Monday, August 3, 2015

புதைத்து..



இருள் கிழித்த
நிலவொன்று
காணாமல் சென்றிந்தது
விழி விரித்து
நோக்கிய யாவிலும்
இருள் படர்ந்து
எதுவும் புலப்படவில்லை ...

கண்களை கூசி சுருக்கி
விழித்து உருட்டி மடித்து
இமைத்து ...
எந்த வித்தையும்
எடுபடுவதாய் இல்லை ...

சரி
கைக்கெட்டுமா
இரு கை வீசி
துளாவித தேடுகிறேன்
தொலைத்த இதயத்தை ..

அதை
மீண்டும்
மீண்டு வராமல்
புதைத்துவிட ...

Saturday, August 1, 2015

கானல் ..



களைத்த
பொழுதுகளை
இரக்கமின்றி
சபித்துக்கொண்டே
பிடுங்கி கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை ..
வேரோடு ஊன்றி இருந்தால்
வந்துவிடும் ..
உயிரோடு ஒன்றி
பிரிய மறுக்கிறது ..

சில்லென்ற குளிரிளில்
திடீரென கொட்டும்
இந்த மழைத் துளிகளில்
கரைந்துவிட கூடுமோ ..
என்புவரை துளைத்த போதும்
எள்ளளவும் அது கரையவில்லை ..

வார்த்தைகளில்
பிரியத்தை தேடி
களைத்துக் கிடக்கிறது மனது ..
தேர்வு செய்து பேசுவதற்கு
இது பரீட்சை அல்ல
வாழ்க்கை
வாழ்ந்து பேசுகிறேன்
நீயோ
( எரிந்து  ) வீழ்ந்து பேசுகிறாய் ..

நானில்லாத இடைவெளியை
யாராவது
நிரப்பி விட்டார்களா
சொல்லு
நானாக சென்று விடுகிறேன்
நாளைப் பொழுதில்
என்னை நகர்த்தும் வேலை கூட
உனக்கு வேண்டாமே ..

என்னென்னவோ பேசவேண்டும்
என்பதாய் இருக்கிறது மனது
இப்படிதான் பேசவேண்டும்
என்கிறதாய் இருக்கிறது
உன் நகர்வு ..

தேடுகிறேன்
என்னை தொலைத்த
இதயத்தை ..
அது
காணாமல் போய்
ஒரு சில நாட்கள்
கடந்தது தெரியாமல் ...

வாழ்க்கையோடு
போராட வலுவிருக்கிறது
உன் வார்த்தைகளோடு
போராட ...
எங்கிருந்து பெயர்க்கிறாய்
என்மீது வீச ?
கல் நெஞ்சென்று
பெயர் போன என் நெஞ்சே
பிளந்து கிடக்கிறதே ...

ஆரம்பம் முதல்
இந்த நிமிடம் வரை
என் தேவை
ஒன்றாகவே இருக்கிறது
" எனக்கான ஓர் இதயம்"

Wednesday, July 29, 2015

உன் காதல்..





உன் ஆண்மை எல்லாம்
அழுந்தி தீர்த்த  பின்னும்
என்னை
அணைப்பதிலே
ஆவலாக  இருகிறாய்  .....

ஆடைகள் அற்ற
மேனிகள்  மீதான
ஆசைகள்
கொஞ்சம்  அடங்கிய  பின்பும்
என் வாடையில்
வயப்பட்டுக் கொள்கிறாய் ..

திமிர்ந்த
உன் உடல் கூட்டுள்
மழை நாள் பறவையென
உன்
சில்லிட்ட நகர்வுகள்
மூட்டிய தீயினை
புசித்து ஒடுங்கி விடுகிறது
மேனி ..

காமம் கடந்த
உன் காதல் வாசனையில்
உன்மத்தம் கொண்டு
கிறங்கி உறங்கி
கிடக்கிறது கிறுக்கி  ..

Sunday, July 26, 2015

விரகம்..



விடிவிளக்கற்ற
அந்தகாரத்தின்
இருள் போர்வைக்கு
பழக்கப் பட்டிருந்தது
கண்கள் ...

அருகினில்
அயர்ந்து உறங்கியவண்ணம்
நீ ..
ஜன்னல் வழியே
முகில் கடந்து
உன் முகத்தில்
அடிக்கடி படிந்து
நகர்ந்த வண்ணம்
நிலவொளி ..

அமைதியாய்
எப்படி உன்னால்
உறங்க முடிகிறது ?
அதுவும் அருகினில் நான் ...!

மெல்லிய தென்றல்
உன் குழல்
கலைக்காது இருந்திருக்காலாம் ..
நிலவொளி
உன்னை நெருங்காது
விலகி இருக்கலாம் ..
குறைந்த பட்சம்
உன் சூடான மூசுக் காற்று
என்னை தீண்டாமல் இருந்திருக்காலம் ..

ஹ்ம்ம்ம்ம் ...
முடிவரை நீண்ட
கைகளை இறக்கி
முது காட்டி
திரும்பிக்கிடந்தேன்..

சீ வெட்கமற்ற மனம் ..
இன்னுமா
வேட்கை தீரவில்லை ..
பின் இரவுவரை
உன் பிடிகளுக்குள் தானே
அவன் பிணைந்து கிடந்தான்
 எனும் சிந்தனையை விலக்கி
முன்னிரவில்
அவன் தீண்டலில்
சிவந்த மேனியெங்கும்
விரல்களால் தடவி
விரகம் மேலோங்க
விழி திருப்பிய கணங்களுக்குள்
அவன் விழித்திருந்தான் ..

கள்ளி ..
என்னிடம் உனக்கு
என்ன தயக்கமென
போர்வை விலக்கிய கணங்களில்
விளங்கி இருந்தது ..
கள்ளா ..
நீயும்
இன்னும் கண்ணுறங்கவில்லை ...