Friday, June 15, 2012

பரிசாக கேட்கின்றேன் ...



என்னை நீங்க உன்னால் முடிகிறது
உன்னை நீங்க என்னால் முடியவில்லை
உயிரோடு கொல்லும்
உன் உதடுகளை
பரிசாக கேட்கின்றேன் ...
பாசமாக கொஞ்சிய உன்னால்
பாவப்பட்ட வார்த்தைகளை
பரிசாக கொடுக்க
எப்படி முடிந்தது ...
ஒரு வார்த்தை கேட்டு
அதை உணர்வோடு அழுத்திட ...
என் உண்மையை உணர்த்திட ...



அனாதையாய் ....





உன்னோடு சேர்ந்து
ஒன்றாய் இருந்தேன் ..
உன் உணர்வோடு சேர்ந்து
உயிரை தொலைத்தேன் ...
உனக்காக பேசி
உனக்காக சிரித்தேன்
இன்று
எனை நீ உயிரோடு கொல்வாய்
என் தெரிந்திருந்தால்
அன்றே இறந்திருப்பேன்...
அழகாக சேர்ந்த நம் இதயம் ..
அனாதையாய் போகாமல் இருந்திருக்கும் ..



உன்னை சுமந்திடுவேன் ...





உன்னால் புண் பட்ட போதும்
உன் உணர்வுகள்
எனக்கே சொந்தம் .....
இந்த நினைவுகளுடன்
என்றும் வாழ்ந்திடுவேன்
உன்னை
மடியில் சுமக்கும்
வரம்தான் கிடைக்கவில்லை
மனதில் சுமக்கும்
வாரமாவது கிடைத்ததே
போதும் ....
மனதோடு உன்னை சுமந்திடுவேன் ...


உணர்வுகளால்....





உனக்கான தவம்....
ஒவொரு கணமும்
இசையுடன்தான் என் பயணம்
என் கனவுகளுக்கு
என் நினைவுகளுக்கும்
என் உணர்வுகளுக்கும்
ஒரே வடிகால் இசைதான் ...


உன் வாசத்தை சுவாசிக்கும்
என் நாசி ...
உன் நினைவுகளை
இசை கொண்டு மீட்டுகின்றது ...


உன் மீது நான் கொண்ட காதல்
உனக்கு பொய்யாக தெரியலாம் ...
உனக்கான என் தவம்
உபயோகமற்று போகலாம்
என் உள்ளத்து தவம் யாவும்
உனக்கான தேடலாக
இசைகிறேன் தனிமையில் ...
உனக்கு பிடித்த தனிமை
எனக்கும் பிடிக்குது ...
நீ இல்லாத தனிமைகளை
தனிமையிலேயே கழிக்கிறேன்
இசையிலே மிதகின்றேன் ....


ஒவொரு தடவையும்
உன்னால் அறுக்கபட்ட தந்திகள்
ஒவொன்றாக இணைத்து
உனக்கான நினைவுகளை
உணர்வுகளால் இசைகின்றேன் ...
வா வந்துவிடு ....
வாசம் மறந்த எனக்கு
நேசம் கொடு ...
என் நினைவுகளை உன்னுடன் கலந்துவிடு
 
 
..