Monday, May 28, 2012

பாரதி இருந்திருந்தால் ...




உன்னை நீங்க நினைத்தாலும்
என்னை நீங்காத ஒரே காதலன் நீதான்

இணையத்தளத்தில் உலா வரும்
உணர்வு கொல்லி நீதான் ...
உன்னை காதலித்தால் என்னாகும் ...'
ஒரு சுற்று உலா வந்தேன்
உன்னை அறிந்து கொள்ள ..,

முக புத்தகம் ..
அங்கே பல முகங்கள் ...
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்....
நண்பன் ஒருவனின் நண்பர்கள் தொகை
ஆயிரத்தையும் தாண்டி
அடுத்த சதத்தையும் எட்டும் நிலை
அழைத்துக் கேட்டேன் யார் இவர்கள் ...
யாருக்கு தெரியும் ....
இணைப்பு அழைப்பு கொடுத்தார்கள்
இணைத்துக்கொண்டேன் என்றான் ...
ஆயிரத்தில் ஆருயிர் நண்பர்
ஆருமே இல்லையாம் ....


என் அழகான நாய்குட்டி
வாய தொறந்து வால் வால் நு கோரசுது
ஐ அம் ஹாப்பி ..... அட்டை படத்துடன்
அழகான ...... அழகான நாயின் படத்துடன் ...
அழகான பெண்ணின் அரை குறை முகப்பு தகவல் ...
அடித்துக்கொண்டு அறுபது பேர் விருப்ப தெரிவுப்பு ...
இல்லையென்றால் figure கோவித்துகொள்ளுமாம்...
தெரியாமல்தான் கேட்கின்றேன்
நாய் வள் என்று குரைக்காமல்
ஹாய் டார்லிங் என்ற சொல்லும்....
இதெற்கெல்லாம் நாயை நன்றாக பார்க்க சொல்லி
நயமான தகவல் பரிமாற்றம் வேறு .....

நண்பனுக்கு முடியவில்லை
நாம் எல்லாம் பிரார்த்திப்போம்
நட்பு உள்ளம் ஒன்று கேட்டும்
ஆறுதலுக்கு கூட ஆரும் ஏதும் சொல்லவில்லை
அதையும் விருப்பம் தெரிவிகின்றார்கள்
மனவருத்ததையும் விரும்பும்
மன நோய் பிடித்தவர்களா இவர்கள்....?

கையிலே மது
கருத்திலே மாது
வாயிலே ஊது ....
இடியே விழுந்தாலும்
இம்மியளவு கூட கேட்காமல்
இடி தாங்கியாக
செவிகளை அடைத்தபடி
இசை அடைப்பு ....

அன்பாக அழைக்கும் அன்னை குரல் கேட்காது
அதட்டி கூப்பிடும் தந்தையை கூட மதிக்காது
அழகான பிகர் சொல்லும்
அது பிகுரா இல்லை மிகுரா என்று
அறிந்து கொள்ளாமலே .....
அது சொல்லும்
அலோ.. என்ற சொல்லுக்காய்
அனுதினமும் ....
உணர்வற்ற உயிருள்ள பிணங்களாய்
இணையத்தின் முன்
வாழ்வின் இருள்அடிப்பு ....


இணையத்தில் உலாவரும்
இணையற்ற காதலன் இவன்
என் காதலனை விட
என்னை நேசிக்கும்
இணையற்ற காதலன் ...
ஆனால் இழப்பு நிறைய
காதலிக்கும் போது தெரிவதில்லை
இழப்பு .... காலத்தின் போக்கில்
கடுகதியில் தெரியவரும்
ஓர் இணையை காதலித்தாலும்
இணையத்தை காதலித்தாலும்
இழப்புகள் ஒன்று தான் ...


பாரதி இருந்திருந்தால் பாடி இருப்பான் ....

என்று தணியும் இந்த இணையத்தின் தாகம்
எங்கே முடியும் எங்கள் இளைன்கர்கள் மோகம் ...





No comments:

Post a Comment