Thursday, October 5, 2017

காமம் .

இந்த
மழை நாட்களின்
இரவுகளின் சில்லீரப்பில்
எப்பொழுதும்
என்னை ...
புணர்ந்து விடுகிறாய்
என் அனுமதி இன்றி ...

என் கோபங்களின்
அறுதியில் தொங்கும்
உன் மீதான தாபங்களை
எப்பொழுதும்
அறிந்தவனாக இருக்கிறாய்
அதனால்தான்
அதை
கொழுத்தியே வைக்கிறாய் ...

முரண்டும் மனதினை
உரசும்
உன் முகமூடிகளை கொண்டு
தீ மூட்டி
முத்தத்தால்
முகவுரை எழுத தூண்டுகிறாய் ..

கழுத்தோரம் படரும்
கைகளின் ஸ்பரிசத்தில்
காணாமல் சென்று விடுகிறது
கடுகளவில்
பற்கள் நெரித்த கோபம் .

என் பெயரை
உன் உதடு
ஸ்பரிசித்து மீள்கையில்
நிறைந்து கனத்திருந்தது
காமம் .

பல முத்தங்கள்
சில சத்தங்கள்
குறு யுத்தங்கள் என
இந்த இரவு
உன்னோடு இழைந்திருக்கிறது .
விடிந்துவிட கூடாதென்ற
ஏக்கம்
என்னோடு நிறைந்திருக்கிறது .

No comments:

Post a Comment