சிறகடித்த பறவை தனை
சிறைப் பிடித்து சென்றவனே
விருப்போடுதான் சிறை அடைந்தேன்
வெறுப்பை நீ உமிழ்வதேனோ...
தினம் ஒரு சிறகாய்
இறகொடித்து போடுகின்றாய்
பறந்திட நினைப்பேன் என்றா ..?
பயம் வேண்டாம்
பாழும் என் உயிர்
பாரில் உள்ளவரை
பருந்தாய் நீ குதறினாலும்
பாவம் கோழி குஞ்சாய்
இரை ஆகிடுவேன் ...
No comments:
Post a Comment