Tuesday, May 29, 2012

shhh...












இதழ்வழி..



உன் வரவுக்காய்
காத்திருப்பது
பூ மட்டுமல்ல
இந்த பூவையும்தான்
என்று வருவாய்
என் இதழ் அணைத்தது
நம் இதயங்களை
இதழ்வழி பரிமாற்றிக்கொள்ள ...






தவம் இருக்கும் ...




அன்பே ...
உன்னோடு அருகமர்ந்து
அளவளாவி ...ஆவல்கொண்டு
ஆனந்தகதைகள் பேசவில்லை
கையேடு கை கலந்து
களிப்பினில் கூடவில்லை
மெய்யோடு மெய் சிலிர்த்து
கலவிகளில் கூடவில்லை ..
மனதோடு மனதுரசி
நினைவோடு நெகிழ்ந்துருகி
கனவோடு காதல் கதைகள் பேசினேன் ..
இந்த பூ உன் பூஜைக்கு வாராது போகலாம்
என் இதயத்து பூக்கள் ...
என்றும் உன் நினைவு பூஜைகாய்
தவம் இருக்கும் ...



விண்ணப்பம் கேட்கின்றது




தினம் தினம் உன்னுடன்
பேசும் பொழுதுகளில்
உன் உதடுகளையே
என் உள்ளம் ஸ்பரிசிக்கின்றது..
உன் உதடுகளிடம்
என் உள்ளம்
ஒரு விண்ணப்பம் கேட்கின்றது
"ஒருமுறை ஒற்றிச் செல்
உணர்வுகள் செல்லரித்து போகுமுன் ..."
உனக்கு கேட்கின்றதா ...?
மன்னித்து விடு
மடல் போட்டு முத்தம் கேட்க
என் வெட்கத்திற்கு வெட்கமாம் ...
மனம் திறந்திடு ..
இதழ் பகிர்ந்திடு



பிள்ளையார் சுளி



பேனா எடுத்ததும்
பிள்ளையார் சுளிகூட
போடவரவில்லை
உன் பெயரே பிள்ளையார் சுழியானது
அதனால்தானோ எனவோ
என் காதலும்
பிள்ளையாரின் திருக்கல்யாணம் போல்
தினம் தினம் தள்ளி போகின்றது ...
இருந்தும் என் கனவுகளும்
உன் நினைவுகளும் சுமந்தபடி
என் நாள் குறிப்பேடு ...



Monday, May 28, 2012

மறுபடியும்..




உன்னை சுற்றியே
என் உலகம் சுழல்கின்றது
உன்னை பற்றியே
என் நினைவு அலைகிறது
உன்னை தேடியே
என் உணர்வு கலைகிறது


உனக்காக என் பொழுது புலர்கிறது
உனக்கான என் ஏக்கங்களில்
என் பொழுது கரைகிறது ..
என் தலையனையை கேட்டு பார்
உனக்காக நான் ஏங்கி தவித்த
தனிமையின் கொடுமைகளை
தாராளமாய் சொல்லும் ....

என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..


உன்னால் புறக்கணிக்க பட்டபோதும்
உன்னை தேடியே என்
இதயத்தின் பயணம் தொடர்கிறது ..
பலதடவை உன்னால் மிதிபட்டபோதும்
மறுபடியும் உன் பாதத்தை தேடி
என் இதயம் வருவது
உன்னை நேசிக்க அல்ல
உன்னை ஸ்பரிசிக்க..



இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...



பொழுது புலர்ந்ததில் இருந்து
ஒரு பொட்டு கூட ஓய்வு இல்லாது
பட படவென பல வேலைகள் பார்த்து
பாட புத்தகத்தை எடுத்தால்
படுத்து உறங்காமல்
பாடமா படிக்க தோன்றும் ...?

ஈழத்து சிறுமிகளின்
சிறப்பான வாழ்வு இப்டித்தான்...
தாயை இழந்து
தந்தையின் அரவணைப்பில்
தளர் நடை போட்டு
தரணியை வலம் வரும் வயதிலேயே
தாய்க்கு நிகரான பொறுப்புகள்
தலையில் இறக்கபட்டுகின்றது ....

அன்றில் தந்தையை இழந்து
தாயின் அரவணைப்பிலும்
தாய்க்கே தாயாய் மாறும்
தருணங்களும் உருவகபடும் ...

தாய்க்கே தாயாகி
தந்தைக்கே தாயாகி மகளாகி
தன் சிறு வயதிலும்
தாளாத சுமையை தாங்கும்
ஈழ சிறுமியின் கல்வி
எட்டாத கொப்புத்தான்...

அவளுள்ளும் ஆசைகள்
அடுத்தவரை போல்
தானும் கனவுகளை சுமக்க ..
ஆறாத காயங்கள்
அழியாத சோகங்கள்
அவற்றை எல்லாம்
அளித்துவிட்டு அரங்கேற ...

ஆசைகள் மட்டும் இருந்தென்ன லாபம்
அமரரான அன்னையும் தந்தையும்
அருகிருந்தால்
அவளாலும் அகிலத்தை ஆளமுடியும் ...
இருந்தும் விடா முயற்சில்
விழுதுகளை பற்றி எந்திரிக்கும்
ஈழத்து சிறுமிகளின்
எதிர்கால ஆசைகளுக்கு
இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...

புத்தகத்தில் தலைவைத்து தூங்கினால்
அறிவு வாளருமாமே...
அந்த வரத்தை
ஈழத்து சிறுமிகளுக்கு
இயைந்தளித்துவிடு ....