில்
துண்டாடபட்ட எம் ஈழமண்ணின்
எழுதுகோல் நீங்களடா ...

உறவுகள் கூடி உல்லாசமாய் பொழுதாடும் நாளல்ல இது
நம் உணர்வுகள் கூடி உரம் தேடும் நாளிது ..
அழுது அழுது ஆறேன கண்ணீர்
கல்லறைகளை அனைப்பதால்தான்
அர்த்தம் பெறுகிறது மாவீரர் துயிலும் இல்லங்கள் ..
அங்கு சந்தண மேனியர் சாய்ந்து உறங்குவதால்தான்
அமங்கலமே மங்கலமாய் மணம் வீசுது ...

சத்தியநாதன் சங்கரோடு தொடங்கிய
தமிழ் ஈழ ஈகை பயணம் ..
சத்தியத்தை காக்காது போய்விடுமோ ..
தளராத முடிவோடு களமாடி சாய்ந்தீர்
இன்று தமிழ் ஈழம் கனவாகி போய்விடுமோ ... வாரீர் ...

வேங்கையாய் வீறு கொண்டவரே
மரணத்தை தேங்காயாய் மென்று துப்பியவரே ..
தீ காங்குகள் கூட தீரம் இழந்தது உன்னை தீண்ட
ஆழ கடல்களும் அதிர்வு கொண்டது உங்கள் அசைவுகண்டு
பாச மனங்களும் பதறி துடித்தது பிரிவு கண்டு ...
உங்கள் ஆன்மா உருகிய ஈகை தீயில்
எரிந்து கருகியது எதிரிகள் மோகம் ...

மாவீரரே எந்த கனவினை சுமந்து
தமிழ் ஈழ சுதந்திர சொர்கதிர்காக
காலத்தோடு கலந்தீர்களோ ..
அந்த ஈகத்தை தாகமாக்கி
தவழும் தமிழ் ஈழம் வெகு விரைவில் ...

தனித் தீவின் கரை



 

தனித் தீவின் கரைகளை போல்
அவ்வப்போது உன்
உடல் தீவின் கரைகளை
எட்டிப் பார்க்கிறது
என் எண்ண  அலைகள் ..

உன் நெஞ்சில்  நுரையாக
என் எண்ண  நுதல்கள்
ஒட்டி என் தேக வெப்பத்தை
உள்  உறிஞ்சி
என்னுள் உறுதியை
உடைத்து சிலிர்க்கிறது ..

கரை தடவும் நண்டுகள் போல்
நுரை தடவி நுதல் தடவி
இதழ் கரை கடந்து
காம சந்துக்குள்
ஒளிந்து கொள்ள துடிக்கிறது
ஒற்றை விரல் ...

செவி கடந்து கேட்கும்
அலை கடலின் ஓசையை போல்
உன் இடை படர்ந்து
இசைபாட துடிக்கிறது
என் இன்ப லயம் ...

வா வந்துவிடு
என் வளை கரத்துள்
வசமிழந்து
வாய் குளறும் பொழுதுகள் நீள்வதட்காய் ...

Monday, February 4, 2013

நம்பிக்கை எனும் நூல்

  

எங்கெங்கோ பிறந்தோம்
எதிராளிகள் போல் சண்டை போட்டோம்
ஏமாந்த பொழுதெல்லாம்
ஏமாறுபவர் தலையில்
மிளகாய் அரைத்தோம்
இறுமாந்த  பொழுதெல்லாம்
வெறுமாந்து பொழுதுகளாய்

நட்பு  என்பது ஒரு கூடு
அதில் நம்பிக்கை என்பது நூலு
கூட்டில் ஆயிரம் ஆயிரம் பறவைகள் மாறலாம்
அன்றிலாய் சில பறவைகள் வாழலாம்
தென்றலாய் பல புயல்களும் வீசலாம்
தெரிந்தே பல பிரிவுகள் நேரலாம்
தெவிட்டாத பல நினைவுகள் வாழலாம்
நித்தம் நித்தம் பல இன்பங்கள் சூழலாம்
நினைவுகளே சந்கீதமாகலாம்
நீ இன்றி நான் இல்லை எனும்
கதி ஒன்றும் தோன்றலாம்
உன் தோல்விகள் எல்லாம்
பல கண்களில் கண்ணீரும் ஆகலாம்
எட்டாத உயர்வுக்கு நீ சென்றும் வாழலாம் 
எள்ளி நகையாடுவோர்க்கு
எஹ்ஹு போல் வளையாது நிற்கலாம்
வற்றாத ஜீவநதியாய் வளங்கள் பல தோன்றலாம்
கட்டாத கோவிலுக்கு தெய்வமும் ஆகலாம்
காலம் தவறாத  பூஜைகளும் நடக்கலாம்
கடை கண் பார்வைக்கு கன்னியரும் ஏங்கலாம் ..
கான்போர்கெல்லாம் கண்ணியமாய் தோன்றலாம்
இவை எல்லாம்
நட்பெனும் கூடு இணைத்த
நம்பிக்கை எனும் நூல் அறும்  வரைதான் .

Monday, January 28, 2013

கயல்விழி

 
வான் மகளும்
மஞ்சள் பூசும்
பொன்மாலை வேளை
வண்டுகள் திருடிய
தேன் எல்லாம்
வகை வகையாய் பதுக்கும்
தேன்  மாலை ...
ஆதவனும் வீடு திரும்புவான்
ஆடு மேய்த்த
அருக்கானியும் வீடு திரும்புவாள்
பார்மகளும் மஞ்சள்
போர்வை கொண்டு
பொழுதை மூடுவாள்

கார் குழலில்
பூச்சூடி
கண்ணிரண்டில் மை தீட்டி
கமகமக்கும் அத்தர் இட்டு
கையிரண்டில் வளையல் மாட்டி
காதுகளில் ஜிமிக்கி ஆட
கன்னமதில் வெட்கம் பூக்க
நில மகளும் நாணும்
நீள் விழிகள் தொலை நோக்கும்

வண்டி கட்டி குதிரை பூட்டி
வருவேன் என சொன்னவர்தாம்
வருகின்றாரோ
அன்றில் வெறும்
வண்டினமாகி
மலர் விட்டு மலர் தாவி
மருகும் உளம் காணாது
ஒரு பொழுது தவிக்க விடுவானோ ..

வெறும் அகம் நோக்கின்
அகுது கெஞ்சும்
புறம் நோக்கின்
அகல்கள் கெஞ்சும்
இதழ் நோக்கின்
இனிமை கொஞ்சும்
உன் முகம் நோக்கின்
முழுதும் அஞ்சும்
என் முளுமைகளும் கெஞ்சும் ..

நிலவு கண்டு கூசும் வெண்மை
நினைவு கொண்டு தேடும் பெண்மை
கனவு கண்டு காளையர் பிதற்றும்
கட்டழகி கயல்விழி
தொட்டனைக்க வருவாரோ என
காத்திருக்கும் வேளைதனில்
எட்டி நின்றே வதைதிடுவானோ
இல்லை அருகில் வந்து
அணைத்திடுவானோ  ...?