Thursday, July 19, 2012

அலை



அந்தி மாலை
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....


சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...


அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...



அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு 
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய்
..