Monday, May 28, 2012

இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...



பொழுது புலர்ந்ததில் இருந்து
ஒரு பொட்டு கூட ஓய்வு இல்லாது
பட படவென பல வேலைகள் பார்த்து
பாட புத்தகத்தை எடுத்தால்
படுத்து உறங்காமல்
பாடமா படிக்க தோன்றும் ...?

ஈழத்து சிறுமிகளின்
சிறப்பான வாழ்வு இப்டித்தான்...
தாயை இழந்து
தந்தையின் அரவணைப்பில்
தளர் நடை போட்டு
தரணியை வலம் வரும் வயதிலேயே
தாய்க்கு நிகரான பொறுப்புகள்
தலையில் இறக்கபட்டுகின்றது ....

அன்றில் தந்தையை இழந்து
தாயின் அரவணைப்பிலும்
தாய்க்கே தாயாய் மாறும்
தருணங்களும் உருவகபடும் ...

தாய்க்கே தாயாகி
தந்தைக்கே தாயாகி மகளாகி
தன் சிறு வயதிலும்
தாளாத சுமையை தாங்கும்
ஈழ சிறுமியின் கல்வி
எட்டாத கொப்புத்தான்...

அவளுள்ளும் ஆசைகள்
அடுத்தவரை போல்
தானும் கனவுகளை சுமக்க ..
ஆறாத காயங்கள்
அழியாத சோகங்கள்
அவற்றை எல்லாம்
அளித்துவிட்டு அரங்கேற ...

ஆசைகள் மட்டும் இருந்தென்ன லாபம்
அமரரான அன்னையும் தந்தையும்
அருகிருந்தால்
அவளாலும் அகிலத்தை ஆளமுடியும் ...
இருந்தும் விடா முயற்சில்
விழுதுகளை பற்றி எந்திரிக்கும்
ஈழத்து சிறுமிகளின்
எதிர்கால ஆசைகளுக்கு
இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...

புத்தகத்தில் தலைவைத்து தூங்கினால்
அறிவு வாளருமாமே...
அந்த வரத்தை
ஈழத்து சிறுமிகளுக்கு
இயைந்தளித்துவிடு ....


No comments:

Post a Comment