வெறுமை நிறைந்த
மனச்சுவர்களில் எல்லாம்
தன் கொடிய நகங்களால்
கீறிச்செல்கிறது
உன் நினைவலைகள் ...
உதிரமாய் சிந்தும் -என்
உணர்வுச் சிதறல்களை
பொறுக்கி எடுத்து
புசித்து மகிழ்கிறது என் தனிமை ....
உன்னை ,உன் நினைவுகளை சுமந்தே
என் செறிவிழந்து சருகாய் உதிர்கிறேன் .
என்னை தாண்டி செல்லும்
எவரும் நீயாய் இருக்க மாட்டாயா ?
தேடலில் ஆலாய் பறக்றது
சருகாய் உதிர்ந்த மனம் ..
என்னை தீண்டும் தென்றலிலும்
உன்னை தழுவிய விரல்களை
தேடி அலைகிறது காதல் மனம் ...
நீ நடந்த பாதகைளில்
சருகாய் கடந்தேன்
வருவாய் என எண்ணி ..
என்னை கடந்து எவர் போகினும்
உன்னை கடக்க இயலா மனது
ஓர் சாலை ஓரத்தின்
இரட்டை நாற்காலியில்
ஒற்றையாய் காத்திருக்கிறது ...
ஒரு முறை
மழையாய் என்னை அணைத்துவிடு
என் சருகான வாழ்வும்
உனக்காய் முடியட்டும் .
No comments:
Post a Comment