ஏன்.... ?
என் ஏக்கங்கள் புரியவில்லையா ...?
என் தேக்கங்கள் தெரியவில்லையா ...
எதற்காக இப்படி ...
சல்லடையாக கிழித்த பின்பும்
என் சலனங்கள்
உன்னை சுற்றியே
உலா வருகின்றது ...
கர்த்தரை சிலுவையில் அறைந்தார்கள் வரலாறு
என்னை நீ எதற்காக அறைகிறாய்
உன் வாழ்க்கை வரலாற்றில்
என்னை அடிகடி நினைத்து கொள்ளவா ..?
என்னை கொல்கிறாய்...?
உன் வார்த்தைகளால்
என் இதயம் கிளிக்கபட்டும்
என் வதனம் விசனப்பட்ட போதும்
உன் மேல் சலனப்பட
தயங்கவில்லை
என் வேட்டகம் கெட்ட இதயம் ...
வா வந்து விடு
உன்னால் ஆனதை
உடனே அரவணை ...
No comments:
Post a Comment