Tuesday, May 12, 2020

தீர்த்துவிடு...

இன்னும்
என் காலைகள்
விடியாதிருக்கிறது
உன்னோடு...

இரவுகளில் நனைந்ததை விட
காலைகளில்
உன் மழை வீரியமானவை..
அதில் மூழ்குவது
முழுமைதான்..

இருள்ப் பறவையென
உன் இரு கைகளுக்குள்
அடங்கி
மார்பில் புதைந்து கிடக்கிறேன்
இன்னும்...

பின் வளைவுகளில்
உன் அழுத்தங்களில்
மீண்டும் மூண்டு
கொ(ல்)ள்கிறது தீ..

நான் திரும்பிவிடும்
கணங்களில்
நீ நிராயுதபாணியாகலாம்..
வா திரும்புமுன்
எனை தீர்த்துவிடு...

இராட்சத தேவன்

இந்த இரவுகள்

உனக்காக ஏங்கினாலும்
என்னிடமிருந்து
உன்னை
தள்ளியே வைத்திருக்கிறேன்..

களைந்து கிடக்கும்
போர்வைகள்
ஏனோ உன்
சுவாசங்களை
தாங்கியதாய்
உணர்வு...

என்னை
எளிதாக கடந்துவிடும் உன்னில்
இன்னும் என்ன மையல்,
இன்றுவரை புரியவில்லை..

சொர்க்கம் நரகம்
இரண்டையும்
பரிசளித்துக்
கடந்த
இராட்சத தேவன் நீ..

உன்
மயிர்க் கணுக்களில்
மல்லாந்து கிடக்கிறது
மானமற்றுப் பெண்மை..

ஒர் முத்தத்தால்
கடந்துவிடு..

நிஜங்களில் தொலைந்து
கனவுகளில் மட்டும்
கலாபக் காதலனாக
இன்னும் நீ...

ஒப்பந்தம்

நிலவினை
சபிக்கிறேன்
தொலைவினில் இருப்பதாய்..

கனவுகளுக்கு மட்டுமல்ல
கற்பனைகளுக்கும்
இறகுகள் உண்டு
அது தன்னைத் தீண்டி
சுகம் காணும்...

நீர் வடியும்
மழைநாள் இலையென
நினைவுகள் வடிகிறது,
மழை
நின்றுவிட்டால் நன்று.

அழகாய் இருப்பதை
கண்ணாடியிடம்
அடிக்கடி
நிச்சயித்துக் கொள்கிறது
மனது.

தூக்கத்தோடு
ஒரு ஒப்பந்தம்
தூங்கவிடு...

வாழ்க்கை..

நள்ளிரவை

சபிக்கின்றேன்
காலம் கடந்தும்
கண்ணீரில்
நினைவுற்றுக் கிடக்கிறது..

யாருமற்ற
பவுர்ணமி நிலவாக
வானத்தில்
அதன் இருப்பு..

இன்றளவும்
நேசித்ததால்
நேரம் தொலைத்து
தூக்கம் தொலைத்து
தொடர்கிறது..

எதுவாக இருப்பினும்
இயல்பாக கடந்திட
இன்னும்
இருதயம் முயல்கிறது.

வாழ்க்கை
இன்னும்
கற்றுக்கொடுத்தவண்ணம்
பயணிக்கிறது...

என் தேவை..

என்புருக்கும்

மார்கழி குளிரில்
சூடான போர்வையாக
என்னை போர்த்திருக்கிறாய் ..

உன் சுவாசங்கள்
மேனி படர்ந்து
மெல்ல தூண்டுகிறது
உன் மீதான மோகங்களை..

உடல் சரிந்து
ஆடையற்ற
உன் தோள்வளைவில்
அழுந்திய உதடுகளில்
கரிக்கும்
உப்புச்சுவையில்
வயகரா தோற்றுக்கொண்டிருந்தது ..

கலைந்து கிடக்கும்
உன் முடி அழைந்து
உச்சியில்
பகிர்ந்த முத்தத்தில்
என் தேவை
உன்னை யாசித்திருந்தது ...

சட் டென
இறுக்கிய உன் அணைப்பில்
தெரிந்திருந்தது
எனக்குள்
நீ இறங்க ஆரம்பிக்கிறாய் ..

உறக்கம் தொலைத்திருக்கிறது
இந்த இரவு
என் தேவை
இவை இரண்டும் ..

களையாத மோகம் ..

களையாத மோகம் ..


போர்வை களைந்த பின்னும்
களையாத மோகம்
கனிந்து வழிந்து
மொழிகிறது
உன் மீதான
என் ஆசைகளை ..

உறக்கங்கள் முயல்கிறது
உன் அதரங்கள்
என் அந்தரங்கங்களை
அளவிடுவதை ரசிக்க

அடிக்கடி கலையும்
உறக்க நிலைகள்
அதீதமாக அலைகிறது
உன் அருகாமையை
ருசிபார்க்க ...

ஒரு மழைத்துளிக்கு
ஏங்கும் பாலை நிலமென
உன் மதத் துளிக்காய்
ஏங்கும் மலர் மொட்டு

விரகங்கள் பகிரும்
உன் விசித்திர
புன்னகைக்கு தெரிவதில்லை
விடியும் வரை
விரதங்கள் விலைபேசப்படுவது ...👄

- என் வீட்டுக் கண்ணாடி

நேசிக்கப்படுதல்
வரமென்பேன்...

என் நிர்வாணங்கள்
உனக்கு
பழக்கப் பட்டவை..

ஈரக் கூந்தலில்
தெளிக்கும்
ஒர் துளி நீரில்
உருகி வழிந்திருக்கிறாய்...

என்னை விட
என்னை அதிகமாக
நானறியாமல்
ரசித்தது நீ ...

உரோமக் கணுக்களை
உன்னிப்பாக கவனிக்கிறாய் நீ

உன்னோடுதான்
அதிகம் பேசி இருக்கிறேன்.

என் கண்ணீர்
புன்னகை
கோபம் தாபம்
இதையெல்லாம்
அதிகம் பார்த்திருக்கிறாய்..

அதிகமான
என் கோபங்களை
அடக்க சொல்லி கொடுத்திருக்கிறாய்..

என் புன்னகையின்
சொந்தம் நீ
என்னை அழகு படுத்துவதில்
அத்துனை இன்பம் உனக்கு..

அழுதால் அழுது
சிரித்தால் சிரித்து
என்னோடு இன்புற்று துன்புற்று
எத்தனை வயசானாலும்
உன்னால் மட்டும்தான்
என்னை
என் குணாதியங்களை
அப்படியே காதலிக்க முடியும்..

- என் வீட்டுக் கண்ணாடி