Sunday, November 11, 2012

பார் நிலவு

 

 மதியன்ன வதனம்
அதிலிரு கதிரென கண்கள்
வானவில்லில் தெரியாத இருளை
தீட்டி வைத்தது போல் புருவம்
குடை மிளகாயை
கொஞ்சம் வெட்டி தலை
கவிழ்த்து  வைத்தது போல் மூக்கு ..
கொவ்வை கனியதனை
வாள் கொண்டு பிளந்தது போல்
வளவலப்பாய் உதடு ...
பால் நிலவு
இந்த பார் நிலவின் ஒளியில்
பதுங்கிவிட நினைக்கும்
ஒளிபோருந்தும் அழகு நிறம்
வெள்ளை வெண்டைகள்தாம்
பத்து பதிந்து நீள்கிறதோ
உன் கைகளில் ....

அழகு பதுமையே
உன் அழகு திருமுகத்தில்
ஒரு முகமாய்
உன் நீள் விழிகளில்
ஏன் இந்த கலக்கம் ...
எதற்கு இந்த நிராசை ...
கார் குழல் போர்த்தி
கதிர் வதனமதை
பார் பார்க்க
நீ அருளாததேனோ ...?

உன் அழகால்
உந்தபட்டு
உன்னை -உல்லாசத்துக்கு
உடனழைத்து உரு குலைப்பார்
உத்தமர்கள் என்றெண்ணியா ..?
இல்லை
உதிர்ந்து போன
உன் உதிரத்து
உறவு எதையும் எண்ணியா ..?

அன்றில்
காலம் காலமாய்
கன்னியரை வதைக்கும்
கொல் காதல் விரக்தியா ...?
எதற்கிந்த சோகம் ...
உன்னை சூழ தீ எரிந்தாலும்
உள்ளிருந்து வெளி வா
அதர்மம் அளிக்கும் அருவாளாக..
உன்னை மீறி உயிர் பிரிந்தாலும்
உலகை காக்கும்
அருவமாய் உடன் வா ..

பெண்மைகள்
மென்மைகளுக்கு மட்டுமல்ல ..
பல மேன்மைகளுக்கும்
சொந்தமடி ...
உன் கண்வழி உறையும்
உன் கசப்பான அனுபவங்களை
கண்ணீரோடு கழுவி விடு
விழிகள் விடியலை சந்திக்கும்

No comments:

Post a Comment