Monday, May 28, 2012

நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...




எங்கோ தொலைவில்
நான் இருந்தாலும்
என்னுள் நான் வாளர்த்த காதல்
உன்னுள் விதையாகி
மரமாகி காய்த்து
கல கலவென பூத்து
சிரித்து மணம் வீசியது
எனக்கு மட்டும்
தெரியாமல் போகுமா ...??


தொலைவில் இருந்து
நான் நீட்டிய காதல் கரத்திற்கு
மனதுள் காதலை வைத்து
நேசக் கரத்தை நீட்டிய
உன் கரங்களை
ஸ்பரிசித்த போதே
உன் கரங்களின் ஊடே
என்னால் களவாடபடட
இதயத்தியும் ஸ்பரிசித்து கொண்டேன் ...


சம்பிரதாயங்களுக்கு கட்டுபட்ட நீ
உன் சல சலக்கும் சலனங்களுடன்
சரி சமமாய் போராடும்
சமர் சத்தங்களும் எனக்கு கேட்கும் ...
உன் ஆசைகளை உதிரிகள் ஆக்கி
என் அன்பினை துளிராத பட்டமரமாக்கி
வழிந்தோடும் கண்ணீரை
கரை புரளும் நதியாக்கி
வாழ்வை தொலைத்தவன் போன்று
வான் பார்க்கும் உன் சிரசும்
தரை பார்க்கும் தருணத்தை தந்தேனோ ...?


இனியவனே ... உனக்கு
இனிமைகளை சொந்தமாக்கத்தன் நினைத்தேன்
நீ என் நினைவுகளை சொந்தமாக்கி ஊமையானதேன்
கனவுகளை சொந்தமாக்க நினைத்தேன்
கலங்கும் கண்களை சொந்தம் கொண்டதேன் ...


தென்றலை தூது அனுப்புகின்றேன்
என் சுவாசத்தை நீ சுவாசித்து கொள்....
என் நினைவுகளை பரிசாக கொடுத்தனுப்பு
உன்னை சுடும் என் நினைவுகள்
உன்னிடம் வேண்டாம் .....


நினைவுகளுடன் வாழ்வது
என்னோடு போகட்டும்
நீயாவது நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...


No comments:

Post a Comment