Tuesday, December 18, 2012

ஒரு வாய்ப்பு கொடு....





அந்த மாடி பால்கனிக்கு 
அன்றுதான் வந்திருந்தாள்
 இல்லை அதற்க்கு முன் வந்திருகிறார்கள்
 இன்றுதான் தனியே ..

இரவு தன் செறிவை 
ஒவொரு பார்வையிலும் 
உணர்திகொண்டிருந்தது ...
முன்னே ஆடிய 
மகிழ மரத்தின் கிளைகளில் 
மறைவில் இருந்து 
அந்த அகால வேளையிலும் 
பாடி கொண்டிருந்தது குயில் ...
குயில் பாடுவது இன்று புதிதல்ல 
காதலால் குயில் 
கணவனை காதலனை 
நாடி பாடுவாதாக தோன்றியது அன்று 
இன்று ஏங்குவதாய் தோன்றியது ..

நிலவு நெடு நேரமாய் நகராது நின்றது 
அவள் நினைவுகளும் நகர மறுத்தது ..


எதற்காக நிலவின் காத்திருப்பு 

தன் காதலிகாகவோ ...?

நிலவே நீயும் ஒருநாள் 

எனைப்போல் நிலை குலைவாயோ ?

மணந்தவர் கைகளில் 

மழலையாக தவிப்பாயோ ...?



ஆசை அறுபது மோகம் முப்பது 
இதுதானோ ?
நம்பமறுக்கும் மனதுக்கு 
மரமாய் நீண்டு கிடக்கும் 
மன்னவனின் நடத்தை சான்று பகிர்ந்தது ...


எங்கே தவறு ...?
கை கோர்த்த நிமிடத்தில் இருந்து 
கரைந்து கிறங்கிய மனது 

கலங்கி தவிப்பது புரியாத ஜடமாய் என்று ஆனாய் நீ ...?
அள்ளி அணைத்த அத்தனை தடவையும் 
அலுக்காமல் இணைந்தவள் 
வெறும் ஆசைகளுகாய் மட்டுமல்ல 
கொண்ட அடங்காத அன்புகாகவும்தான் ...


அன்பாய் அணைத்த கைகள் 
வம்பாய் பேசிய உதடுகள் 
அரவமாய் தீண்டியதேன் ...
மரிக்க துடிக்கும் ஆசைகளுக்கு 
மரண பயத்தை கொடுத்து 
மரணத்தை தள்ளி போடுகின்றேன் ..


என்னை புரியாதவனா நீ 
என்னுள் வசிகாதவனா நீ 
என்னை சுவாசிகதவனா நீ 
என்னுள் அடங்காதவனா நீ ..
எல்லாமாய் ஆனவவன் நீ 
என்னவனே எங்கு சென்றாய் ..


தளர்ந்திடும் என் உணர்வுகளுக்கு 
உன் தழுவல்கள் வேண்டும் 
மயங்கிடும் என் மனதுக்கு 
உன் மந்தகாச புன்னகை வேண்டும் 
கசந்திடும் என் நினைவுகளை அளிக்க 
மனம் திறந்து ஒரு வாய்ப்பு கொடு 
உன் மடி சாய்ந்து ஒரு துளி நீர் சிந்த 
உரிமை கொடு ... நான் உன்னவள் அல்லவா ..?

சருகான வாழ்வு...



வெறுமை நிறைந்த 
மனச்சுவர்களில் எல்லாம் 
தன்  கொடிய நகங்களால் 
கீறிச்செல்கிறது 
உன் நினைவலைகள் ...
உதிரமாய் சிந்தும் -என் 
உணர்வுச் சிதறல்களை 
பொறுக்கி எடுத்து 
புசித்து மகிழ்கிறது என் தனிமை ....

உன்னை ,உன் நினைவுகளை சுமந்தே 
என் செறிவிழந்து சருகாய் உதிர்கிறேன் .
என்னை தாண்டி செல்லும் 
எவரும் நீயாய் இருக்க மாட்டாயா ?
தேடலில் ஆலாய் பறக்றது 
சருகாய் உதிர்ந்த மனம் ..

என்னை தீண்டும் தென்றலிலும் 
உன்னை தழுவிய விரல்களை 
தேடி அலைகிறது காதல் மனம் ...
நீ நடந்த பாதகைளில் 
சருகாய் கடந்தேன் 
வருவாய் என எண்ணி ..

என்னை கடந்து எவர் போகினும் 
உன்னை கடக்க இயலா மனது 
ஓர் சாலை ஓரத்தின் 
இரட்டை நாற்காலியில் 
ஒற்றையாய் காத்திருக்கிறது ...
ஒரு முறை 
மழையாய் என்னை அணைத்துவிடு 
என் சருகான வாழ்வும் 
உனக்காய் முடியட்டும் .