Thursday, October 5, 2017

காற்றில் ஒரு முத்தம் ..

மின்சாரமற்ற
மிரட்டும் இருள் கிழிக்கும்
மெல்லிய
மண்ணெய் விளக்கின்
ஒளிக் கதிராக
...
உன்னருகே நான் ..

ஜன்னலோர படுக்கையில்
புரளும்
உன் மேனி தொட்டு
சில்லீர்பூட்டும்
மழைத் தென்றலாக நான் ..

அமானுஷ்ய பின்னிரவின்
அழுத்தம் கலைந்த
உன் இதழ்களை
பார்த்துவிடும்
உத்வேகம்...

ரோமங்களற்ற
மார்பில் படர்ந்திருகிறேன்
நினைவுகளால் ..
நிர்மலமாய்
நீ மட்டும்
எப்படி உறங்குகிறாய் .. ?

இந்த மழைக்கால
பின்னிரவின் தேவைகளுக்குள்
அடங்காது துயிலும்
உன் தூக்கம் கலைத்து விட
இதோ
காற்றில் ஒரு முத்தம் ..

No comments:

Post a Comment