Monday, May 27, 2013

வலி

யாரும் அற்ற
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...

இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .

சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை

எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .

4 comments:

  1. http://soumiyathesam.blogspot.in/2013/07/blog-post_13.html-மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்... பிரியமான சீராளன் அவர்களுக்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்!

    கலையை உணா்த்தும் கனித்தமிழ் நல்கும்
    வலியை உணா்த்தும் வரி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் கவிஞரே பாராட்டுக்கு . நன்றி

      Delete