Monday, May 28, 2012

நம்பிக்கையில் ........ ...





பளபளக்கும் ஜிகினா பட்டும்
பட்டுப்போல் மென்மையான
மயிலிறகும் ...
பார்த்தாலே பரவசமூட்டும்
அழகிய ரோஜா மலரும்
இந்த ரோஜாவிற்கு
தூக்கத்திற்கு பதிலாக
துவளும் வேதனைகளையே
பரிசளிகின்றன .....

உன்னுடன் பழகிய நாட்கள்
நீ பேசிய பேச்சுக்களும்
பார்த்த பார்வைகளும்
பஞ்சன்ன படுக்கை விரிப்பு

உன்னால் அப்பப்போ
அரிதாக கேட்கப்படும்
நலன் விசாரிப்புகள்
மயிலிறகின் தீண்டலாக ...

எனக்காக நீ சிரிக்கும்
சிரிப்புகள் யாவும்
ரோஜா மலர்களாக

இவை அனைத்தையும்
என் படுக்கையாக கொண்டு
பல இரவுகள் தூங்கினேன் அன்று
இன்று இவை யாவும்
முட்க்களாகி முதுகை
கிழிக்கின்ற போதும்
முகம் சுளிக்காது உறங்குவேன்.
உன் நினைவுகள் முட்களாக இருந்தாலும்
முத்தங்களாக இருந்தாலும்
எனக்கு சுகமே.......

இருந்தும் இன்று ...
உன் அசைவுகளை உள் வாங்கி
உன் நினைவுகளை படமாக்கி
அதை அனைத்து தூங்குவதில் இன்பம்
நிஜத்தில் நீ தூரத்தில் இருந்தாலும்
நினைவில் என் அருகிலே..

ஓவியமாயும் உயிராயும்
கலந்திருக்கும் நீ
என் கனவுகளிலாவது
என் காதலின் ஆழத்தை
புரிந்து கொள்வாய் என்று
தினமும் நிழல் திரைகளை
தீண்டியவாறே துயில் கொள்கின்றேன் ...

என்ன பயன்
கனவில் கூட
என்னை காதலிக்க மறுக்கின்றாய் நீ
இல்லைஎன்றால் என் கனவுகளில்
உன் பிம்பத்திற்கு தடை விதிதிருப்பயா ..?
உன்னை காதலிக்க தவிர்த்ததில்லை
உன்னை காண்பதையும் தவிர்த்ததில்லை
ஆனால் இன்று விழித்திருப்பதை தவிர்க்கிறேன்
என் கனவுகளில் உன்னை காண்பதற்காய் ....

ஸ் ஸ் .. சத்தம் போடதே....
தூங்க வேண்டும் நான் ..
இன்றாவது என் காதலன்
என் கனவில் வருவான் ....
நம்பிக்கையில் ........ ...






No comments:

Post a Comment