மோகத் தீயின்
முழுவதுமாய் பிறழ்ந்து
பிறந்த பிறை நிலவென
ஜொலிக்கும் அவள் மேனியின் கீற்றில்
மிதந்து வரும் மெல்லிய ஒளிக் கற்றை
அவள் விம்பத்தை விரகமாக்கி செல்லும் .
காற்றின் திசைக்கு
அசையும் கற்றை கூந்தலின்
கவர்ச்சி விரிப்பில்
ஒளிந்திருந்த உணர்வு பறவைகள்
விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் .
அவள் வெம்மையில் உருகும் தங்கமென
ஒற்றை துளியொன்று உருவெடுத்து
பிறையென வளைந்த நெற்றியில்
ஒரு கறையென கருக்கொண்டது
காதல் வேள்வியில் ஜொலிக்கும்
இருவிளியிரண்டும் மீன் விழியென
மினு மினுக்கும் .
வில்லென வளைந்த புருவம் தன்னில்
காதல் அம்பென ஒரு ஒற்றை ரோஜா போர் தொடுக்கும் .
வாய் சிவப்பா அன்றில் பூ சிவப்பா
பெண்மை தான் சிவப்பா ..
சங்கென நீளும்
செவிய கழுத்து தொட்டு இறங்கும்
பொன்கல மாலை ஒன்று
புண்ணியம் செய்ததோ
இவள் கொங்கைகள் தான் தடவி
கொளுப்பென்று கிளு கிளுக்கும் .
முழுவதுமாய் பிறழ்ந்து
பிறந்த பிறை நிலவென
ஜொலிக்கும் அவள் மேனியின் கீற்றில்
மிதந்து வரும் மெல்லிய ஒளிக் கற்றை
அவள் விம்பத்தை விரகமாக்கி செல்லும் .
காற்றின் திசைக்கு
அசையும் கற்றை கூந்தலின்
கவர்ச்சி விரிப்பில்
ஒளிந்திருந்த உணர்வு பறவைகள்
விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் .
அவள் வெம்மையில் உருகும் தங்கமென
ஒற்றை துளியொன்று உருவெடுத்து
பிறையென வளைந்த நெற்றியில்
ஒரு கறையென கருக்கொண்டது
காதல் வேள்வியில் ஜொலிக்கும்
இருவிளியிரண்டும் மீன் விழியென
மினு மினுக்கும் .
வில்லென வளைந்த புருவம் தன்னில்
காதல் அம்பென ஒரு ஒற்றை ரோஜா போர் தொடுக்கும் .
வாய் சிவப்பா அன்றில் பூ சிவப்பா
பெண்மை தான் சிவப்பா ..
சங்கென நீளும்
செவிய கழுத்து தொட்டு இறங்கும்
பொன்கல மாலை ஒன்று
புண்ணியம் செய்ததோ
இவள் கொங்கைகள் தான் தடவி
கொளுப்பென்று கிளு கிளுக்கும் .
வெண்டையென நீளும்
சுட்ட தந்ததின் பழுப்பில்
நர்த்தனமிடும் விரல் இடுக்கில்
உயிர் சிக்கி தவிக்கும் .
நூல் கொண்டு தாங்கும்
இடை தோல் கொண்டு போர்த்தும்
ஆடை ஒன்றின் நூல் விடுதலைக்காய்
அலையும் மனது அடம் பிடிக்கும் .
அவள் அங்கங்கள் யாவும் தங்கமயம்
அதன் விம்பங்கள் யாவும் இன்ப மயம்
பிரம்மன் தேன் சுவைத்து தீட்டிய கன்னியவள்
ஒரு மோகத்தின் போகம் .
ஆரத் தழுவும் ஒரு அக்டோபஸ் என அவயங்கள்
ஒரு கலவி முடிதலில் ஆதாமும் ஆகலாம்
இல்லை கனி தவிர்த்து ஆத்மாவினால் நீ புத்தனும் ஆகலாம் .
சுட்ட தந்ததின் பழுப்பில்
நர்த்தனமிடும் விரல் இடுக்கில்
உயிர் சிக்கி தவிக்கும் .
நூல் கொண்டு தாங்கும்
இடை தோல் கொண்டு போர்த்தும்
ஆடை ஒன்றின் நூல் விடுதலைக்காய்
அலையும் மனது அடம் பிடிக்கும் .
அவள் அங்கங்கள் யாவும் தங்கமயம்
அதன் விம்பங்கள் யாவும் இன்ப மயம்
பிரம்மன் தேன் சுவைத்து தீட்டிய கன்னியவள்
ஒரு மோகத்தின் போகம் .
ஆரத் தழுவும் ஒரு அக்டோபஸ் என அவயங்கள்
ஒரு கலவி முடிதலில் ஆதாமும் ஆகலாம்
இல்லை கனி தவிர்த்து ஆத்மாவினால் நீ புத்தனும் ஆகலாம் .
Fantastic.
ReplyDelete/ஆரத் தழுவும் ஒரு அக்டோபஸ்
என அவயங்கள்
ஒரு கலவி முடிதலில் ஆதாமும்
ஆகலாம்
இல்லை கனி தவிர்த்து
ஆத்மாவினால் நீ புத்தனும்
ஆகலாம்/
if u r in fb mam, pls send reqst to me.
ilakiyaarvalan@gmail.com
fb id: chakravarthi bharati
Thanks Bharati ...
ReplyDelete