Monday, May 28, 2012

அன்பின் வசபடுத்திடுவோம் ...




உலகில் ஓராயிரம் பேர்
ஒருவேளை தனிலும்
உணவளிக்க ஆளின்றி
உயிரிழந்து போகும் நிலை
உன்ன உணவில்லை
உடுக்க உடை இல்லை
உறங்க புழக்கடையும் இல்லை
அவர்கள் இன்னல் துடைத்து
இரு கரம் நீட்டி
ஒரு பருக்கை சோறேனும் ஊட்ட
ஒரு நாதி இல்லை ...
இறைவனின் படைப்பில்
இப்படி ஓர் படைப்பு எதற்கு
ஏழை பணக்காரன்
ஏற்றத் தாள்வெதர்க்கு...


கையிலே செல்போனும்
கருத்திலே வாழ்க்கை சிக்கலையும்
சுமந்து போகும் எவனுக்கும்
கையேந்தி நிற்கும்
எவனை பார்க்கவும் நேரமில்லை
பசியில் மெய் சோர்ந்து
மெருகிழந்து ...
கருத்தேந்து ... கண்ணொளி இழந்து
காடு எது வீடு எது ...
பிரிவேதும் தெரியாத
மன ஒழி குன்றிய மகத்தான
உயிர் பிணம் உன்னை
அக கண் கொண்டு
ஆற தலுவியதோ ஓர் உயிர்
வாழ்க நீ பல்லாண்டு ..


இருந்தாலும் எனக்கொரு கோரிக்கை
என் மதிப்பில் உயர்ந்தவனே
உன் மதிக்கு ஏன் எட்டவில்லை
இன்று ஒரு நாள் ஒரு பொழுதுடன்
இவன் பசியும் போகாது
இவன் தேவைகளும் தீராது என்று ...
மானிடா உன் சிந்தனை எப்போது
சில சிலுவைகளை உடைத்தெறியும்
உன் சேவைகள் எப்போது பரந்த நோக்காகும்


சிந்தித்து பார்
உன் கருணை இன்றோடு போய்விடுமா
இல்லை இவன் உயிருள்ளவரை நிலைகனுமா
சுத்தமான ஆடை இல்லை
சுகாதாரமான சூழல் இல்லை
அவனையே அவன் அறியவில்லை
இவன் தேவை எல்லாம்
பாதுகாப்புடன் கூடிய
பலதொலைவான வாழ்க்கை
உன்னால் முடியும்

பசித்தவனுக்கு புசிக்க
பண்போடும் கருணையோடும்
உணவூட்டும் நீ
அவனை பாதுகாப்பான இடத்தில சேர்
உன் புண்ணியமும் வாழும்
அவன் புனிதமும் கூடும் ...
ஒரு பொழுதுக்கு உணவளித்த உன்னால்
ஓராயிரம் பொழுதுக்கும் வகை செய்ய முடியும்
முனைந்திடு சகோதரா
ஜெகத்தினை அன்பின் வசபடுத்திடுவோம் ...
 
 
 

No comments:

Post a Comment