Thursday, May 31, 2012

உனக்காக



நினைவுகள்

உனக்காக
 நான் எழுதிய கவிதைகளை
நீ மறந்து போகலாம்
என் நினைவுகள் ...
உன்னால் மறக்க முடியுமா ...?
நினைவு

என் கனவுகள் தினம்
தீனி கேட்கிறது உன் நினைவை ..
இருந்தும் குறையாத அட்ச்சயமாக
உன் நினைவு ..

சீதணம்
உனக்கு
என்னால் கொடுக்க முடிந்த
ஒரே சீதனம் ..
அன்பு ..

வாழ்க்கை

உன்னோடு வாழும்
ஒரு கணம் போதும்
என் வாழ்க்கைக்கு
அர்த்தம் கிடைக்கும் .....




வந்துவிடு...



ரம்

வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான் தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..




கோபம்


எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச் செய்கிறதே
உன் கோபம் ...


உயிர்

ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...


ஆனந்தம்


ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...

கடமை



வீட்டுகாவலாளிக்கோ
விடியும் வரை கடமை...
தோட்ட தொளிலாலிக்கோ
இருளும் வரை கடமை...
காவல் தொளிலாலிக்கோ
குறிப்பிட்ட நேரம் வரை கடமை...
அவரவர் கடமைக்கு
நேரம் குறித்த கடவுள்
காலையில்
கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...
உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு
உறங்காது போன உன் இரவுகளை-----


அம்மா உன் கடமைக்கு
பாசத்திற்கு வரையறை
குறிக்கவில்லையே ..

பால்ய பருவம்..




அழகான என் நட்பு
அரை குறையாய் போனபோதும்
அழியாத நினைவுகளை
அந்த நாள் ஞாபகங்கள்...

கூட்டாக சேர்ந்து
குருவிகளாக 
கும்மாளம் அடித்து
அதிபரிடம் குட்டு வாங்கும் போது
பள்ளிக்கூடம் வெறுத்து ...
பழிவாங்கும் முகமாக
மொட்ட மண்டை... பட்டபெயர் வைத்தபோது
வலிகளும் மறந்தது ...



ரகசியமாக
வினாத்தாள்களின்¨
விடைகளை பரிமாறி
ஒரே புள்ளிகள் பெற்றபோது
நாம் ஒற்றுமைகளை நினைத்து
பள்ளி அறையே வியந்தபோது
நமுட்டாக சிரித்தபோது
சோதனைகளும் சுகமாகதான் இருந்தது ...



கோவில் திருவிழாக்களில்
சொல்லி வைத்து ஆடை அணிந்த போதும்
அவனுக்கும் கொடு என்று சொல்லி
கச்சானை பகிர்ந்த போதும்
ஆண் பெண் பிரிவின்றி
நட்பும் ஜொலித்து ...

பருவத்துக்கு வந்தபோது
பக்குவம் சொல்வதாய்
பால்ய சினேகிதனுக்கும்
பத்தடி தூரம் வைத்து கலாச்சாரம் ..



பறந்தாடி பல
குட்டை குளமெல்லாம்
நுழைந்தாடி ... புழுதியெல்லாம் குளைந்தாடி
குச்சிமிட்டாய் திருடி அடிவாங்கி ...
மாமரத்து அணில்களாய்
மரம் தாவி ...
மங்களம் மாமியிடம் அடிவாங்கி
மனதோடு சபித்தபோதேல்லாம்
இனித்த நட்பு .....


இன்று  நினைத்தாலும்
ஏக்கம் கொள்கிறது ...
என் சிறுவயது நட்பு வேண்டும்
சிறுக சிறுக சில்மிஷம் செயும்
என் பால்ய பருவம் வேண்டும்..

எல்லாம் இழந்து ..
இன்றும் வாழ்கிறேன்
என் இணையத்து
அருமை தோழர் தோழிகளால் ...

நான் இருக்கும்வரை
என் நட்பும் நம் தோழமையும்
என்றும் வாழும்
என் தோழர்களே ...