Tuesday, May 12, 2020

இராட்சத தேவன்

இந்த இரவுகள்

உனக்காக ஏங்கினாலும்
என்னிடமிருந்து
உன்னை
தள்ளியே வைத்திருக்கிறேன்..

களைந்து கிடக்கும்
போர்வைகள்
ஏனோ உன்
சுவாசங்களை
தாங்கியதாய்
உணர்வு...

என்னை
எளிதாக கடந்துவிடும் உன்னில்
இன்னும் என்ன மையல்,
இன்றுவரை புரியவில்லை..

சொர்க்கம் நரகம்
இரண்டையும்
பரிசளித்துக்
கடந்த
இராட்சத தேவன் நீ..

உன்
மயிர்க் கணுக்களில்
மல்லாந்து கிடக்கிறது
மானமற்றுப் பெண்மை..

ஒர் முத்தத்தால்
கடந்துவிடு..

நிஜங்களில் தொலைந்து
கனவுகளில் மட்டும்
கலாபக் காதலனாக
இன்னும் நீ...

No comments:

Post a Comment