Thursday, May 31, 2012

பால்ய பருவம்..




அழகான என் நட்பு
அரை குறையாய் போனபோதும்
அழியாத நினைவுகளை
அந்த நாள் ஞாபகங்கள்...

கூட்டாக சேர்ந்து
குருவிகளாக 
கும்மாளம் அடித்து
அதிபரிடம் குட்டு வாங்கும் போது
பள்ளிக்கூடம் வெறுத்து ...
பழிவாங்கும் முகமாக
மொட்ட மண்டை... பட்டபெயர் வைத்தபோது
வலிகளும் மறந்தது ...



ரகசியமாக
வினாத்தாள்களின்¨
விடைகளை பரிமாறி
ஒரே புள்ளிகள் பெற்றபோது
நாம் ஒற்றுமைகளை நினைத்து
பள்ளி அறையே வியந்தபோது
நமுட்டாக சிரித்தபோது
சோதனைகளும் சுகமாகதான் இருந்தது ...



கோவில் திருவிழாக்களில்
சொல்லி வைத்து ஆடை அணிந்த போதும்
அவனுக்கும் கொடு என்று சொல்லி
கச்சானை பகிர்ந்த போதும்
ஆண் பெண் பிரிவின்றி
நட்பும் ஜொலித்து ...

பருவத்துக்கு வந்தபோது
பக்குவம் சொல்வதாய்
பால்ய சினேகிதனுக்கும்
பத்தடி தூரம் வைத்து கலாச்சாரம் ..



பறந்தாடி பல
குட்டை குளமெல்லாம்
நுழைந்தாடி ... புழுதியெல்லாம் குளைந்தாடி
குச்சிமிட்டாய் திருடி அடிவாங்கி ...
மாமரத்து அணில்களாய்
மரம் தாவி ...
மங்களம் மாமியிடம் அடிவாங்கி
மனதோடு சபித்தபோதேல்லாம்
இனித்த நட்பு .....


இன்று  நினைத்தாலும்
ஏக்கம் கொள்கிறது ...
என் சிறுவயது நட்பு வேண்டும்
சிறுக சிறுக சில்மிஷம் செயும்
என் பால்ய பருவம் வேண்டும்..

எல்லாம் இழந்து ..
இன்றும் வாழ்கிறேன்
என் இணையத்து
அருமை தோழர் தோழிகளால் ...

நான் இருக்கும்வரை
என் நட்பும் நம் தோழமையும்
என்றும் வாழும்
என் தோழர்களே ...








No comments:

Post a Comment