உன் நினைவுகளை கோர்த்து
என் இதயம் எனும் வீணையில்
எப்பொழுதும் முப்பொழுதும்
உன் நினைவுகளை சுமந்து
இசைக்கும் குயில் இவள் ...
என் உணர்வெனும்
இதய கம்பிகளை அறுத்து
இசைக்காமல் போட்டாயோ அன்பே ...
என்னை திட்டியாவது பேசணும் என்கிறாய் நீ
இமை தட்டியாவது உன்னை காண
ஏங்குகின்றேன் நான் ....
உனை சுவாசிக்கின்றேன்
உன்னை நேசிக்கின்றேன்
உன்னில் வசிக்கின்றேன்
உன்னையே யோசிக்கின்றேன் ...
உன் அன்பையே யாசிகின்றேன் ....
என்னை திட்டுவதில் உனக்கின்பம் ..
தடுக்கவில்லை நான்
தடுமாறாமல் திட்டு
திட்டிகொண்டவது
என்னுடன் நீ பேசினால் போதும் ...
தடுமாறும் உணர்வுகளும்
தடம் மாறும் நினைவுகளும்
தடங்கலுக்கு வருந்துகின்றதாம் ...
நீ இல்லாத பொழுதுகளில்
இவள் நினைவு மரத்த வேளைகளில் ...
No comments:
Post a Comment