Friday, September 14, 2012

சும்மா

 
 
 
விழுந்து எழும்பியும்
விழுந்ததுக்கு விஞ்ஞான விளக்கம்
விவரமானவன்னு ஊர் சொல்லிச்சு ...


சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
சந்தில் இருந்த சாப்பட்டுகடையில்
சால்னாக்கு துட்டில்லை
சாயாவும் ஒரு ரொட்டியும் சாபிட்டான்
டயட் உடலை கட்சிதமாய்
பார்க்கின்றான் என்று ஊர் சொல்லிச்சு ...


எங்கு சென்றாலும்
குனிந்த தலை நிமிராத
குலமகனாய் சென்று வந்தான்
பெண்பிரசு பேச்சுமில்லை
பிறர் பெண்டிர் நாட்டமும் இல்லை
காசு இருந்தால்தானே களியாட்டம்
கன்னிகள் கூட்டம்
புரிந்தவன் குனிந்தான் - கண்ணியவான்
ஊர் சொல்லிச்சு ...


சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...


அவனை கெடுத்து அவனல்ல ஊர்
அது உன்னையும் கெடுக்கும்
உலகையும் கெடுக்கும் ...
புகழ்ச்சிக்கு இடம் கொடுத்து
உனக்குள் இருக்கும்
முயற்சிகள் தூங்கிவிட்டால் ...

காதலித்து பார் ....

 
காதலித்து பார் ....


கண நேரம் கூட
பிரியாது தவிப்பாய்
கண்ணாடியை -காதலித்து பார்


சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்


விடிகாலை வரை
விரல் நுனியில் நடமிடும்
கணனியின் தட்டு தளம் கூட
தட்டு தடுமாறும் சூடாகி - காதலித்து பார்


தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்


சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார்


நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்


மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார்


கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்


காதல் தேசத்தில்
கனவுகள் மட்டுமே நிஜம்
அதில் நீ ராணியாகு -நிஜத்தில்
ஜாசகி ஆகும் வரை

வாழ்த்துக்கள் ..

உயிர்வாங்கி

 
தென்றல் அவிழ்ந்து
தன்னிலைக்கு
திரை போட்டவண்ணம்
எண்ண கதவுகளை தட்டி திறக்கின்றது
வண்ணப் புள்ளிகள் வாய்த்த கோலங்களும்
வருத்த புள்ளிகள் தோய்ந்த சோகங்களும்
முண்டியடித்து முன்னே வர
சடுதியில் முன்னிலை
வருத்தம் தோய்ந்த சோகங்களுக்கே ...


கைப்பிடி அளவு இதயம்
அதில் கடுகளவும் இடமில்லாது
பெருமளவு இடத்தை பிடித்தாய்
பட படவென கற்பனையில்
காதல் தாஜ் மகாலை
சாஜகனுக்கு நிகராய்
என் மன பிரதேசத்தில் கட்டி முடிதேனடா ...


கொலுவாக உன்னை வைத்தேன்
வலுவாக அதில் என்னை தைத்தேன்
பதிலாக நீ உன்னை தந்தாய்
பலகாலம் என் உயிரை மேய்ந்தாய்
மேய்ந்தாலும் வளர்ச்சி
மிருதுவாய் இருந்தது
சாய்ந்தாடும் உணர்ச்சி
சடுதியாய் வந்தது
பாய்ந்தோடி உன்
பருவத்து ஆசைக்கு
விருந்தாடி மகிழ்ந்தேன்
வினையாகி போகுமென்று
எள்ளளவும் எண்ணாது
மருந்தாகி மகிழ்ந்தேன் ...


பாசத்தில் நீ சளைத்தவனில்லை
நேசத்தில் நீ குறைந்தவனில்லை
தாகத்தில் நீ தளர்ந்தவனில்லை
என் மீது மோகத்தில் நீ சளைத்தவனில்லை
இருந்தும் உன் வாழ்க்கைக்கு
நான் உகந்தவள் ஆகாது போனேனே ..


தென்றலும் தீண்டும் நிலை தெரியாது
திக்கி திணறுகின்றது
முந்தானை மடிப்புகளில்...
மூச்சு காற்றின் அனல் வீச்சில்
முனு முணுக்கும் கொசுக்கள் கூட
முனகல் மறந்து முறைத்து செல்கிறது ...
இதய சதுக்கத்தில்
உன் நினைவுகள் பிறழ்ந்து தவழ்கின்றது ..
தழுவிடும் உன் கரங்களுக்காய்
தவியாய் தவித்திடும் என் வனப்பு
மறியல் போராட்டம் செய்கிறது
மனதை மறித்து ...

ஏன் ...
பிறளாத உந்தன் காதல்
மருளாத எந்தன் நேசம்
மணல் வீடாகி கரைந்தது ஏன்?

ஒஹ் தாஜ் மகாலில்
உன்னை தரையிறக்கம் செய்ததாலா ...
பல உயிர்களை பலிவாங்கி
உலக சரித்திரத்தில் இடம் பிடித்த
ஒரு கல்லறையின்..
காதல் கல்லறையின் சரிதிரமல்லவா ..
அதனால்தான் நம் காதல்
என் உயிர்வாங்கி
அங்கு வாழட்டும் என்று விட்டு விட்டாயா ?

வாழ்வேன்
கல்லறையிலும் கருவறைகளில்
உன் நினைவலைகளை சுமந்தவண்ணம் ...