Wednesday, November 8, 2017

உனைத் தந்தேன்..

கலவி கொள்ளாது
கருவினில் சுமக்காது
மகவாக உருமாறிய
காதல் நீ..

உனக்காக
உனை தந்தேன்
உருமாறி
நான் நின்றேன்
எனக்காக
எதை தந்தாய்
ஏமாற்றம்
அதையீந்தாய்...

மதிப்பிழந்த
மாந்தளானேன்
மனமுடைந்து
பேதையானேன்
கொதித்தெழுந்து
குமைந்தொரு
வார்த்தை பெயர்ந்தால்
குலைந்துவிடும்
உன் குலம் நாசம்..

வேண்டாம்
வாழ்ந்துவிட்டுப் போ
வாழ்த்தி விடை பெறுகிரேன்.

Friday, October 6, 2017

( என் )மரணம்.

விரும்பியோ
விருப்பமின்றியோ
ஒர் வேண்டுதலாலோ
இரந்தோ
எனை தீண்டி இருக்கும்...

நம்பிக்கைக்கு அப்பால்
அவநம்பிக்கையின்
சில கரங்கள்
என் இருப்பினை
நிச்சயப் படுத்த எத்தணிக்கும்..

நெஞ்சுக் கூட்டின்
ஈரம் உலர
சுமந்த வயிறு
சுடுகாட்டு தீ சுமக்கும்..

ஆண்பிள்ளை அழக்கூடாது...
யார் சொல்லி கேளாமல்
உடன் பிறந்தது
ஊன் உருக
உளறி அலரும்..

தலைமுறை மூத்த
தலைநரையெல்லாம்
தம் இருப்பினை சொல்லி
அங்கலாய்கும்..

கூடப் படித்தவரும்
குளம் குட்டை துழைந்வரும்
மாசில்லா தோழி என
மகுடம் சூட்டி கண்ணீருகுப்பர்..

எங்கோ ஓர் மூலையில்
இழப்பறியா இருமலர்கள்
இயல்பாக கடந்து சென்று
எங்கே நான் என்று
எல்லோரிடமும் வினவக் கூடும்..

கண்ணீர் அஞ்சலியில்
கனத்து கடந்து
நாட்கள் மாதங்களாகி
ஆண்டுக்கொருமுறையென
அளவாக நினைவு கூர்ந்து
அதுவும் அருகி மருவி கடந்திருக்கும்.

இருந்தும்
மாறத புன்னகையோடு
மலர்களின் நடுவில்
என் இருப்பு
இன்னும் பல ஆண்டுகள்
கடந்தும்
சுவர்களில் மட்டும்
நிச்சயப் பட்டிருக்கும்.

Thursday, October 5, 2017

-இப்படிக்கு தனிமை .

இரவுகள்
இன்னும்
உறக்கம் கொள்வதாயில்லை..

அந்தகாரத்தின்
...
தனிமைப் பொழுதுகளை
சுவைத்துச் சுவைத்து
இருதயச் சுவர்களின்
நா வறண்டு கிடக்கிறது ..

மனக்கிடங்கில்
மரணிக்கும் தருவாயில்
உன் நினைவுக் கருக்கள் ..
உயிர் கொடுக்க முனையும்
ஒவ்வொரு தருணங்களிலும்
சில உதாசீனங்கள்
சில கோபங்கள்
சிறு முகத்திருப்பல்கள்
கருக்கலைப்பு செய்து விடுகின்றன ..

உனக்காக
புன்னகைக்க முயலும்
உதடுகளிடம்
விலை கேட்கிறாய்
வார்த்தைகள்
வறண்டு கிடக்கிறது ..

என் கோபங்கள்
என் நேசங்கள்
என் தாபங்கள்
பரிச்சயமானவை
இருந்தும்
பழக்கமற்றவையாக
உன் பரீட்சார்த்தங்களுக்கு
உட்படுத்தப் படுகிறது ..

தனிமைக்கும்
எனக்குமான பந்தம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
அவை நிரந்தரமானவை
ஜீவித பந்தம் .
மீண்டும்
ஒரு பரீட்சார்த்த முடிவில்
எழுதிச் செல்கிறது
காதல் பொருத்தமில்லாதது

-இப்படிக்கு
தனிமை .

தனிமை

இருள் புசிக்கும்
தனிமைகளின்
இதழ்களுக்குள்
நம் தனிமை
இங்கும் அங்குமாய் ...
...

அகன்ற தோள்களுக்குள்
அடங்கிவிடும்
அணைப்புக்காக நானும் ..
அழுந்துகின்ற உடலின் மீது
ஆக்கிரமிப்புக்காக நீயும்
அனுதினம் ...

தனிமைகள்
ஒவ்வாமைகளாகி
ஒரு யுகம் ஆனதாய் நினைவு ..
ஒரு முத்த ஒற்றுதலில்
முடக்கிவிடும்
மோகத்தின் விசைகள்
அடங்குவதாயில்லை ..

கை விரல்களுக்குள்
கலந்துவிடும்
உன் நினைவு
ஆயுள் ரேகைக்குள்
ஒளிந்து கொள்கிறது ..

நம் ஸ்பரிசத்துக்காய்
ரோமங்களும்
ஏக்கம் கொள்வதாய்
அடிக்கடி எழுந்து சொல்கிறது ..
தூரங்கள் தொலைத்திடும்
தொலை பேசிகள்
நம்மை தொல்லை பேசிகள் என
வர்ணிப்பதாக கனவுகள் ..

ஓர் தொடுகையில்
ஓர் அணைப்பில்
ஓர் இதழ் ஒற்றுதலில்
தீர்ந்துவிடாத ஏக்கங்கள்
கொட்டிக் கிடக்கிறது ..
வழிந்து வசமிழக்கும் பொழுதெல்லாம்
வரம்பிளக்க துடிக்கும்
ஏக்கங்களுக்கு
உன் என் முத்தச் சத்தங்களே
முகவுரை ...

உயிர் தடவு

உன்
நினைவுகளுக்கும்
எனக்குமான
பரீட்சார்த்தங்கள்
எப்பொழுதும்போல்...
...

எனை
கடந்து செல்லும்
தென்றலிடம்
தூதனுப்புகிறாய்
..

அது
எனை
சுடுவதை விடவா
உன் நினைவுகள்
சுட்டுவிடும்
சொல்லு ...

புன்னகைத்து சென்றுவிடுகிறாய்
புதைந்துவிடும்
மனதுக்குள்
முளைத்து விடுகிறது
உன் மீதான
விரகங்களுக்கான
முதல் வேர் ...

தூக்கம் தொலைத்த
உன் சிணுங்கிய முகத்தில்
மினு மினுக்கிறது
உன் மீதான
மோக அணுக்கள் ..

வா
வதை செய்
விரகத்தின் விளிம்பில்
வழியத் தழும்பும்
தேனுண்டு திகட்டி எழு ..

ஊண் உண்டு
உயிர் தடவு
கூச்செறியும் முடி முனைகள்
தம் கூச்சம் களைந்து
கலந்து பிறக்கட்டும்
ஓர் கலவி ..

எதிலும் நீயாக ..

வா
வாள் முனையில்
என் உயிர் தடவு

போ
...
என் உயிர் உருவி
உடன் கொண்டு போ ..

தா
உன் இதழ் தடவும்
இனியமுதம்
இதழ்க் கடையெங்கும்
பிழிந்து ஒழுகவோர்
முத்தம் ..

எடு
என் கனிகொண்ட
கள்ளதனை
கடுகளவும் சிந்திடாது

கொடு
இறுக்கி கொள்ளும்
இரு இதயம்
இணை பிரிந்திடாத
வரம் ஒன்று ..

கேள் ..
என்னிடத்தில்
என்னை ...

மீள்
உன்னிடத்தில்
என்னை ...

வாழ்
என்னோடு
இணை பிரியாது நீ

நில்
என்னோடு கூட
எதிலும் ..

மீண்டும்
வா
தந்தெடுத்து
கொடுத்து கேட்டு மீள்
வாழ்ந்து நில்
என்னோடு
எதிலும் இவையாவும்
நீயாக ..

விண்ணப்பம்

இரவு துளைந்த
பார்வை வட்டத்துள்
ஒளி கடந்த இருள்
அதில் மினு மினுத்த
சாலை விளக்குகள் ...
விர்ரென கடந்து சென்ற
வேக வீதி வாகனங்கள்
சிகப்பு மஞ்சள் பச்சை என
அணைந்தொளிரும்
சாலை விதி விளக்குகள்
எதுவும் படர்வதாய் இல்லை ...

வீசும் பொழுதில் தெரியாத
வார்த்தையின் வீரியம்
நீ விலகும் கணங்களில்
தெரிந்துவிடுகிறது ...

சில ஏமாற்றங்களின்
சிதிலமடைந்த
துகள்கள் கொண்டு
இயங்கும் இருதய அறைகள்
இன்னும் உன் நினைவுகளை
இழுத்து நிறைத்துக் கொள்கிறது
கரங்களில் வராத உன்னை
கனவுகளில் படர்ந்துகொள்ள ...

மன்னிப்பு எனும்
வார்த்தையை கடந்து
மண்டியிடுகிறேன்
இறைவன்
படைத்த படைப்புகளில்
அதிர்ஷ்டம் தொலைத்தவள்
அனுசரிக்க தெரியாதவள்
கண்ணீரோடு விண்ணப்பம்
எனை கடந்துவிடு ..

கண்ணீர் கொண்டு
கனவுகளை துடைத்து விடுகிறேன் .

காற்றில் ஒரு முத்தம் ..

மின்சாரமற்ற
மிரட்டும் இருள் கிழிக்கும்
மெல்லிய
மண்ணெய் விளக்கின்
ஒளிக் கதிராக
...
உன்னருகே நான் ..

ஜன்னலோர படுக்கையில்
புரளும்
உன் மேனி தொட்டு
சில்லீர்பூட்டும்
மழைத் தென்றலாக நான் ..

அமானுஷ்ய பின்னிரவின்
அழுத்தம் கலைந்த
உன் இதழ்களை
பார்த்துவிடும்
உத்வேகம்...

ரோமங்களற்ற
மார்பில் படர்ந்திருகிறேன்
நினைவுகளால் ..
நிர்மலமாய்
நீ மட்டும்
எப்படி உறங்குகிறாய் .. ?

இந்த மழைக்கால
பின்னிரவின் தேவைகளுக்குள்
அடங்காது துயிலும்
உன் தூக்கம் கலைத்து விட
இதோ
காற்றில் ஒரு முத்தம் ..

இரவோடு ஓர் விண்ணப்பம்

ஒதுக்க முடியா இரவினை
ஒருக்களித்து
சென்று விட முனைகிறேன் ...

இந்த இரவு
...
ஏன்
இதனை நீட்சி உள்ளதாய்...

யார் யாரோ இருந்தும்
யாருமற்றவாளாய்
ஏதோதோ இருந்தும்
ஏதிலியாய்
வாழ்விருந்தும்
வசந்தம் தொலைத்தவளாய் ...

வண்ணங்கள் குழைத்து
அப்பிய விம்பங்கள்
ஏதும் செப்பிட முடியாமால்
தத்து பித்தென
எண்ணச் சிதைவுகளாய் ..

இரவோடு ஓர் விண்ணப்பம்
நீ விடியாது தொலைந்து விடேன்

பசி தீரட்டும்

மழைக்கால நினைவுகளில்
சிலிர்க்கும்
நனைந்த பூவென
ஒரு சூடான தென்றலுக்கான
தவமிருப்பு ....
...

உலர்ந்த
உன் மீசை முடியின்
நகர்வுகளால்
முறுக்கேறும்
முனைகளுக்குள்
உன் முத்த ஒற்றுதலுக்கான
முனைவுப் போராட்டம் ...

புன்னகை புதைந்த
உன் மோகப் பார்வைக்குள்
முடிகள்
தீப் பற்றிக் கொல்கிறது ..

உதடு தொடா
உன் உரசல்களில்
உன்மத்தம் கொண்ட மனது
உளறிச் சாய்கிறது
மார்போடு ...

கண் திறக்கும் முன்
என் கன்னிமையை புசித்துவிடு
என் பசி தீரட்டும்
காமம்
இளைப்பாறட்டும் ...

கோபம்

உன்
முத்தங்களுக்கு மட்டுமே
தெரிகிறது
என்
கோபப் போர்வை
...
களைந்தெறிய ..

கோபம் களைந்த
கணப்பொழுதில்
மோகம்
அழைந்துவிடுகிறது -என்னை

உன் தூக்கத்துக்கு
ஏன் எதுவும் புரிவதில்லை
இவள் ஏக்கங்கள்
தூக்கம் கலைந்த
உன் உதடுகளின் ஸ்பரிசம்
இன்றுவரை இருந்ததில்லை ..

சில நடுநிஷி சுமந்த
மணித்துளிகளை
கடந்து காத்திருக்கிறேன்
உலர்ந்து தடித்த
உன் உதடுகளின்
உஷ்ண உரசலுக்காய் ...

இருள்

இருள் குவிந்த
மாலைப்பொழுதில்
குமிழ் கசிந்த
மெல் ஒளியில்
ஓர்
...
உருகும் மெழுகென நான்
உருக்கும் நெருப்பென நீ ..

சில கற்ப்பனைகள்
களைந்து
உன் கைகள் நீவி
ஸ்பரிசம் நுகர்ந்து விட
துடிக்கும் விரல் நகர்வுகள்

ஆத்மார்த்தமான
பார்வை ஆலாபனைகள்
கடந்து
நீண்டு கிடக்கிறது
கைகளின் ஸ்பரிசம்

காலம் கடந்து
காவல் கிடந்தனவோ
பிரிய மறந்து
ப்ரியமாக ...

குறை கிடக்கும்
மத்துக் கிண்ணங்கள்
நிறைந்து வழிகிறது
நீ நான் நிலவு
நீளும் இருள் என .....

இன்றாவது தூங்கிவிடுகிறேன்

இரவு
இன்னும் புலராது இருக்கிறது ..
உனக்கும்
எனக்குமான
இடைவெளிகளை
...
குறைத்துக் கொள்ள ..

அருகிருக்கும் உன்னை
அடிக்கடி
திரும்பி பார்த்துக் கொள்கிறேன்
நீ இங்கிருக்கிறாய்
நினைவுகள் எங்கிருக்கிருக்கும் ..?

உன் நினைவு வட்டத்துக்குள்
புகுந்துவிட ஆசையாய்..
இருந்தும்
தடைகள் நிறைந்தே
வழிந்து கிடக்கிறது ..

உன் அகன்ற
தோள் வளைவில்
அடங்கி விடவும்
அசையும் ஆண்மைக்குள்
இசையும்
விசையாக மாறிட ஏங்குதே ..

ஒரு சில திமிறல் என்னிடமும்
ஒரு சில ஆளுமை உன்னிடமும்
ஒரு சில நிமிடங்கள் நம்மிடமும்
நகர்ந்து கழிந்திடுமா
இரவு ... ?

இன்னும்
அருகிருக்கிறாய்..
ஆனால் இல்லை ...
வா
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதை மட்டும்
முத்தாய்ப்பாய் .
இன்றாவது தூங்கிவிடுகிறேன் .

திருப்பி எடு



உன்னிடம்
ஒரு சில விண்ணப்பம் ..

என் இரவுகளை
நிறைந்திருக்கும்
...
உன் நினைவுகளை
திருப்பி எடு ..

என் கனவுகளில்
களைந்திருக்கும்
உன்னை
திருப்பி எடு ..

என் உணர்வுகளில்
உறைந்திருக்கும்
உன் புன்னகையை
திருப்பி எடு ..

என் புலன்களில்
புணர்ந்திருக்கும்
உன் ஸ்பரிசங்களை
திருப்பி எடு ..

என்னுள் வாழும்
உன்னை
திருப்பி எடு

நீ களைந்து போட்ட
என்னை
நான் திரும்ப பெற

உன்னை திருப்பி எடு

காமம் .

இந்த
மழை நாட்களின்
இரவுகளின் சில்லீரப்பில்
எப்பொழுதும்
என்னை ...
புணர்ந்து விடுகிறாய்
என் அனுமதி இன்றி ...

என் கோபங்களின்
அறுதியில் தொங்கும்
உன் மீதான தாபங்களை
எப்பொழுதும்
அறிந்தவனாக இருக்கிறாய்
அதனால்தான்
அதை
கொழுத்தியே வைக்கிறாய் ...

முரண்டும் மனதினை
உரசும்
உன் முகமூடிகளை கொண்டு
தீ மூட்டி
முத்தத்தால்
முகவுரை எழுத தூண்டுகிறாய் ..

கழுத்தோரம் படரும்
கைகளின் ஸ்பரிசத்தில்
காணாமல் சென்று விடுகிறது
கடுகளவில்
பற்கள் நெரித்த கோபம் .

என் பெயரை
உன் உதடு
ஸ்பரிசித்து மீள்கையில்
நிறைந்து கனத்திருந்தது
காமம் .

பல முத்தங்கள்
சில சத்தங்கள்
குறு யுத்தங்கள் என
இந்த இரவு
உன்னோடு இழைந்திருக்கிறது .
விடிந்துவிட கூடாதென்ற
ஏக்கம்
என்னோடு நிறைந்திருக்கிறது .

இந்த இரவு ...

என்புருக்கும்
மார்கழி குளிரில்
சூடான போர்வையாக
என்னை போர்த்திருக்கிறாய் ..
...
உன் சுவாசங்கள்
மேனி படர்ந்து
மெல்ல தூண்டுகிறது
உன் மீதான மோகங்களை..

உடல் சரிந்து
ஆடையற்ற
உன் தோள்வளைவில்
அழுந்திய உதடுகளில்
கரிக்கும்
உப்புச்சுவையில்
வயகரா தோற்றுக்கொண்டிருந்தது ..

கலைந்து கிடக்கும்
உன் முடி அழைந்து
உச்சியில்
பகிர்ந்த முத்தத்தில்
என் தேவை
உன்னை யாசித்திருந்தது ...

சட் டென
இறுக்கிய உன் அணைப்பில்
தெரிந்திருந்தது
எனக்குள்
நீ இறங்க ஆரம்பிக்கிறாய் ..

உறக்கம் தொலைத்திருக்கிறது
இந்த இரவு
என் தேவை
இவை இரண்டும் ...

தேவை..


யாருமற்று இருக்கிறது
இரவு...
இறக்கப்படாத
சிலுவைகளின் பாரம்
இன்னும்...
கனதி கூடுகின்றது...

விளங்கிகொள்ளவும்
விலக்கிக் கொல்லவும்
யாருமற்றவளாய்..

தேவை என்னவோ
தலை சாய ஓர் தோள்..
ஏனோ
தகுதியற்றவளாகவே இன்னும்.

உருகி வழியும் ஒற்றை நிலவு..

நடு நிஷியின்
கரங்களுள்
உருகி வழியும்
ஒற்றை நிலவு ....
...
தொலைவு தொலைத்த
ஓளிக் கற்றைகள்
நினைவு புணர்ந்து
வழிகிறது விழிகளில் ...

சிறு தென்றல்
மெல் இசை
சுடா நிலவு
யாரோ இருவரின்
உரையாடல்
உடல் தழுவும்
முதல் துளி நீர்....

இந்த இரவின் நகர்வினை
இன்னும் நிரப்புகிராய்

வலிந்தணை..



இதழ் தடவி
இயங்கி கிடக்கிரது இரவு
புழல் புணர்ந்து
பரந்து கிடக்கும்
மார் வெளியில்
...
மரணித்து கிடக்கிரது
மையல்.

காலிடுக்கில்
கசங்கி கிடக்கிரது காதல்
எப்பொழுதும் போல்
மௌனமாகவே
பேசிக் கொள்கிரது இதழ்கள்..

இரவுகள் நீண்டு கிடக்கிரது
இப்பொழுது தேவையெல்லாம்
என்னை மறக்க வைக்கும்
ஓர் கலாப காதலன்.

வா
வலிந்தணைத்து
வல்லுறவாவது செய்
வலிகளில் ம(ரி)றக்கிரேன் ...