Friday, July 27, 2012

நீ



தொலைவாய் நீ
தொலைகிறேன் நான்
தொடரும் உன் நினைவுகள்
தவிக்கிறேன் நான்
எத்தனை ஆசை
எத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
அத்தனையும் புதைத்து விட்டாய்
அந்தஹாரமாய் என் மனம்
அமைதி இழந்து தவிக்கையில்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ..?
ஒஹ் நீதான் என்னை காதலிக்கவில்லையே ..



உன் மடி சாய்ந்து




அன்பே
அணு அணுவாய்
உன்னை நேசித்தவள் நான்
அனுதினம் உன்னை பூஜித்தவள்
அடங்காத ஆசைகளை ஜாசித்தவள்..
இன்று அடுத்து என்னவென்று
தெரியாத ஏக்கம் என்னுள்
இனம் புரியாத தவிப்புகள் உள்ளுள்
என் இதயத்து ஆசை எல்லாம்
ஒரு தடவையாவது
உன் மடி சாய்ந்து
என் மரணத்தை நேசிப்பதுதான் ...



Thursday, July 26, 2012

தேடி ..

நீ போனாலும்
உன் நினைவை சுமக்கும்
என் இதயம்
நம் பயணத்தில்
உன் பயணம் முடிந்து விட்டது
என் பயணம் தொடர்கின்றது
உன் நினைவுகளின் எல்லைகளை தேடி ..

பாத கொலுசு ...

கரும் பச்சை இலை மீறி
தரும் மஞ்சள் தண்டு கொண்டு
மலர் மஞ்சள் தாமரை பாதம்
மண் பட்டால் நோகும் என்று
மனம் பதைத்து போகுதடி ...

நல் முத்து வர்ணம் கொண்டு
நன்று செழித்த உன் பாதம் கண்டு
நாளடைவில் செழித்து வளர்ந்த
மேனி காண நெஞ்சு துடிகுமடி ...

வெண் சங்கில் முத்தாரம் போல்
உன் தந்த காலில் ஓர் ஆரம்
நீ தளிர் நடை போடும் போதெல்லாம்
உன் நளினத்தை பறை சாற்றுமடி ..
உன் பாத கொலுசாக என் நெஞ்சும் ஏங்குமடி..

உன் பாதம் தான் தாங்க
மலரெல்லாம் தவம் பண்ணுதடி
மலர்வனமே நீ என்று
மனம் சோர்ந்து போகுமடி
உன் பாதம் பட்ட நீர் பட்டால்
பன்னீர் துளி என்று தாங்குமடி ..

உன் பாதம் கண்ட நீரெல்லாம்
எனக்கு பன்னீர் துளி ஆனதடி
தேவர் வாழ அமுதம் பால் கடல் அடி
இந்த தேவன் வாழ அமுதம்
உன் பாதக் காலடி ...

நீராடும் உன் பாதம் கண்டு
கள்ளுண்ட மந்தியாகி
மதி மயங்கி மனம் தேம்புதடி
மலரே உன் பாதம் தாங்கி
மணி மெட்டி போடும்
நாளுக்காய் மனம்
மயக்கம் கொள்ளுதடி ..

என்ன பார்க்கிறாய்
எனக்காக நீ படித்த காதல் வார்த்தைகள்
என் உணர்விலே கலந்த மூச்சுக்கள்
காற்றோடு காற்றாகி கண்ணீராய் ஆனதடா
உன்னை தேடி என் பாதம்
காடு மேடெல்லாம் அலையுதடா..
உன்னை தேடும் என் பாதம்
உணர்விழந்து போனாலும்
உனக்காக என் பாத கொலுசு
ஒலித்துகொண்டிருக்கும்
உயிருள்ளவரை உன்னை தேடி ...

Monday, July 23, 2012

வழியாய் வந்துவிடு





என் இதயத்தின்
வலி அதிகரிக்கிறது
நீ இல்லாத பொழுதுகளில்
என் வழியில் வந்து
வலியை தந்தவனே
என் வலியை போக்க
வழியாய் வந்துவிடு
உன்னை இழந்தும்
துடிக்கிறது இதயம்
உன் நினைவுகளை
சுமப்பதினால் ...



Sunday, July 22, 2012

என் எண்ணப் பக்கங்கள்




என் எண்ணப் பக்கங்கள்
உன் நினைவுகளால் மட்டுமே
புரட்ட படுகின்றது ...
நீ இல்லாத பொழுதை
என் இதயசுமையை
எனக்காக பாதி சுமக்கும்
என் கவிதை பதிவுகளே
என் கண்ணீரின் சுமைகளை
கண நேரம் தாங்கி கொள்ளுங்கள்
என் காதலன் வரும் நேரம்
என் கண்ணீர்
அவனிடம் என் மேல்
கழிவிரக்கத்தை
ஏற்படுத்திட கூடாது ......



முட்களாய் ......




உன்னை தேடிய
என் பயணமெல்லாம்
முடிவில்லாத பாதைகளில் தொடர
முடிந்தும்
முடியாமல் என் காதல்
முட்களாய் ......