என் அனைத்திலும்
அடங்கிவிட்ட உன்னுள்
ஆத்மாவாகிவிட்ட என்
சுயங்களை
சுண்டி இழுக்கும்
நினைவுக் கரங்களின் பிடிகளில்
குழையும்
உன் ஸ்பரிச ரேகைகளின்
உஸ்னம்
உன் புன்னகை கீற்றுக்களால்
குளிர்ந்து விடுகிறது இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
என் உணர்வலைகளை
உருவகப் படுத்தி பார்க்கின்றேன்
அதில் உருவாகும் நீ
ஏனோ எனக்கு வலியை கொடுப்பதில்லை
மெலிதான உன் புன்னகையில்
மௌனித்துவிடும்
முணு முணுப்புகள்
முத்துக்களை பூக்க வைக்கிறது
முரட்டுத் தனமான
உதடுகளில் .
கடந்து சொல்லும் தென்றல்
ஏனோ கனல் அள்ளி தெளிப்பதில்லை
காதில் கலகலத்து சிரிக்கிறது
உன் சிரிப்புகளை
சிறிது களவாடி இருப்பதனால் ..
இரவினை உருக்கும்
வெள்ளி நிலவின்
ஒளிக்கீற்றும்
ஒன்றும் செய்வதில்லை
உன் முகம் கொண்டு
எனை பார்ப்பதனால் ...
ஒன்று மட்டும் சொல்லிவிட்டு செல்
உன் தேவை எனக்கு இல்லையா
இல்லை
உன்னைப் போல் ஒரு நிழல்
தீண்ட எனக்கு சம்மதமா ?
ஏனெனில்
உன் காந்தப் பார்வையை
தொலைத்த கணம் முதல்
நேற்றுவரை
கலங்கி தவித்த கண்கள்
இப்பொழுதெல்லாம்
முன்னைப்போல்
கண்ணீரைத் தருவதில்லை ..
ரசித்தேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தனபாலன் நன்றிகள் .
Deleteஇப்படியும் உணர்வுகள் உன்னில்தான் ஊறும் ரோஸ்
ReplyDeleteஅழகிய கவிதை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நன்றிகள் seeru :D
Deleteஅழகு
ReplyDeleteநன்றிகள் Yuvaraj
Delete