Monday, August 12, 2013

தூக்கம் வரவில்லை

Photo: கண்ணதாசன் கருணாகரன் கொடுத்த தலைப்பு இது " எனக்கு உறக்கம் வரவில்லை "

நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்  
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம் 
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி 
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் . 
நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம்
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் .

3 comments:

  1. முதன் முறை இங்கு வருகிறேன். உங்கள் தளம் மிக அழகாக இருக்கிறது.
    அனைத்தும் அருமையான கவிதைகள் இங்கு!..

    மனதிற்கு இதமாக .. மயிலிறகால் வருடிய உணர்வு.

    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. என்னால் இங்கு உங்கள் ஃபோலோவராக இணைய முடியவில்லை. நான் கூகில் +ல் கணக்கு வைத்திருக்கவில்லை.
      ஆவன செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் கண்டு படிக்கமுடியும்...
      மிக்க நன்றி!

      Delete
    2. மன்னிக்க வேண்டும் இளமதி ... சிலநாட்களாக இங்கு வர வாய்ப்பு கிடைக்க வில்லை ... இன்றுதான் வந்தேன் பலநாட்களுக்கு அப்புறம் ..... நன்றி ஆவன செய்துவிட்டேன் இணைந்து கொள்ளுங்கள் ... நன்றிகள் ..

      Delete