Tuesday, September 18, 2012

எச்சி

alone full moon night picture and wallpaper

தெருவிளக்கின் ஒளி வீச்சில் ¨
விழிகளின் அங்கஹீனம்
விரட்டியடிக்க
விடை தெரியாத விட்டிலாய்
விழுந்து கிடக்கிறது
சாலையை நோக்கிய
என் காதல் பயணம் ..


புரியாத மேடுகளாயும்
தெரியாத கோடுகளாயும்
தெரிந்த சில கோணங்கள் ஆலும்
செதுக்கப்பட வாழ்க்கை
சிறிதும் சுவாரசியம்
அற்றதாகி விடுகின்றது
சில தோல்விகளின் முடிவில் ..


துயரத்தின் துயரை சுமந்தே
கண்களின் எடை அதிகரிக்கின்றது
அடிகடி நினைவலைகளில் மூழ்கும் போது...
கனவுகளை காவு கொடுத்த நெஞ்சம்
கதறி துடிப்பது
தெருநாய்க்கு கேட்டிருக்கும் போலும்
ஒரு பாடாய் ஊளை இடுகின்றது
ஊமையான என் உணர்வுகளுக்கு உடன்பட்டு ..


நிசப்தத்தின் ஆடை கிழித்து
நீளமாய் ஒரு கேவல்
நிதானத்தை இழக்க செய்கின்றது
ஆழமாய் நேசித்து
அவலமாய் உதறிய உன்னை நினைத்து ...


எச்சியாய் நினைத்து
எள்ளி நகையடியபின்
மனதறையில் பள்ளி கொண்ட உன்னை
பட்டென்று தூக்கி வீசிவிட முடியவில்லை
சட்டென்று தூக்கி வீச
தடுக்கி விழுந்தும் எழுந்து
உன் பெயர் சொல்லி துடிக்கும்
இதயத்து தெரியாது
அவமானங்களும் அலட்சியங்களும் ....
 

No comments:

Post a Comment