ஒவ்வொரு நிமிடத்தையும்
உனக்கானதாக
ஆக்கிவிடுகிறது உன் நினைவுகள் ...
உன்னால் உதிர்க்கப் படும் புன்னகைகள்
என் உதட்டில் மிச்சம் வைக்கிறது
அதன் எச்சங்களை ..
உன்னால் எழுப்பப்படும் கேள்விகள்
ஓவொன்றும்
என் சேலையின் மாராப்பில்
சிக்கி திமிறுகிறது
சில நிமிட விடுதலைகள் வேண்டி ..
சந்தேகங்களில் சடுதியாக
புகுந்துவிடும் சிந்தனை சிப்பிக்குள்
ஒரு முத்தென உருவாகிறது
உன் மீதான என் அன்பு ...
காலம் காலமாய்
உறைந்துவிட்ட
உறை நிலை அன்பை
செதுக்கி சிற்பம் ஆக்குவதில்
தீவிரமாய் முயல்கிறது
வார்த்தை உளி ...
எழில் குழையும்
குளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென.
உனக்கானதாக
ஆக்கிவிடுகிறது உன் நினைவுகள் ...
உன்னால் உதிர்க்கப் படும் புன்னகைகள்
என் உதட்டில் மிச்சம் வைக்கிறது
அதன் எச்சங்களை ..
உன்னால் எழுப்பப்படும் கேள்விகள்
ஓவொன்றும்
என் சேலையின் மாராப்பில்
சிக்கி திமிறுகிறது
சில நிமிட விடுதலைகள் வேண்டி ..
சந்தேகங்களில் சடுதியாக
புகுந்துவிடும் சிந்தனை சிப்பிக்குள்
ஒரு முத்தென உருவாகிறது
உன் மீதான என் அன்பு ...
காலம் காலமாய்
உறைந்துவிட்ட
உறை நிலை அன்பை
செதுக்கி சிற்பம் ஆக்குவதில்
தீவிரமாய் முயல்கிறது
வார்த்தை உளி ...
எழில் குழையும்
குளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென.
வாழ்வும் அப்படித்தான்...
ReplyDeleteநிலையாத வாழ்வுக்குள்
ReplyDeleteநிலைக்கும் கனவுகளின்
சலனமற்ற சாரீரப்பதன்
சத்தமின்றி கலந்தது
இவள் இதயத்தில்
இனிக்கும் காதலோடு...!
அழகிய உணர்வுகள் ரோஸ்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
எழில் குழையும்
ReplyDeleteகுளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென. வார்த்தைகள் அற்புதம்