Wednesday, December 19, 2012

குளிர்



விடிந்தும் விடியாத பொழுது 
கடும் குளிருக்கு அஞ்சியோ என்னவோ 
இருளை போர்வையாக்கி 
வெளி வர தயங்கி பதுங்குகிறது 
எவளவு மன தைரியத்தையும் 
எளிதில் உடைக்க கூடிய 
எகுவைகூட வெகுவாக பாதிக்கும் 
எலும்பை உருக்கும் 
குளிர் காலை ...


எட்டி பார்த்தால்  
எவளவு சுறு சசுறுப்பு 
புலராத பொழுதுகளிலும் 
தம் கடமைகளை தேடி 
ஈசல் போல் பறக்கும் மக்கள் 
நன்கு பழுத்த பலா பழத்தை 
சாக்கு கொண்டு சுற்றியதுபோல் 
எழில் மங்கையர் தோற்றம் .
ஆளை அடிக்கும் குளிருக்குள் 
அழகு பார்க்க யாரும் தயாரில்லை ..


நம் நாட்டவர்க்கு என்றுமே ஒரு வியப்பு 
இந்நாட்டவர் எப்படி ஒன்றி அலைகின்றார் என்று 
இப்படி குளிர் எனின் ... 
அவசரத்து உதவும் கணப்பு  இணை தானே ..
அன்பில் ஒன்றலா ... அவசியத்தின் ஒன்றலா 
ஒன்றியவர் கண்டிலர் ...


கொடும் கதிர் பகலவனும் 
கொஞ்சமும் தயக்கமின்றி 
ஓடி மறைந்து கொள்ளும் 
உறை  பனிக்காலம் 
உருகும் கடும் காலம் ...
இருள்கவிந்து 
குளிர் குவிந்து 
பல்லும் கடு கிடுக்கும் 
பத்து ஆடை அணிந்திருந்தாலும் 
ஐயஹோ ... 


எனினும் அழகு ...
பூப்போல .. தேங்காய் பூப்போல 
பூலோக தேவதைகாய் 
வான் மன்னவன் உதிர்க்கும் 
வெண் மல்லி பூ போலே 
மென்மையும் சுத்தமுமான 
பனி பூக்களின் தழுவலை 
ரசிக்காதோர் யாருமல்லர் ....
வெண் பஞ்சு குவியலென 
மென் பஞ்சு இதமென 
குவிந்து கிடக்கும் பனி பூக்களை 
அள்ளி விளையாடுகையில் 
அவர்தம் ஆண்டுகளை மறப்பர் ..


ஆரம்பத்தில் உலக 
அதிசயம்போல் பார்த்தவள்தான் 
இன்றோ ... இந்த நாட்களை கடக்க 
என் பிந்த நாட்டை நாடுகின்றேன் 
வாழ்க்கை தரமென்று உயர்ந்தாலும் 
வனப்பான வாழ்க்கை எனினும் 
என் நாட்டின் 
மர  நிழல்  ஈணும் 
குளிர் தென்றல் போதுமடா ...


தேன் நிலவென்று வந்திடலாம் 
இந்நாட்டின் குளிர் தன்னில் ஒன்றிடலாம் 
பொழுது போக்கென்றால் சம்மதம்தான் 
பொழுதே இங்கென்றால் -வேண்டாமென்று 
என் புலன் ஐந்தும் கெஞ்சுமடா ..


No comments:

Post a Comment