Monday, May 28, 2012

விருட்சமாய் ...




உன் புன்னகையால்
உன் தீண்டல்களால்
உன் சீண்டல்களால்
உன் நினைவுகளால்
என்னுள்ளே விதையாக விழுந்து
என் விருட்சமாக வளர்ந்து
என்னுள்ளே ஆட்சி செய்கிறாய் ...


பசுமையான உன் நினைவுகள்
எனக்குள்ளே என்னை தொலைத்த நினைவுகள்
உறங்காத இரவுகளில் நட்சத்திரங்களாய்
உன் நினைவுத் துளிகள்
நிழல் கொண்டு எனை தீண்ட
சுகமான சுந்தர நினைவுகளோடு
உனக்கான என் காத்திருப்பு
தொடர்கின்றது .....


தொலைவினிலே நீ இருந்தாலும்
தொடரும் உன் நினைவுகள்
எனக்குள்ளே நட்சத்திரங்களாய்
மினு மின்னுகின்றன ....

உன் நினைவு சங்கிலிகள்
பாதமாகி பலவாகி
பன் மடங்கு என்னை
பதவிசாக வியாபித்து ...
மூளை ஆகி முண்ணான் ஆகி
மூளியமாகி ,மூலமே நீயாகி
முழுவதுமாய் கட்டி போட்டு
என்னுள் பெரும் விருட்சமாகி
வியாபித்து பூத்து குலுங்கி
புன்னகை மணம் பரப்புகின்றது


என்னுள் பூத்திருக்கும்
உன் நினைவு பூக்களின் மணம்
உன்னை சேர்ந்தும்
உனக்குள் இருக்கும்
மௌன சிறையை உடைத்து
என்று வருவாய் என்னுள் பூ பறிக்க ...
அன்றில் வராதுதான் போவாயோ..?


அன்பாய் பேசி அகம் எனும் கூட்டில்
விருட்சமாய் படர்ந்து வேரூன்றிய நீயே
வேர்களில் வெந்நீரும் ஊற்றுவாயோ
என் விழுதுகளில்
விழி நீரும் தோற்றுவிப்பாயோ..?




No comments:

Post a Comment