Friday, September 14, 2012

சும்மா

 
 
 
விழுந்து எழும்பியும்
விழுந்ததுக்கு விஞ்ஞான விளக்கம்
விவரமானவன்னு ஊர் சொல்லிச்சு ...


சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
சந்தில் இருந்த சாப்பட்டுகடையில்
சால்னாக்கு துட்டில்லை
சாயாவும் ஒரு ரொட்டியும் சாபிட்டான்
டயட் உடலை கட்சிதமாய்
பார்க்கின்றான் என்று ஊர் சொல்லிச்சு ...


எங்கு சென்றாலும்
குனிந்த தலை நிமிராத
குலமகனாய் சென்று வந்தான்
பெண்பிரசு பேச்சுமில்லை
பிறர் பெண்டிர் நாட்டமும் இல்லை
காசு இருந்தால்தானே களியாட்டம்
கன்னிகள் கூட்டம்
புரிந்தவன் குனிந்தான் - கண்ணியவான்
ஊர் சொல்லிச்சு ...


சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...


அவனை கெடுத்து அவனல்ல ஊர்
அது உன்னையும் கெடுக்கும்
உலகையும் கெடுக்கும் ...
புகழ்ச்சிக்கு இடம் கொடுத்து
உனக்குள் இருக்கும்
முயற்சிகள் தூங்கிவிட்டால் ...

No comments:

Post a Comment