Wednesday, May 30, 2012

வேண்டும் ..




ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்


பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்


பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்


பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..

அணைக்கின்ற சுகம் வேண்டும்..




அன்பே
உன் தலை கோத வேண்டும்..
அலைபோன்ற உன் முடிகோதி
அணைக்கின்ற ஒளி தேடி
அன்பாலே அடிகூடி
உன்னை அணைக்கின்ற சுகம் வேண்டும் ...

மனம்போல மனம்கூடி
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்..

பேதை இவள் பேதளிக்கின்றேன்
பிரியாத பொழுதுகள் வேண்டும்..
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்..
துவளாத உணர்வுகள் வேண்டும்..
அதில் சுகமாக உன் முடி கோதவேண்டும் ..
உன் தலை முடி நான் ஆளவேண்டும் ..

Tuesday, May 29, 2012

shhh...












இதழ்வழி..



உன் வரவுக்காய்
காத்திருப்பது
பூ மட்டுமல்ல
இந்த பூவையும்தான்
என்று வருவாய்
என் இதழ் அணைத்தது
நம் இதயங்களை
இதழ்வழி பரிமாற்றிக்கொள்ள ...






தவம் இருக்கும் ...




அன்பே ...
உன்னோடு அருகமர்ந்து
அளவளாவி ...ஆவல்கொண்டு
ஆனந்தகதைகள் பேசவில்லை
கையேடு கை கலந்து
களிப்பினில் கூடவில்லை
மெய்யோடு மெய் சிலிர்த்து
கலவிகளில் கூடவில்லை ..
மனதோடு மனதுரசி
நினைவோடு நெகிழ்ந்துருகி
கனவோடு காதல் கதைகள் பேசினேன் ..
இந்த பூ உன் பூஜைக்கு வாராது போகலாம்
என் இதயத்து பூக்கள் ...
என்றும் உன் நினைவு பூஜைகாய்
தவம் இருக்கும் ...



விண்ணப்பம் கேட்கின்றது




தினம் தினம் உன்னுடன்
பேசும் பொழுதுகளில்
உன் உதடுகளையே
என் உள்ளம் ஸ்பரிசிக்கின்றது..
உன் உதடுகளிடம்
என் உள்ளம்
ஒரு விண்ணப்பம் கேட்கின்றது
"ஒருமுறை ஒற்றிச் செல்
உணர்வுகள் செல்லரித்து போகுமுன் ..."
உனக்கு கேட்கின்றதா ...?
மன்னித்து விடு
மடல் போட்டு முத்தம் கேட்க
என் வெட்கத்திற்கு வெட்கமாம் ...
மனம் திறந்திடு ..
இதழ் பகிர்ந்திடு



பிள்ளையார் சுளி



பேனா எடுத்ததும்
பிள்ளையார் சுளிகூட
போடவரவில்லை
உன் பெயரே பிள்ளையார் சுழியானது
அதனால்தானோ எனவோ
என் காதலும்
பிள்ளையாரின் திருக்கல்யாணம் போல்
தினம் தினம் தள்ளி போகின்றது ...
இருந்தும் என் கனவுகளும்
உன் நினைவுகளும் சுமந்தபடி
என் நாள் குறிப்பேடு ...