Sunday, July 26, 2015

விரகம்..



விடிவிளக்கற்ற
அந்தகாரத்தின்
இருள் போர்வைக்கு
பழக்கப் பட்டிருந்தது
கண்கள் ...

அருகினில்
அயர்ந்து உறங்கியவண்ணம்
நீ ..
ஜன்னல் வழியே
முகில் கடந்து
உன் முகத்தில்
அடிக்கடி படிந்து
நகர்ந்த வண்ணம்
நிலவொளி ..

அமைதியாய்
எப்படி உன்னால்
உறங்க முடிகிறது ?
அதுவும் அருகினில் நான் ...!

மெல்லிய தென்றல்
உன் குழல்
கலைக்காது இருந்திருக்காலாம் ..
நிலவொளி
உன்னை நெருங்காது
விலகி இருக்கலாம் ..
குறைந்த பட்சம்
உன் சூடான மூசுக் காற்று
என்னை தீண்டாமல் இருந்திருக்காலம் ..

ஹ்ம்ம்ம்ம் ...
முடிவரை நீண்ட
கைகளை இறக்கி
முது காட்டி
திரும்பிக்கிடந்தேன்..

சீ வெட்கமற்ற மனம் ..
இன்னுமா
வேட்கை தீரவில்லை ..
பின் இரவுவரை
உன் பிடிகளுக்குள் தானே
அவன் பிணைந்து கிடந்தான்
 எனும் சிந்தனையை விலக்கி
முன்னிரவில்
அவன் தீண்டலில்
சிவந்த மேனியெங்கும்
விரல்களால் தடவி
விரகம் மேலோங்க
விழி திருப்பிய கணங்களுக்குள்
அவன் விழித்திருந்தான் ..

கள்ளி ..
என்னிடம் உனக்கு
என்ன தயக்கமென
போர்வை விலக்கிய கணங்களில்
விளங்கி இருந்தது ..
கள்ளா ..
நீயும்
இன்னும் கண்ணுறங்கவில்லை ...

No comments:

Post a Comment