Thursday, July 26, 2012

பாத கொலுசு ...

கரும் பச்சை இலை மீறி
தரும் மஞ்சள் தண்டு கொண்டு
மலர் மஞ்சள் தாமரை பாதம்
மண் பட்டால் நோகும் என்று
மனம் பதைத்து போகுதடி ...

நல் முத்து வர்ணம் கொண்டு
நன்று செழித்த உன் பாதம் கண்டு
நாளடைவில் செழித்து வளர்ந்த
மேனி காண நெஞ்சு துடிகுமடி ...

வெண் சங்கில் முத்தாரம் போல்
உன் தந்த காலில் ஓர் ஆரம்
நீ தளிர் நடை போடும் போதெல்லாம்
உன் நளினத்தை பறை சாற்றுமடி ..
உன் பாத கொலுசாக என் நெஞ்சும் ஏங்குமடி..

உன் பாதம் தான் தாங்க
மலரெல்லாம் தவம் பண்ணுதடி
மலர்வனமே நீ என்று
மனம் சோர்ந்து போகுமடி
உன் பாதம் பட்ட நீர் பட்டால்
பன்னீர் துளி என்று தாங்குமடி ..

உன் பாதம் கண்ட நீரெல்லாம்
எனக்கு பன்னீர் துளி ஆனதடி
தேவர் வாழ அமுதம் பால் கடல் அடி
இந்த தேவன் வாழ அமுதம்
உன் பாதக் காலடி ...

நீராடும் உன் பாதம் கண்டு
கள்ளுண்ட மந்தியாகி
மதி மயங்கி மனம் தேம்புதடி
மலரே உன் பாதம் தாங்கி
மணி மெட்டி போடும்
நாளுக்காய் மனம்
மயக்கம் கொள்ளுதடி ..

என்ன பார்க்கிறாய்
எனக்காக நீ படித்த காதல் வார்த்தைகள்
என் உணர்விலே கலந்த மூச்சுக்கள்
காற்றோடு காற்றாகி கண்ணீராய் ஆனதடா
உன்னை தேடி என் பாதம்
காடு மேடெல்லாம் அலையுதடா..
உன்னை தேடும் என் பாதம்
உணர்விழந்து போனாலும்
உனக்காக என் பாத கொலுசு
ஒலித்துகொண்டிருக்கும்
உயிருள்ளவரை உன்னை தேடி ...

No comments:

Post a Comment