Monday, May 28, 2012

அம்மா....




வலித்தும் வலிக்கவில்லை
உன் தீண்டல்
வயிற்றில் வந்த போதே
வரம் என்று
உன்னால் கிடைத்த
வலிகளை வரமாக சுமந்தவள் ..

ஐயிரண்டு திங்கள் சுமந்து
அரை நாள் மேல் வலி கண்டு
அவசர சிகிச்சையாகி
அன்றே இறந்து பிறந்து
அகிலத்துக்கு உன்னை
ஈன்ற போதே அனைத்து
வலிகளும் மறந்ததடி..

அம்மா என்ற உன் அழைப்பில்
அன்று பட்ட வலிகளே மறக்கும் போது
இன்று நீ உன் செல்ல கையால்
சிறு கிள்ளல் செய்வது வலித்திடுமா என்ன ?

வலிகளை வரமாக சுமக்க
வல்ல இவ்வுலகில்
தாயன்றி யாரால் முடியும் ....
தாங்குவேன் கண்ணே
உன் தளிர் கரம் மலர் கரமாகி
மனை புகுந்து ...
இந்த மரமும் மண்ணில் சாயும் வரை
உன் வலிகளை கூட
என் வலிகளாக்கி
வாழ்ந்துடுவேன் உனக்காய் என்றும் ..
அம்மா என்னும் உன் ஒற்றை சொல்லுக்காய் ...



உனக்கும் வலிக்குமென்று
ஒருமுறையாவது சொல்லி இருந்தால்
உனக்கு வலிகளை தர அன்றே மறந்திருப்பேன்..
வலிகளை வரமாக சுமக்கும் உனக்கு
என் கொஞ்சலை கோர்வையாக தருகிறேன்
அம்மா இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும்
நான் உன் மகளாக வேண்டுமம்மா ...
நான் சுயநலவாதிதான் ..
ஏனென்றால் நான் இன்னும் தாயகவில்லை
சேய்தான்....
 
 
 
Modify message

No comments:

Post a Comment