Monday, May 28, 2012

மறுபடியும்..




உன்னை சுற்றியே
என் உலகம் சுழல்கின்றது
உன்னை பற்றியே
என் நினைவு அலைகிறது
உன்னை தேடியே
என் உணர்வு கலைகிறது


உனக்காக என் பொழுது புலர்கிறது
உனக்கான என் ஏக்கங்களில்
என் பொழுது கரைகிறது ..
என் தலையனையை கேட்டு பார்
உனக்காக நான் ஏங்கி தவித்த
தனிமையின் கொடுமைகளை
தாராளமாய் சொல்லும் ....

என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..


உன்னால் புறக்கணிக்க பட்டபோதும்
உன்னை தேடியே என்
இதயத்தின் பயணம் தொடர்கிறது ..
பலதடவை உன்னால் மிதிபட்டபோதும்
மறுபடியும் உன் பாதத்தை தேடி
என் இதயம் வருவது
உன்னை நேசிக்க அல்ல
உன்னை ஸ்பரிசிக்க..



இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...



பொழுது புலர்ந்ததில் இருந்து
ஒரு பொட்டு கூட ஓய்வு இல்லாது
பட படவென பல வேலைகள் பார்த்து
பாட புத்தகத்தை எடுத்தால்
படுத்து உறங்காமல்
பாடமா படிக்க தோன்றும் ...?

ஈழத்து சிறுமிகளின்
சிறப்பான வாழ்வு இப்டித்தான்...
தாயை இழந்து
தந்தையின் அரவணைப்பில்
தளர் நடை போட்டு
தரணியை வலம் வரும் வயதிலேயே
தாய்க்கு நிகரான பொறுப்புகள்
தலையில் இறக்கபட்டுகின்றது ....

அன்றில் தந்தையை இழந்து
தாயின் அரவணைப்பிலும்
தாய்க்கே தாயாய் மாறும்
தருணங்களும் உருவகபடும் ...

தாய்க்கே தாயாகி
தந்தைக்கே தாயாகி மகளாகி
தன் சிறு வயதிலும்
தாளாத சுமையை தாங்கும்
ஈழ சிறுமியின் கல்வி
எட்டாத கொப்புத்தான்...

அவளுள்ளும் ஆசைகள்
அடுத்தவரை போல்
தானும் கனவுகளை சுமக்க ..
ஆறாத காயங்கள்
அழியாத சோகங்கள்
அவற்றை எல்லாம்
அளித்துவிட்டு அரங்கேற ...

ஆசைகள் மட்டும் இருந்தென்ன லாபம்
அமரரான அன்னையும் தந்தையும்
அருகிருந்தால்
அவளாலும் அகிலத்தை ஆளமுடியும் ...
இருந்தும் விடா முயற்சில்
விழுதுகளை பற்றி எந்திரிக்கும்
ஈழத்து சிறுமிகளின்
எதிர்கால ஆசைகளுக்கு
இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...

புத்தகத்தில் தலைவைத்து தூங்கினால்
அறிவு வாளருமாமே...
அந்த வரத்தை
ஈழத்து சிறுமிகளுக்கு
இயைந்தளித்துவிடு ....


கணப்பொழுதை தந்துவிடு ..




உன்னுடன் நான்
என்னுடன் நீ
எமக்குள் ஓர் உயிர்
காதலால் என் மனவறையில்
உன்னை சுமந்தேன்
நம் காதல் பரிசாய்
எனக்குள் என் கருவறையில்
உன் உயிரை சுமப்பேன்


உனக்குள் நான்
நமக்குள் நம் அன்பு பரிசாய்
என் இதயமும்
நம் இன்பமும் சேர்த்து
உருவாகிய காதல் பரிசாய் நம் குழந்தை


காலங்கள் கடந்தும்
நமக்குள் ஒரு அன்பின் பிணைப்பு
அகத்துள் ஒரு மலர்ச்சி
பூவாகி காயாகி கனிந்து
பழமாகி மீண்டும் விதையாகி
விருட்சமாகி நம் குலம் அன்பு பிணைப்பால்
அனுதினம் வளரும் அந்த காட்சியை
தினமும் அக கண்ணில் காண்கிறேன் கண்ணாளா ..


உன்னோடு ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
ஒருவர் கை பிடித்து
உலாவந்து உலகை வென்று
காதலால் ஒரு பரிசளிக்கும்
அந்த கணப்பொழுதை தந்துவிடு ..
 
 
 

என் தந்தை...




நல் உரைகள் கூறி
நல் வழியில் என்னை
நல் வழி நடத்திய
என் மரியாதைக்குரிய
மகத்தான ஓர் மனிதன்
என் தந்தை

வாழும் காலத்தில்
வாழ்ந்தால் இப்படிதான்
வாழவேண்டும் என்று
எடுத்துகாட்டாய்
வாழ்ந்து காட்டும்
ஆடவன் என் தந்தை

தளிர் நடை பயின்று
தடுமாறி விழுந்த போதும்
தன்னிலை இலாது
தாறு மாறாய் ஓடிய போதும்
தன் கரம் தந்து வழி நடத்தியதும்
வழி காடியதும் என் தந்தையின் கரங்களே ...

வாகையின் பாடங்களை
பல தடவைகளில்
ஆசானாகவும்
அன்பான சொதரனாயும்
அருமையனா நண்பனாவும்
அருகமர்ந்து அன்பாக பயிற்ருவிதது
என் தந்தையின் கரங்களே ...

ஆனா முதல்
அறுதிவரை
அன்போடு கற்றுத்தந்த என் தந்தையே
அடுத்த பிறவிகளிலும்
எனக்கே தந்தையாய் வேண்டும் ...

அன்பாக ஆசையாக
உங்கள் கரம் பற்றி
நடை பயிலும்
அந்த ஐந்து வயது
மீண்டும் வேண்டும் எனக்கு ..
 
 

விருட்சமாய் ...




உன் புன்னகையால்
உன் தீண்டல்களால்
உன் சீண்டல்களால்
உன் நினைவுகளால்
என்னுள்ளே விதையாக விழுந்து
என் விருட்சமாக வளர்ந்து
என்னுள்ளே ஆட்சி செய்கிறாய் ...


பசுமையான உன் நினைவுகள்
எனக்குள்ளே என்னை தொலைத்த நினைவுகள்
உறங்காத இரவுகளில் நட்சத்திரங்களாய்
உன் நினைவுத் துளிகள்
நிழல் கொண்டு எனை தீண்ட
சுகமான சுந்தர நினைவுகளோடு
உனக்கான என் காத்திருப்பு
தொடர்கின்றது .....


தொலைவினிலே நீ இருந்தாலும்
தொடரும் உன் நினைவுகள்
எனக்குள்ளே நட்சத்திரங்களாய்
மினு மின்னுகின்றன ....

உன் நினைவு சங்கிலிகள்
பாதமாகி பலவாகி
பன் மடங்கு என்னை
பதவிசாக வியாபித்து ...
மூளை ஆகி முண்ணான் ஆகி
மூளியமாகி ,மூலமே நீயாகி
முழுவதுமாய் கட்டி போட்டு
என்னுள் பெரும் விருட்சமாகி
வியாபித்து பூத்து குலுங்கி
புன்னகை மணம் பரப்புகின்றது


என்னுள் பூத்திருக்கும்
உன் நினைவு பூக்களின் மணம்
உன்னை சேர்ந்தும்
உனக்குள் இருக்கும்
மௌன சிறையை உடைத்து
என்று வருவாய் என்னுள் பூ பறிக்க ...
அன்றில் வராதுதான் போவாயோ..?


அன்பாய் பேசி அகம் எனும் கூட்டில்
விருட்சமாய் படர்ந்து வேரூன்றிய நீயே
வேர்களில் வெந்நீரும் ஊற்றுவாயோ
என் விழுதுகளில்
விழி நீரும் தோற்றுவிப்பாயோ..?




சிதைந்து போனது...



அன்பே ...

அணைத்திட துடிக்கும் என் கரைங்களை விட
உன்னை அழைத்திட துடிக்கும் இதழ்களை விட
உன் ஸ்பரிசத்தை உணரும் உடலை விட
உன்னை காண துடித்த என் கண்களுக்கு
காரணமின்றி ஏன் தண்டனை கொடுக்கின்றாய் ...

உன்னால் உன் நினைவுகளால்
சிதைந்து போனது என் இதயம் ...
கண்களின் வழியே இதயத்தை காணலாமாம்
என் கண்களில் வடியும் என் உதிரம்
உன்னால் உன் நினைவுகளால்
அணு அணுவாக சிதைந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை காட்டுகிறதா ....?

உன் நினைவுகளை மலர் கொண்டு
தினவேட்டில் தீட்டினேன்...
என் வேதனைகளை சுமந்து
அதுவும் எனக்காக தன்நீரை
சென்நீராக சிந்துகின்றது
நீமட்டும் என்னை உணராது போனதேனோ ..


என் மனதை திருடிய நீயே
என் மரணத்திற்கும் மாலை இடுவாயோ ..
ஒரு முறையாவது
உன் காதலை நான் ஸ்பரிசிக்கும்
வரம் ஒன்று தந்துவிடு
மனதோடு வாழ்ந்துவிட்டு போவேன் .


நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...




எங்கோ தொலைவில்
நான் இருந்தாலும்
என்னுள் நான் வாளர்த்த காதல்
உன்னுள் விதையாகி
மரமாகி காய்த்து
கல கலவென பூத்து
சிரித்து மணம் வீசியது
எனக்கு மட்டும்
தெரியாமல் போகுமா ...??


தொலைவில் இருந்து
நான் நீட்டிய காதல் கரத்திற்கு
மனதுள் காதலை வைத்து
நேசக் கரத்தை நீட்டிய
உன் கரங்களை
ஸ்பரிசித்த போதே
உன் கரங்களின் ஊடே
என்னால் களவாடபடட
இதயத்தியும் ஸ்பரிசித்து கொண்டேன் ...


சம்பிரதாயங்களுக்கு கட்டுபட்ட நீ
உன் சல சலக்கும் சலனங்களுடன்
சரி சமமாய் போராடும்
சமர் சத்தங்களும் எனக்கு கேட்கும் ...
உன் ஆசைகளை உதிரிகள் ஆக்கி
என் அன்பினை துளிராத பட்டமரமாக்கி
வழிந்தோடும் கண்ணீரை
கரை புரளும் நதியாக்கி
வாழ்வை தொலைத்தவன் போன்று
வான் பார்க்கும் உன் சிரசும்
தரை பார்க்கும் தருணத்தை தந்தேனோ ...?


இனியவனே ... உனக்கு
இனிமைகளை சொந்தமாக்கத்தன் நினைத்தேன்
நீ என் நினைவுகளை சொந்தமாக்கி ஊமையானதேன்
கனவுகளை சொந்தமாக்க நினைத்தேன்
கலங்கும் கண்களை சொந்தம் கொண்டதேன் ...


தென்றலை தூது அனுப்புகின்றேன்
என் சுவாசத்தை நீ சுவாசித்து கொள்....
என் நினைவுகளை பரிசாக கொடுத்தனுப்பு
உன்னை சுடும் என் நினைவுகள்
உன்னிடம் வேண்டாம் .....


நினைவுகளுடன் வாழ்வது
என்னோடு போகட்டும்
நீயாவது நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...


அமாவாசைகள் ...




உனக்காக என் காத்திருப்பு
தெரிந்தும் மறைந்தும்
மறைத்தும் உன் பார்வைகள் எதற்கு ...
ஒளிந்திருந்து ஒருக்களித்து
உன் பார்வைகளை வீசாதே
உன்னை நான் அறிவேன்
என்னை நீயும் அறிவாய் ...


தினம் தினம்
உனக்காக மட்டும்
என் தனிமைகள் தவங்களில் கரைய
உன் வரவுக்காக
உருகியபடி நான் ...
உன் வரவினில்
என் வாழ்கையை தொலைக்க
உள்ளன்போடு உனக்காக
என் காத்திருப்புக்கள்


உன் மனதை திறந்து
இருள் விலககி
உன் இதய அறையில்
என்று எனை கொலு வைப்பாய்
அன்று முதல் நாள் எல்லாம் பௌர்ணமிதான்
அது வரை பவுர்ணமிகளும்
அமாவாசைகள் தான் .....



உப்பு துளிகளும்




என் வானமே கருக்கொள்கிறது
வற்றாத நதியாய்
வரையறை இல்ல என் அன்பு
வசப்படாமல் போனதால்
என் விழிகளும்
வற்றாத வைகை ஆனதோ .....


என்னை சூழ பல இதயம்
இருந்தும் இல்லை எனகோர் உதயம்
காதலுக்கு மட்டுமல்ல
நல்ல நட்புக்கும் ராசி வேண்டும்
நல்லதே நினைத்தேன்
நான் மட்டும்
நயவஞ்சகம் ஏன் உனக்கு
ஆனந்த கண்ணீர் யாவும்
இன்று அணை கடந்த வெள்ளமாகி
ஆறு கடல் தாண்டிடுமோ ..
எள்ளி நகையாட நட்பென்று நீ எதற்கு
எதுமே இல்லமால்
பெயருக்கு ஓர் காதல் உறவு எதற்கு


என் இதயத்திற்கு வலிக்குமென்று
அவன் துயில என் ரணங்களை சுகமாக்கி
வெண் பஞ்சு மேகம் அனுப்பினேன்
என் நட்புக்கு தோள்கொடுக்க
நானும் ஒருத்தியாய்
என் தோழமை துயில
நட்பு கரம் கொடுத்து
வெண் மேகத்தை படுக்கை விரித்தேன் ...


வாங்கி வந்த வரமா
இல்லை .வந்ததால் வந்த சாபமா
நல்ல நட்பும் இல்லை
நான் நாடும் இதயமும் இல்லை
எட்ட நின்றே
என் வெண் மேக துகள்களை
கரு மேகமாக்கி
என் கண் வழியே
கர் இருளை திரட்டி
கண்ணீரை கரை புரள செய்கின்றது...

வானமே கண்களாக
வாங்கி வந்த சாபங்கள்
கண்ணீர் துளிகளாக
என் வானமும் காரைகிறது
என் கண்ணீர் துகளில்..
கண்ணீர் துளிகள் சேர்ந்து
கடலையே உருவாகினாலும்


கண நேரம் நனைந்து விடு
என் உப்பு துளிகளும்
உவப்பை உணர்த்திவிடும் .. ..
 
 
 
 

அன்பின் வசபடுத்திடுவோம் ...




உலகில் ஓராயிரம் பேர்
ஒருவேளை தனிலும்
உணவளிக்க ஆளின்றி
உயிரிழந்து போகும் நிலை
உன்ன உணவில்லை
உடுக்க உடை இல்லை
உறங்க புழக்கடையும் இல்லை
அவர்கள் இன்னல் துடைத்து
இரு கரம் நீட்டி
ஒரு பருக்கை சோறேனும் ஊட்ட
ஒரு நாதி இல்லை ...
இறைவனின் படைப்பில்
இப்படி ஓர் படைப்பு எதற்கு
ஏழை பணக்காரன்
ஏற்றத் தாள்வெதர்க்கு...


கையிலே செல்போனும்
கருத்திலே வாழ்க்கை சிக்கலையும்
சுமந்து போகும் எவனுக்கும்
கையேந்தி நிற்கும்
எவனை பார்க்கவும் நேரமில்லை
பசியில் மெய் சோர்ந்து
மெருகிழந்து ...
கருத்தேந்து ... கண்ணொளி இழந்து
காடு எது வீடு எது ...
பிரிவேதும் தெரியாத
மன ஒழி குன்றிய மகத்தான
உயிர் பிணம் உன்னை
அக கண் கொண்டு
ஆற தலுவியதோ ஓர் உயிர்
வாழ்க நீ பல்லாண்டு ..


இருந்தாலும் எனக்கொரு கோரிக்கை
என் மதிப்பில் உயர்ந்தவனே
உன் மதிக்கு ஏன் எட்டவில்லை
இன்று ஒரு நாள் ஒரு பொழுதுடன்
இவன் பசியும் போகாது
இவன் தேவைகளும் தீராது என்று ...
மானிடா உன் சிந்தனை எப்போது
சில சிலுவைகளை உடைத்தெறியும்
உன் சேவைகள் எப்போது பரந்த நோக்காகும்


சிந்தித்து பார்
உன் கருணை இன்றோடு போய்விடுமா
இல்லை இவன் உயிருள்ளவரை நிலைகனுமா
சுத்தமான ஆடை இல்லை
சுகாதாரமான சூழல் இல்லை
அவனையே அவன் அறியவில்லை
இவன் தேவை எல்லாம்
பாதுகாப்புடன் கூடிய
பலதொலைவான வாழ்க்கை
உன்னால் முடியும்

பசித்தவனுக்கு புசிக்க
பண்போடும் கருணையோடும்
உணவூட்டும் நீ
அவனை பாதுகாப்பான இடத்தில சேர்
உன் புண்ணியமும் வாழும்
அவன் புனிதமும் கூடும் ...
ஒரு பொழுதுக்கு உணவளித்த உன்னால்
ஓராயிரம் பொழுதுக்கும் வகை செய்ய முடியும்
முனைந்திடு சகோதரா
ஜெகத்தினை அன்பின் வசபடுத்திடுவோம் ...
 
 
 

பாரதி இருந்திருந்தால் ...




உன்னை நீங்க நினைத்தாலும்
என்னை நீங்காத ஒரே காதலன் நீதான்

இணையத்தளத்தில் உலா வரும்
உணர்வு கொல்லி நீதான் ...
உன்னை காதலித்தால் என்னாகும் ...'
ஒரு சுற்று உலா வந்தேன்
உன்னை அறிந்து கொள்ள ..,

முக புத்தகம் ..
அங்கே பல முகங்கள் ...
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்....
நண்பன் ஒருவனின் நண்பர்கள் தொகை
ஆயிரத்தையும் தாண்டி
அடுத்த சதத்தையும் எட்டும் நிலை
அழைத்துக் கேட்டேன் யார் இவர்கள் ...
யாருக்கு தெரியும் ....
இணைப்பு அழைப்பு கொடுத்தார்கள்
இணைத்துக்கொண்டேன் என்றான் ...
ஆயிரத்தில் ஆருயிர் நண்பர்
ஆருமே இல்லையாம் ....


என் அழகான நாய்குட்டி
வாய தொறந்து வால் வால் நு கோரசுது
ஐ அம் ஹாப்பி ..... அட்டை படத்துடன்
அழகான ...... அழகான நாயின் படத்துடன் ...
அழகான பெண்ணின் அரை குறை முகப்பு தகவல் ...
அடித்துக்கொண்டு அறுபது பேர் விருப்ப தெரிவுப்பு ...
இல்லையென்றால் figure கோவித்துகொள்ளுமாம்...
தெரியாமல்தான் கேட்கின்றேன்
நாய் வள் என்று குரைக்காமல்
ஹாய் டார்லிங் என்ற சொல்லும்....
இதெற்கெல்லாம் நாயை நன்றாக பார்க்க சொல்லி
நயமான தகவல் பரிமாற்றம் வேறு .....

நண்பனுக்கு முடியவில்லை
நாம் எல்லாம் பிரார்த்திப்போம்
நட்பு உள்ளம் ஒன்று கேட்டும்
ஆறுதலுக்கு கூட ஆரும் ஏதும் சொல்லவில்லை
அதையும் விருப்பம் தெரிவிகின்றார்கள்
மனவருத்ததையும் விரும்பும்
மன நோய் பிடித்தவர்களா இவர்கள்....?

கையிலே மது
கருத்திலே மாது
வாயிலே ஊது ....
இடியே விழுந்தாலும்
இம்மியளவு கூட கேட்காமல்
இடி தாங்கியாக
செவிகளை அடைத்தபடி
இசை அடைப்பு ....

அன்பாக அழைக்கும் அன்னை குரல் கேட்காது
அதட்டி கூப்பிடும் தந்தையை கூட மதிக்காது
அழகான பிகர் சொல்லும்
அது பிகுரா இல்லை மிகுரா என்று
அறிந்து கொள்ளாமலே .....
அது சொல்லும்
அலோ.. என்ற சொல்லுக்காய்
அனுதினமும் ....
உணர்வற்ற உயிருள்ள பிணங்களாய்
இணையத்தின் முன்
வாழ்வின் இருள்அடிப்பு ....


இணையத்தில் உலாவரும்
இணையற்ற காதலன் இவன்
என் காதலனை விட
என்னை நேசிக்கும்
இணையற்ற காதலன் ...
ஆனால் இழப்பு நிறைய
காதலிக்கும் போது தெரிவதில்லை
இழப்பு .... காலத்தின் போக்கில்
கடுகதியில் தெரியவரும்
ஓர் இணையை காதலித்தாலும்
இணையத்தை காதலித்தாலும்
இழப்புகள் ஒன்று தான் ...


பாரதி இருந்திருந்தால் பாடி இருப்பான் ....

என்று தணியும் இந்த இணையத்தின் தாகம்
எங்கே முடியும் எங்கள் இளைன்கர்கள் மோகம் ...





உயிரையும் தருவாள்




உன் மன அறையில்
மண்டி இட்டு மன்றாடுபவள் நான்
இருந்தும்
என் மனம் ஒன்றும்
மலர் அல்ல
எனக்குள்ளும்
எண் அற்ற எதிர் பார்ப்புகள் ..
கரடு முரடானா
காட்டமான கொள்கைகள்

உன்னிடம் தினம்
கனவிலும் நினைவிலும்
ஒவொன்றாக சொல்கிறேன் ..
எதற்கும் உனிடம்
எதிர் வினைகள் இல்லை ...

உன்னை நேசிப்பவள் நான்
உன்னை பூசிபவள் நான்
சில சமயம் தூசிப்பவளும் கூட ..
இருந்தும் என் மன தராசில்
நீதான் நிறை நிலை ...

என் காதல்
ஒரு நாள் உன்னை
கனிய வைக்கலாம்
என்பால் உனக்கு
கருணையும் பிறக்கலாம்

இன்று சொல்கிறேன் கேள்
உன் மனதராசில்
அன்று என் பகுதி தாழ்ந்து
பொன் பொருள் பகுதி
உயர்ந்து
உன் மனதில்
எனக்கான இடம்
நிச்சயிக்க படுகின்றதோ
அன்று ...
நீ கேட்டால்
உயிரையும் தருவாள்
இவள் .... உன்னவள் ..
 
 
 

இதயம் குப்பையில் ....




உனக்காக நான் அனுப்பிய
என் இதயத்தை
ஏற்க மறுத்து
திருப்பி விட்டாய் ....

உனக்காக நான் அனுப்பியது
என் இதயத்தை அல்ல
என் மனதுனுள்
உனக்காக நான்
சேமித்து வைத்த கனவுகளைத்தான்

அந்த கனவில்
நீ இருந்தாய்
உன் நினைவுகள் இருந்தது
நான் இருந்தேன்
நம் கனவுகள் இருந்தது
நம் குழந்தைகள் இருந்தார்கள்
நம் எதிர்காலம் இருந்தது..

இன்னும் எது இல்லை என்று
திருப்பிவிட்டாய் என் இதயத்தை
உன்னால் உன் நினைவுகள்
சுவசிக்கபட்ட என் இதயம்
உனக்கே குப்பையாக தோன்றிய பின்
எனக்கு மட்டும் கோபுரமாகுமா..?
அதுதான்
உன்னால் திருப்பபட்டு
என்னிடம் வந்த என் இதயத்தில்
உன் நினைவுகளை மட்டும் எடுத்துகொண்டு
முகுதியை குப்பை தொட்டியில் போடுகின்றேன்

என்னிடம் இருந்தால் வேறு எவனாவது
கவர நினைப்பான் ...
அதுவே குப்பையில் இருந்தால்
எவனுமே தீண்ட மாட்டன் ..

உன் நினைவுகளை சுமந்தபடி நான்
என் மன கனவுகளை சுமந்தபடி
என் இதயம் குப்பையில் ....
 
 

உன் நினைவுகள் ...



உன்னால் பிளவு கொண்ட
என் இதய பையை
உன் நினைவு எனும் ஊசி கொண்டு
என் காதல் எனும் நூல் கோர்த்து
இணைத்துக் கொண்டிருகின்றேன்

உன்னால் எத்தனைவாட்டி
கிளிக்கப்படாலும்
என் இதயம் ஏனோ
உன்னால் கிளிக்கபடவேனும்
துடிக்க நினைக்கின்றது ...

உன் நினைவுகள்
ஊசியாக குத்தினாலும்
என் காதல் அதை
உள்வாங்கி கொள்கிறது
காயத்தின் வடுக்கள்
ஆறிப் போனாலும்
என் காதலின் வடுக்கள்
உன் நினைவுகள் எனும்
ஊசிகளால் ஒவொரு கணமும்
துளைக்கப்பட்டு
வடுக்கள் துகில் உரியப்பட்டு
வலிகள் பிரசவிக்க செய்கிறது

உன்னால் கிளிக்க்பட்ட இதயத்தை
உக்காந்து நெய்வதன் அவசியம் தெரியுமா ..?
உனக்கு என் இதயம்தானே விளயாட்டு பந்து
உருட்டி விளையாட அது உனக்கு எப்பவும் வேண்டும்
விளையாட்டில் கூட
வேதனையும் ஏமாற்றமும் ஏன் தோல்வி கூட
உனக்கு பரிசளிக்க என் இதயம் விரும்பவில்லை ...


புண்ணியம்




கரு விழிகளில் ஏக்கம்
காணும் கனவினில் ஒரு தேக்கம்
புத்தக பைகளை ஏந்தி
புத்தி வளர்க்கும்
புனிதமான இடமாம்
கல்வி சாலை செல்லே வேண்டிய
கதிர்கள் ....
இங்கு பிச்சை பார்த்திரம் ஏந்தி
அன்னம் இடுவோர் அகத்திணை
முகத்தினில் காண ஏங்கி
தவமாய் தவம் இருகின்றன ...

என்ன தவறு செய்தன இக்கதிர்கள்
போசாகின்றியே புதைந்து போக ...
வருடம் ஒன்றில் கேளிக்கை நிகழ்வுக்காக
எத்தனை கோடியை அரசு செலவு செய்கிறது ..
அதை இந்த பிள்ளைகளுக்கு கொடுத்தால்
கஜானாதான் வற்றிவிடுமா ....
இல்லை கணக்குதான் இடித்து விடுமா ...

உண்டி சாலை தனில்
உணவருந்த சென்றேன்
அங்கே ...
கொண்டுவந்த பர்கரை தள்ளி விட்டு
பிசா கேக்கும் குழந்தைக்கு
அதை மறுப்பேதும் சொல்லாமல்
வாங்கிக் கொடுக்கும் பெற்றோரை பார்த்தேன்
ஏனோ எனக்கு இந்த புகைப்படம்
ஞாபகத்திற்கு வந்தது ...

பிறந்த நாள் ஒன்றுக்கு
பல ஆயிரங்களை செலவு செய்யும் பெற்றவர்களே
உங்கள் குழந்தைகள் போல்
பலர் உணவேதும் இன்றி
ஒரு வேளை உணவுக்காய்
வேகாத வெயிலிலும்
தட்டு ஏந்தி நிக்கின்றார்கள் ...
அவர்கள் பசிக்கு ஒரு சில
ஆயிரம் அளித்து
புகையும் வயிற்றினை நிரப்பி
புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள்
சிறுவர் மனது இறைவன் வாழும் ஆலயம் ...
சிறுவர் வாழ்த்து உங்கள் குடும்பம் சிறக்கும் கேட்டு .
 
 






மழை....





சின்னம் சிறு வயதில்
சிறகடிக்கும் சிந்தனைகள்
சில்மிசங்கள் செய்து
செல்லமாய் அன்னையிடம்
திட்டு வாங்கும் செல்ல குறும்புகள்
இன்று நினைத்தாலும்
இனிக்கின்ற எண்ணங்களே ...

அன்று ஒருநாள்
அழகான மழை நாள்
வானம் இருண்டு ..
நண் பகலையே
மாலை பொழுது போல்
இருட்டடித்து இனிமையாக்கி கொண்டது ..

பகலவனுக்கு ஓய்வு ...
அந்த பகல் அவனுக்கு ஓய்வு
எனக்கும் ஓய்வு...

மழை எப்போ வரும்
அடிகடி யன்னல் வழியே விழி பார்வை செல்லும்
அப்படியென்ன பார்க்கிறாய்
அடைமழை பெய்யும் போல
அங்க இங்க போகதே
மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும்
இருமல் வரும் ..... தொடர்ந்தது
அன்னையின் மிரட்டல் பட்டியல் ....

இடியும் இடித்தது மின்னலும் கிழித்து ..
அம்மா முமுரமாக சமையல் ..
நானோ பின்புறமாக நழுவல் ...

வீட்டு முற்றத்தில்
அண்ணார்ந்து பார்த்தபடி
முதல் துளிக்காய்
முழுவதும் ஏங்கினேன் ...
முதல் துளி முழு ஆர்ப்பரிப்புடன்
என் முதல் தோலையும் தாண்டி
ஊசியாக குத்தியது ...
அம்மாவின் மிரட்டல்
அவசரமாய் நினைவில் வந்தது
அதை எல்லாம் கேட்டால்
நான் அன்று சுட்டிப் பெண் இலையே ...

பெரு மழை
பெய்யோ பெய்யென்று பெய்தது
கிணற்று கப்பியில்
தண்ணி இழுத்து குளிக்கும்
கஷ்டம் இல்லது ...
வர்ண பகவான் வாரி இறைதான்
வஞ்சனை இல்லது
மழையின் நீர் துளைத்து ஆடினேன் .
சில்லென்ற காற்று
என் சிறு உடலில் நடுக்கம் ..
பளீர் என்ற மின்னல்
என் பார்வையினில் சுருக்கம்
டும் டம் டும் ...
இடி இடிக்கும் ஓசை
என் செவிகளுக்கு சினம் ...

சோ என்ற மழை....
சொல்லவொண்ண சந்தோஷத்தில்
சுற்றி சுற்றி ஆடினேன் ..
அவசரமாய் ஓடி போய்
கையில் கிடைத்த கொப்பி ஒன்று
ஐந்தாறு கிழித்து வந்து
காகித ஓடம் விட்டேன் ...
டைடானிக் கப்பல் விட்ட சந்தோசம் ..
நான் செல்லாமை வளர்த்த நாய் குட்டி
மழையில் நனைந்து உடலை சிலிர்த்து
ஓடி வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டது ..
அதையும் இழுத்து ...
ஆஹா ஓஹு ம்ஹும் என்று
அன்று பிரபலமாய் இருந்த சினிமா பாடலை பாடினேன்
எனக்குள் நான் அந்த கதாநாயகி ஆகிவிட்ட எண்ணம் ...

என் பாடல் ... இல்லை கத்தல்
என் அன்னையின் செவிகளுக்கு
இடியையும் கிழித்து சென்று
கணீர் என கேட்டதோ...
கையில் தடியுடன் ...
கள்ள குட்டி உள்ள வாடி
இலைஎண்டா தெரியும் சேதி ..
ஆவேசமாய் ஆமா ..

அயோ அயோ ...
மழையில் நனையும்
ஆசையும் விடவில்லை ..
அம்மா தடியின் பயமும் விடவில்லை
.மழையா.. தடியா...மனதுள் போராட்டம் ...
மழை தோற்று தடி வென்றது ....
உள்ளே ஓடினேன் ...

காதை பிடித்து
காய்ச்சல் வரட்டும் தெரியும் சேதி என்றாள்...
அது ஒன்றும் வராது
எனக்குள் நானே சமாதானமானேன் ...

இரவும் வந்தது கூடவே குளிர் சுரமும் வந்தது ..
வழக்கம் போல அம்மாவின் திட்டுகள் ..
அர்ச்சனையாய் விழுந்தது ...
அப்போது ஓர் குரல்
இந்த கொப்பியில யார் பேபர் கிழிச்சது ....

அய்யோ ... மாட்டி கிட்டேனா ....
நானில்லை அண்ணா ..
என் முந்திரி கொட்டை தனமே
என்னை கட்டி கொடுக்க
நங்குன்னு நடு மண்டையில்
நச்சுனு இடி வைத்தான்
ஓவென்று அலறினேன் ...
இனிமேலும் மழையில்ல
நனையுறது இல்ல ...
சப்தமாக சபதம் போட்டேன் ....

அப்போது அம்மா ..
பெரிய மங்கம்மா சபதம்
மறுக்க மழை வந்தா
மாயமாய் போய்டும் ...

அம்மாவின் சொல்கேட்டு
அனைவரும் சிரித்தனர் ...
என்ன பார்குறிரிங்க....
நானும்தான் சிரித்தேன்
இந்த சபதம் ஒன்றும்
எனக்கும் புது இல்லை
என் வீட்டுக்கும் புதுசில்ல ...

மழை என்றால் எனக்கு
மனம் கவர்ந்த நிகழ்வுதான் ..
எனக்கு மட்டுமல்ல
இதை படிக்கும் உங்களுக்கும்
அப்படி தானே ....?
 
 
 

சிறகுகள் உதிருமுன் வா ...

உன் நினைவுகள் எனும்
ஆணிகள் கொண்டு
என் இதய சிறகுகள்
சிலுவையில் அறையப்பட்டு
சிதிலமாய் கிடக்கின்றது ...

உன்னை உனக்காகவே
நேசித்தவள் ...
உன்னிடம்
உள்ளார்ந்த அன்பை மட்டும்
எதிர் பார்த்தவள் ..
உனக்காக பேசி
உனக்காக அழுது
உனக்காக கோபம் கொண்டு
உனக்காக சிரித்து
உன்னை நினைத்தே
வாழ பழகிவிட்டவள் நான்..

அறிந்து தெரிந்தும்
என்னை அணு அணுவாய்
வதைக்க உன்னால் மட்டுமே முடிகிறது..
ஒவொரு தடவையும்
உன்னால் காயப்பட்ட வடுக்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் இன்றியே
அதுவாக ஆறி விடுகிறது
காரணம் உன் மேல் கொண்ட காதலால்






என்ன செய்தால் உனக்கு பிடிக்கும்
எப்படி நடந்தால் உனக்கு பிடிக்கும்
என்ன பேசினால் உனக்கு பிடிக்கும்
இதையெல்லாம் சிந்தித்தே
என் மூளையின் செயல்திறன்
அடிக்கடி ஓய்வுக்கு விண்ணப்பிகின்றது...

ஒவொன்றாக
உனக்காக பார்த்து பார்த்து செய்தாலும்
உன் பார்வையில் அவை
ஏனோ தீண்டத்தகாத செயல்கள் தான் ...
அதுதான் திரும்ப திரும்ப என்னை
சிதிலமாக சிதைகின்றாய்

உன்னை நேசிக்கும் என்னை
என்னை நீ நேசிகாது போனாலும்
என்னை காயப் படுத்தவாவது நீ வேண்டும்
அதனால்தான் உன்னை சுற்றி வருகிறேன் ..

என் இதயத்தை பார்
உன்னால் எத்தனை முறை
கிழிக்க பட்டாலும்
சிலுவையில் அறையப்பட்டாலும்
சிறகடிக்க முடியாது
சிறகுகள் சிறைவைகப்பட்டாலும்
துடிக்கத் தவிக்கிறது ..
அங்கே வாழ்வது நான் அல்ல நீதான்
உன்னால் அடிக்கப்படும்
ஒவோர் ஆணியும்
எனக்குள் இருக்கும் உனக்கு அடிபதுதான் ...
அதனால்தான் என் இதயம்
இன்னும் துடிக்கிறது
உன்னை காப்பதற்காய் ....
என் சிறகுகள் உதிருமுன் வா ...
என் ஜீவன் கருகுமுன் வா ..
என்றோ ஒரு நாள்
என்னிடம் நீ வருவாய்
அன்று உன் இதயத்தை
உன்னிடம் தந்து
உயர பறக்கும் இந்த உயிர் அற்ற இதயமும் ..

நம்பிக்கையில் ........ ...





பளபளக்கும் ஜிகினா பட்டும்
பட்டுப்போல் மென்மையான
மயிலிறகும் ...
பார்த்தாலே பரவசமூட்டும்
அழகிய ரோஜா மலரும்
இந்த ரோஜாவிற்கு
தூக்கத்திற்கு பதிலாக
துவளும் வேதனைகளையே
பரிசளிகின்றன .....

உன்னுடன் பழகிய நாட்கள்
நீ பேசிய பேச்சுக்களும்
பார்த்த பார்வைகளும்
பஞ்சன்ன படுக்கை விரிப்பு

உன்னால் அப்பப்போ
அரிதாக கேட்கப்படும்
நலன் விசாரிப்புகள்
மயிலிறகின் தீண்டலாக ...

எனக்காக நீ சிரிக்கும்
சிரிப்புகள் யாவும்
ரோஜா மலர்களாக

இவை அனைத்தையும்
என் படுக்கையாக கொண்டு
பல இரவுகள் தூங்கினேன் அன்று
இன்று இவை யாவும்
முட்க்களாகி முதுகை
கிழிக்கின்ற போதும்
முகம் சுளிக்காது உறங்குவேன்.
உன் நினைவுகள் முட்களாக இருந்தாலும்
முத்தங்களாக இருந்தாலும்
எனக்கு சுகமே.......

இருந்தும் இன்று ...
உன் அசைவுகளை உள் வாங்கி
உன் நினைவுகளை படமாக்கி
அதை அனைத்து தூங்குவதில் இன்பம்
நிஜத்தில் நீ தூரத்தில் இருந்தாலும்
நினைவில் என் அருகிலே..

ஓவியமாயும் உயிராயும்
கலந்திருக்கும் நீ
என் கனவுகளிலாவது
என் காதலின் ஆழத்தை
புரிந்து கொள்வாய் என்று
தினமும் நிழல் திரைகளை
தீண்டியவாறே துயில் கொள்கின்றேன் ...

என்ன பயன்
கனவில் கூட
என்னை காதலிக்க மறுக்கின்றாய் நீ
இல்லைஎன்றால் என் கனவுகளில்
உன் பிம்பத்திற்கு தடை விதிதிருப்பயா ..?
உன்னை காதலிக்க தவிர்த்ததில்லை
உன்னை காண்பதையும் தவிர்த்ததில்லை
ஆனால் இன்று விழித்திருப்பதை தவிர்க்கிறேன்
என் கனவுகளில் உன்னை காண்பதற்காய் ....

ஸ் ஸ் .. சத்தம் போடதே....
தூங்க வேண்டும் நான் ..
இன்றாவது என் காதலன்
என் கனவில் வருவான் ....
நம்பிக்கையில் ........ ...






நீ வருவாய் என்றால் ...




முழுவதும் எரிகின்றேன்...
உன் முதல் பார்வையில்
பற்றிக்கொண்டது முதல் தீ

அன்பே என்றாய்
ஆனந்தத்தில் பற்றிக் கொண்டது
ஓர் இதழ் ...
அழகே என்றாய்
வெக்கத்தில் பற்றிக்கொண்டது
ஓர் இதழ் ....
நலமா என்றாய்
நச்சென்று பற்றிக்கொண்டது
இதயத்தின் ஓர் இதழ்

எனக்காக நீ என்றும் ..
இந்த எண்ணத்தில்
பற்றிக் கொண்டது ஓரிதழ்

என்னுடன் நீ...
நாணத்தில் பற்றி கொண்டது ஓரிதழ்
எல்லாமே நீ...
அன்போடு பற்றிக் கொண்டது ஓரிதழ்
அருகிலே நீ
விரகத்தில் பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
வேறு ஒருத்தியோடு நீ ...
கோபத்தில் பற்றிக்கொண்டது ஓரிதழ் ..

காத்திருப்பில் கரையும் மணித்துளிகள்
கவலையில் பற்றிக்கொண்டது ஓரிதழ்..
மிஸ் யு என்ற sms
இந்த உலகை வென்ற எண்ணத்தில்
பற்றிக்க் கொண்டது ஓரிதழ் ...

சூப்பர் ...
உன் பாராட்டில்
பசுமையாகி பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
உன்னை காணாத பொழுதுகளில்
வெறுமையாக பற்றிக் கொண்டது ஓரிதழ் ...
கண்ணா ....
உன் பெயர் சொல்லும் போதே
முழுமையாக பற்றிக் கொள்ளும்
ரோஜா மலர் நான்....
                                                                                         
உன் அசைவுகளும்
ஆக்கங்களும் ....
பேசும் பார்வையும்
என்னுள் ஆயிரம் இதழ்களை பற்ற வைத்தாலும்
இனிமையாய் எரிகிறேன் .....

.ஆனால் ..
உன் கோபத்தில் மட்டும்
பற்றிக் கொள்ளும் தீ
என் இதழ்களை கருக்குதே .....

என் மேல் கோபம் கொள்ளாதே
முழுவதுமாய் எரிந்து கருகிவிடுவேன்...
இதற்கும் சம்மதம்தான் ...
அணைக்க நீ வருவாய் என்றால் ...


                                                              

Modify message

மறுக்கபட்ட இதயம்




என்ன பார்க்கிறாய்
அதே இதயம்தான்
அதே இடம் தான் ....

அன்று
என் ஆசைகளை சொல்லி
என் அன்பானவன் உனக்கு
என் இதயத்தை பரிசளித்தேன் ..
இதுவே இயல்பென்பது போல்
என் இதயத்தை மறுத்து விட்டாய் ....

உன்னால் மறுக்கபட்ட இதயம்
உன்னால் வெறுக்க பட்ட இதயம்
இன்று வரை உன்
நினைவுகளை சுமந்தபடி
அதே இடத்தில்....

ஏன் இந்த இரும்பு முள்வேலி...
இனம் புரியாத இயல்பு விளங்காத
ஐயம் உன்னுள்
அறிவேன் நான் ...

உன்னால் நிராகரிக்கபட்டது
என் இதயம் மட்டுமல்ல
என் கனவுகள் என் எதிர் காலம்
மொத்தத்தில் என் வாழ்க்கை ..நீதான்

எனக்கு நானே போட்டுக்கொண்ட சிறை
உன்னை காணும்வரை சிறகடித்து பறந்த ஏன் இதயம்
இன்று சிறைக்குள்
இருந்தும் நான் கலங்கவில்லை ...

பூட்டிய என் இதயத்தை திறக்க
பல நெம்புகோல் .... கள்ளச் சாவிகள்
இருந்தும் திறக்கவில்லை ...

உன் நினைவுகளால் என்னை சுற்றி
நான் அமைத்துகொண்ட இந்த முள் வேலியை
தகர்க்கும் சக்தி எனிடமும் இல்லை
ஏன் யாரிடமும் இல்லை ..
உன் அன்பெனும் காந்தம் கொண்டு
அருகினில் வந்தாலே
அப்படியே திறந்து கொள்ளும் சிறை வாசல்


அன்பே உன்னை நான் நேசிப்பது உனக்கு தெரியும்
என்னை நீ நேசிப்பதும் எனக்கு தெரியும்
சமுதாயம் ... சந்ததி... சம்ப்ரதாயம்
என சாக்குகள் சொல்லி
என்னை நிரந்தரமாய் இங்கே
சிறை வைத்து விடாதே ...
என் இதயத்திற்கும் ஆசைதான்
உயர உயர சிறகடிக்க...
உன் கைகளில்தான் இருக்கிறது
என் இதயத்தின் சிறை வாசமும்
அதன் சிறந்த வாழ்க்கையும்.. .

இது ஓர் இதயத்தின் தவம் .
இதை பார்த்து
இணைந்திட வேண்டும் உன் இதயம் ..



அம்மா....




வலித்தும் வலிக்கவில்லை
உன் தீண்டல்
வயிற்றில் வந்த போதே
வரம் என்று
உன்னால் கிடைத்த
வலிகளை வரமாக சுமந்தவள் ..

ஐயிரண்டு திங்கள் சுமந்து
அரை நாள் மேல் வலி கண்டு
அவசர சிகிச்சையாகி
அன்றே இறந்து பிறந்து
அகிலத்துக்கு உன்னை
ஈன்ற போதே அனைத்து
வலிகளும் மறந்ததடி..

அம்மா என்ற உன் அழைப்பில்
அன்று பட்ட வலிகளே மறக்கும் போது
இன்று நீ உன் செல்ல கையால்
சிறு கிள்ளல் செய்வது வலித்திடுமா என்ன ?

வலிகளை வரமாக சுமக்க
வல்ல இவ்வுலகில்
தாயன்றி யாரால் முடியும் ....
தாங்குவேன் கண்ணே
உன் தளிர் கரம் மலர் கரமாகி
மனை புகுந்து ...
இந்த மரமும் மண்ணில் சாயும் வரை
உன் வலிகளை கூட
என் வலிகளாக்கி
வாழ்ந்துடுவேன் உனக்காய் என்றும் ..
அம்மா என்னும் உன் ஒற்றை சொல்லுக்காய் ...



உனக்கும் வலிக்குமென்று
ஒருமுறையாவது சொல்லி இருந்தால்
உனக்கு வலிகளை தர அன்றே மறந்திருப்பேன்..
வலிகளை வரமாக சுமக்கும் உனக்கு
என் கொஞ்சலை கோர்வையாக தருகிறேன்
அம்மா இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும்
நான் உன் மகளாக வேண்டுமம்மா ...
நான் சுயநலவாதிதான் ..
ஏனென்றால் நான் இன்னும் தாயகவில்லை
சேய்தான்....
 
 
 
Modify message

இது நாள்வரை

 

இது நாள்வரை
என் நெஞ்சம் எனும்
இருள் அறையில்
உனக்காக துடித்த
என் இதயத்தை
இன்று உன் கைகளில்
தந்துவிட்டேன் ....

என்ன ஆச்சர்யம்
உன் கைகளில்
என் இதயம் ...
இழந்தும் ஒளிர்கின்றதே
இதுதான்
இழப்பில் ஓர் உயிர்ப்பா ...?
இல்லை என்
காதலின் ஒளிர்வா ...

பளபளப்பாய் இருப்பதனால்
மிட்டாய் என நினைத்து
மென்று துப்பி விடாதே ..
என்றும் உனக்கு
இனிமையாய் இருப்பேன்
என்பதற்கு இதுதான் அடையாளம் ..
திருப்பி தந்துவிடதே ...
என் இதயமே
எனக்கு சுமையாகிவிடும் ..
எனக்கு தெரியாமல்
எங்காவது எறிந்துவிடு
உன்னிடம் என் இதயம்
உறங்காமல் ஒளிரும்
என்ற நின்மதி கிட்டும் ...

என் இதயத்தின் ஒளிர்வு
உன் கைகளில் சேர்ந்துதான்
என் வாழ்கையின் ஒளிர்வும்
உன் மெய்யது சேர்ந்தால்தான் ...
புரிந்து கொள்வாயா ...?
இல்லை புரிந்தும் கொல்வாயா ...?