Thursday, October 5, 2017

இன்றாவது தூங்கிவிடுகிறேன்

இரவு
இன்னும் புலராது இருக்கிறது ..
உனக்கும்
எனக்குமான
இடைவெளிகளை
...
குறைத்துக் கொள்ள ..

அருகிருக்கும் உன்னை
அடிக்கடி
திரும்பி பார்த்துக் கொள்கிறேன்
நீ இங்கிருக்கிறாய்
நினைவுகள் எங்கிருக்கிருக்கும் ..?

உன் நினைவு வட்டத்துக்குள்
புகுந்துவிட ஆசையாய்..
இருந்தும்
தடைகள் நிறைந்தே
வழிந்து கிடக்கிறது ..

உன் அகன்ற
தோள் வளைவில்
அடங்கி விடவும்
அசையும் ஆண்மைக்குள்
இசையும்
விசையாக மாறிட ஏங்குதே ..

ஒரு சில திமிறல் என்னிடமும்
ஒரு சில ஆளுமை உன்னிடமும்
ஒரு சில நிமிடங்கள் நம்மிடமும்
நகர்ந்து கழிந்திடுமா
இரவு ... ?

இன்னும்
அருகிருக்கிறாய்..
ஆனால் இல்லை ...
வா
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதை மட்டும்
முத்தாய்ப்பாய் .
இன்றாவது தூங்கிவிடுகிறேன் .

No comments:

Post a Comment