Tuesday, May 12, 2020

இரவுப் பறவைகளோடு ஒரு பயணம்....

இயல்பினை

இழந்து கிடக்கும்
இரவுப் பறவைகளோடான
பயணம்...

இறந்திருக்கலாம்
இல்லாது இருந்திருந்தால்...
யாரோடும் சேரமறுக்கும்
நினைவலைகள்
நின்மதியான
உறக்கத்தை தருவதில்லை..

கடந்து சென்ற பறவையொன்று
கருவுற்றிருந்தது
அதன் கனவுகள்
என்னவாக இருக்கும்..
நிச்சயம் என்னதாக
இருக்ககூடாதென
பதட்டத்துடன் வேண்டுதல்...

நீண்ட வழிச்சாலையின்
இருளுக்கு
கண்கள் பழக்கப்பட்டிருந்தது..
இருந்தும்
சில தடுமாற்றங்கள்..
கண்களுக்கும்
கால்களுக்குமான
தூரத்தினாலிருக்கலாம்..

இருந்தும்
இரவுப் பறவைகளோடு
ஒரு பயணம்....

No comments:

Post a Comment