Thursday, August 16, 2012

வளர்ச்சி

 
குரங்கில் இருந்து
குலம் தோன்றியதாய்
குல பெருமை பேசும் மானிடா
குரங்கை விட கேவலமாய்
நீ போன கதை என்னடா ...?

ஐந்தறிவு ஜீவனிடம்
உயிர் பெற்று வந்தவர்தாம்
அணு அணுவாய்
ஆக்கம் கண்டு
அகிலத்தையே
ஆட்டிபடைக்கும்
வித்தைகள் கற்று கொண்டீர்

உன் உழைப்பில்
நீ உயர்ந்த போது
உன் வளர்ச்சியில்
நிமிர்வு தெரியுதடா
உடல் உழைப்பால்
உயர்வுகண்ட உன் நிமிர்வு
இயந்திரத்தின் பிடியில்
இயல்பிழந்து போகுதுபார்

கணனியின் முன்
கட்டிழந்து காலம் மறந்து
கருத்தை பதிபவனே
உன் நிமிர்வு உருக்குலைந்து
போகுது பார் ....
உலகை வென்ற மமதை உன்னுள்
உன்னை வென்ற உவகை உலகுள்

மந்தி இனம் பிரசவித்த
மகத்தான மனித இனம் நீ
ஆனால் உனக்குள்
மமதை மனவீக்கம் என
மாசுகள் நிறைந்து
மருகிழந்து போகின்றாய்

உன்னை பிரசவித்த உன் இனமே
உன் கருவில் உதிக்க மறுக்கிறதே
உனக்கு பிறந்தால்
மந்தி இனமே
மதி இழந்து மகிமை இழந்து போகுமென்றா ..?

மந்தியோடு மனிதனை
மறந்தும் ஒப்பிடாதீர்
ஆறறிவு ஜீவன் என்று
அலம்பல் செய்துகொண்டு
அட்டூழியம் செய்வதற்கு
ஐந்தறிவு ஜீவனாய்
அது போக்கில் வாழ்வது மேன்மையடா ...

வளர்ந்து விட்டோம்
வென்று விட்டோமென
வாய் கிழிய போசுபவனே
நீ உன் வளர்ச்சி பாதையில்
விட்டு வந்த எச்சங்களை பார்
உன் வளர்ச்சியின் மேன்மையும் தெரியும்
வாழ்கையின் நீ இழந்த வசந்தமும் தெரியும்
உன் வளர்சிக்கு தலை வணங்கும் நான்
உன் இழப்புக்கு மனமும் வருந்துகின்றேன் ..

பண்டிகை நாள் ...காலம் கடுகதியில்
கண நேர தயக்கமின்றி
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
காலத்தின் ஓட்டத்திற்கும்
வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும்
வாய்க்குள் கூட
வருவதை திணித்துக்கொண்டு
காலில் ரெக்கை கட்டிய கூட்டங்களாய்
இன்று மனித இயந்திரங்கள் ..
புலர்ந்ததில் இருந்து
புணர்தல்வரை
வேகம் விவேகமற்று
போய்கொண்டேதான் இருக்கிறது ...


எஸ் எம் எஸ் உம்
இ மைலும்
இதயங்களை இணைக்கும் காலத்தில்
உறவுகளையும் இவைதான்
இணைக்கின்றது ...


முகம் பார்த்து
முகவரி சென்று
முகமன் கூறும் வழக்கமெல்லாம்
முகபுத்தகம் ... இணையதள வழியால்
இனிதாகத்தான் நடகின்றது
மாமன் மச்சான் என்று கட்டி தழுவுதலும்
மாமி மாமா என்று மரியாதையை செய்வதும்
அக்கா தங்கை என கட்டி கொள்வதும்
அரிதாக போய்விட்டது ..


ஒரு மின் அஞ்சலிலும்
எஸ் எம் எஸ் இலும்
ஹாய் ஹவ் ஆர் யு ...
கேட்பதிலும் அடங்கி போய்விட
எங்கே நம் கலாச்சாரம்
இடிவிழுந்த பனை மரமாய்
மொட்டையாய் போய்விடுமோ
என்ற அச்சம் தலை தூக்க....
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும்
பேணி காக்க ...
பண்டிகைகள் நாம் இருப்பாதாய்
மார்தட்டி கொள்கிறது ...

வாசல் தெளித்து கோலம்
வகை வகையாய் பலகாரம்
வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன்
வேபில்லையாட்டும் மாமி
விழுந்து விழுந்து படிக்கும்
அக்கா அண்ணா தம்பி தங்கையர்
எப்போதும் அலுத்துகொள்ளும் அப்பா
அடுப்பங்கரையில் அடைந்து கொள்ளும் அம்மா
அயல்வீட்டு அருமை நபர்கள்
அனைவரும் ஒன்று கூடி
அழகாய் பொழுதை கழிக்கும்
அழகான பண்டிகை நாள்

அனைவர் முகத்திலும்
அத்தி பூத்தால் போல்
அவளவு சந்தோசம் ....
இதன் புண்ணியத்தை பெருமையை
கட்டி கொள்வது
பண்டிகையா ...?
இல்லை பண்டிகையை
விடுமுறை நாளாக்கிய
நம் பாரதத்து தலைவர்களா ...?

எது எப்படியோ
ஒன்று கூட ஒரு நாள்
உலகை ரசிக்க ஒருநாள்
தின்று கழிக்க ஒருநாள்
திகட்டும் வரை பேச ஒருநாள் ..
இந்த ஒருநாள் ..
ஒவொரு நாளும் வாராதோ
ஏக்கத்துடன் .....

என் தவம்..

 
 
 
காதலால் இருவர்
கருத்தொருமித்து
வாழ்தலாம் திருமணம்
காதலால் இணையாது போனாலும்
காசால் இணையும்
பல பந்தம்
பலமற்ற பந்தம் ....


கால மாற்றத்தில்
காசும் மாறி
கனவுகளும் மாறி
காலத்துக்கும்
கவலையை தரும் பந்தம் தவிர்த்து
உன்னை காதலால்
கை பிடிக்க நினைத்தேன்
என் கண்ணாளனே...


தினம் பல கனவு
தித்திக்கும் கனவு
விடிந்ததும் திகட்டும் உலகு

பூ பந்தலிட்டு
புது மனைகள் தான் இட்டு
மணமகளாய் நானும்
என் மன நாஜகனாய்
என் மணாளனாய்
என்னருகில் நீ
உன்னருகில் நான்

காஞ்சி பட்டும்
கரை வேஷ்டியும்
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள
அவப்போது அசையும் கைகள்
அடிகடி பட்டுக்கொள்ள
முட்டிக் கொள்ளும் உணர்வுகள்
மூச்சை அதிகரிக்க ...
அவசரமாய் பரிமாரிகொள்ளும்
கடைக்கண் பார்வையில்
உன் கண் சிமிட்டலில்
வெட்கம் வேள்வியில் தகிக்கும் ...


மற்றாரும் உற்றாரும்
சுற்றமும் சூழ நின்று
மங்கள வாத்தியம் முழங்க
மங்கள நாண்...
நீ மகிழ்வுடன் சூட்டும் நேரம்
என் மனமெங்கும் நீ நிறைவாய் ..
என் மனதெல்லாம் பூ சொரிவாய் ..


ஏக்கங்களும் தாபங்களும்
இடை விடாத ஞாபகங்களும்
இடை விடாது பற்றி கொள்ள
வாழ்த்து கூறுபவரும்
வர்ணனை செய்பவரும்
கருத்தில் அல்ல
கண்ணில் கூட பதிய மாட்டார்கள் ...
புகை படம் பிடிபாதாய் கூறி
உன் தீண்டலில் என்னை
என் உணர்வை சிதைக்கும்
புகைப்பட பிடிப்பாளர்
உன்னிடம் புண்ணியம் கட்டிகொல்வார்

புரிந்தும் அறிந்தும்
புரியாமல் அறியாமல்
இருப்பதில் சுகம் ...
எதனை சுகம் ...
இணை பிரியாத துணைவியாய்
இன்ப மயக்கத்தில்
உன் இதய சுவர்கத்தில்
என்றுமே உன் ராணியாய்
உலாவரும் இனிய வரம் வேண்டும் ...


அம்மா பால் .....
எங்கயோ ஆழமாய்
ஒரு குரல் ஒழிக்க
மெதுவாய் தூக்கம் கலைகிறது
என் துயர் படிந்த
இன்ப கனவும் கலைகிறது ..

வாழ முடியாத வாழ்வை
கனவிலே வாழ்ந்த சுகத்துடன்
மீண்டும் கனவுகளுக்காய்
இரவினை நோக்கிய
என் தவம் தொடரும் ...

தொலைத்தேன் ...

உனக்காக அலைந்தேன்
என் கால்
ரேகை தான்
அழிந்தது ...
உன் இதயத்தில்
என் பாதச்சுவடு
பதியவே
இல்லை...

தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறை நிலவை போல
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...
மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
கதிரவனை போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...

நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது உன் நினைவுகள்...

உன்னை நான்
பார்த்த நாளிலிருந்து
என் இதயத்தை
தொலைத்தேன் ..

நீ என்னை
பார்த்த நாளிலிருந்து
என் தூக்கத்தை
தொலைத்தேன் ...

உன் மார்பை
தொட்டிலாக்கி
எனை தாலாட்டி
உறங்க வைப்பாயா....'?


என் ஆசைகள் எல்லாம்
கருவிலேயே
தொலைந்து போகின்றன..
உன்னை காதலித்த நாள்முதல் ....

உனக்காக கவிபாட பலர் இருந்தாலும்
இது எனக்காக நான் பாடும் கவிதை....

அடுத்த காதலர் தினத்தில்
உன்னுடன் நான் வாழ
வரம் கேட்கவில்லை
என் நினைவுகள் உன்னிடம் வாழ
இடம் கேட்கின்றேன்
உன் இதயத்தின் ஓர் ஓரத்தில்