Tuesday, September 18, 2012

காலம் முழுமைக்கும்

சிவப்பாய் அடிவானம்
சிவக்கும் மாலை காலம்
சில்வண்டும் சிறு நண்டும்
சிலு சிலுத்து கிறு கிறுபபூட்டும்
அலை வந்து கரை சேரும்
அரை நொடிக்காய்
அடிக்கடி ஏங்கும் கரைதனில்
அலைந்தாடும் எண்ணங்களோடு நான் ..


சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...


கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..
அவனோடான என் நகர்வுகளுக்கும்
இடைவெளி கொடுத்திருந்தால்
இந்த அவலங்களும் அலர்ந்து இருக்காதோ ...


மினுக் மினுக்கென
மின்னும் நட்சத்திரங்கள் அவனால்
மிகைபடுத்தி அலங்கரிக்கப்பட்ட
இது போன்ற ஒரு மாலை
நினைவுக்குள் வந்து போனது ...

நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .
 

No comments:

Post a Comment