Tuesday, May 12, 2020

ஆடை களைந்த இரவு...

ஆடை களைந்த இரவு

அகல் ஒளியில்
அலைந்து கொண்டிருந்தது
காதல் காற்று.

பின்னிய கால் இடுக்கில்
உரசிக்கொண்ட
நுண்ணிய மயிர்கள்
பேசிக் கொண்டன..

ச்சீ வெட்கமற்றவள் நீ
ஆண்மை தனமான
ஆழுமையில்
அரண்டு புசிக்க தூண்டுகிராய்..

நீ கூடத்தான் இரக்கமற்றவன்...
உன் மறுப்புகள் பரீட்சயமானவை
அதில் இன்னும்
மது வழிகிறது என்னுள்..

நாம் ஸ்பரிசித்துக் கொண்ட
மணித்துளிகளில்
திரிதூண்டிக்
கிடக்கிரது தேகம்..

வா
வக்கிரமானவளே
விடிவதற்குள்
விரகம் தணித்திடலாம்..

சட்டென்ற வழிப்பில்
பட்டென்று உரசிய முடிகள்
பற்றிக் கொண்டன
மீண்டும் ஒரு
கட்டில் யுத்தம் தொடர..

No comments:

Post a Comment